Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் பிரபலமான சினிமா ஷூட்டிங் ஸ்பாட்ஸ்!!!

இந்தியாவின் பிரபலமான சினிமா ஷூட்டிங் ஸ்பாட்ஸ்!!!

By

இந்தியாவில் எக்கச்சக்கமான சினிமா படப்பிடிப்பு தளங்கள் உள்ளன. இயற்கையும், கலாச்சாரமும், தொன்மையும் பின்னிப்பிணைந்து கிடக்கும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் எந்நேரமும் சினிமாக்காரர்களின் கூட்டம் இருந்துகொண்டே இருக்கிறது.

இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல மூலைகளிலிருந்தும் பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு வந்து படப்பிடிப்பு நடத்திச் செல்கின்றனர்.

அந்தவகையில் இந்தியாவின் மிகவும் பிரபலமான படப்பிடிப்பு தளங்களாக திகழும் இடங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

இவை மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களாகவும் திகழ்வதோடு, சினிமா ஷூட்டிங்கும் நடத்தப்படுவதால், அவற்றைக் காணும் ஆர்வத்தோடு ஆயிரக்கணக்கான பயணிகள் இவ்விடங்களுக்கு வந்து செல்கின்றனர்.

படித்துப் பாருங்கள் : டாப் கதாநாயகர்களின் பிறந்த இடங்கள்!

படித்துப் பாருங்கள் : கனவுக்கன்னிகளின் பிறந்த இடங்கள்!

பேக்கல் கோட்டை

பேக்கல் கோட்டை

பாம்பே படத்தில் அரவிந்த்சுவாமி காதலின் ஏக்கத்தில் உருகியுருகி பாடிக்கொண்டிருக்க, மனிஷா கொய்ராலா அவரைத் தேடி ஓடி வரும் காட்சியை மறக்க முடியுமா?!...அந்தப் பாடல் காட்சி படம்பிடிக்கப்பட்ட இடம்தான் பேக்கல் கோடை. கேரளாவின் மிகப்பெரிய கோட்டையாக அறியப்படும் இந்தக் கோட்டை, காசர்கோட் மாவட்டத்தில் உள்ள பேக்கல் நகரில் அமைந்துள்ளது.

பேக்கல் ஹோட்டல்கள்

படம் : Renjith Sasidharan

அதிரப்பள்ளி அருவி

அதிரப்பள்ளி அருவி

அதிரப்பள்ளி அருவியை இந்தியாவின் நம்பர் ஒன் ஷூட்டிங் ஸ்பாட் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இங்கே சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன. உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'புன்னகை மன்னன்' படத்தில் வரும் அதிர்ச்சியூட்டும் தற்கொலைக் காட்சியை யாராவது மறக்க முடியுமா? அதேபோல இராவணன் படத்தில் வரும் 'உசுரே போகுது' பாடல், பையாவின் 'அடடா மழைடா', அசோகா (இந்திப்படம்) உள்ளிட்ட எண்ணற்ற திரைப்படங்கள் இங்கே படம்பிடிக்கப்பட்டுள்ளன. அதிலும் டூயட் பாடல்கள் எடுக்கவேண்டுமென்றால் படப்பிடிப்பு குழுவினருக்கு அதிரப்பள்ளி அருவிதான் நியாபகத்துக்கு வரும்!

படம் : Iriyas

பொள்ளாச்சி

பொள்ளாச்சி

மணிரத்னம், பாலச்சந்தர், கே.பாக்யராஜ், ஷங்கர் உள்ளிட்ட தமிழ் திரைப்பட இயக்குனர்களின் எண்ணற்ற திரைப்படங்கள் பொள்ளாச்சியில் படம்பிடிக்கப்பட்டிருப்பதோடு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிறமொழி படங்களும் அதிக எண்ணிக்கையில் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி ஹோட்டல்கள்

படம் : Raghavan Prabhu

பெரியார் காட்டுயிர் சரணாலயம்

பெரியார் காட்டுயிர் சரணாலயம்

நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி திரைப்படத்தில் 'சொல்லிட்டாளே அவ காதல...' எனும் பாடல் காட்சி இந்த பெரியார் காட்டுயிர் சரணாலயத்தில்தான் படம்பிடிக்கப்பட்டது. மேலும் பெரியார் காட்டுயிர் சரணாலயம், தேக்கடி உள்ளிட்ட இடங்களில் எண்ணற்ற படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

தேக்கடி ஹோட்டல்கள்

பாங்காங் ஏரி

பாங்காங் ஏரி

2006-ஆம் ஆண்டில் "தி ஃபால்" மற்றும் 2010-ல் "3 இடியட்ஸ்" ஆகிய திரைப்படங்களில்பாங்காங்ஏரியின் அழகுக் காட்சிகள் படமாக்கிக் காட்டப்பட்டுள்ளன. இந்தத் திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்த ஏரிப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

படம் : Sidharthkochar

ஆலப்புழா

ஆலப்புழா

உயிரே படத்தில் ஷாரூக்கானும், பிரீத்தி ஜிந்தாவும் காதலில் உருகித் திளைத்த 'நெஞ்சினிலே நெஞ்சினிலே...' பாடல் ஆலப்புழாவின் படகு வீடுகளில்தான் படம்பிடிக்கப்பட்டது.

ஆலப்புழா ஹோட்டல்கள்

படம் : Ajith

போடி மெட்டு

போடி மெட்டு

'மைனா' திரைப்படம் உட்பட எண்ணற்ற தமிழ் மற்றும் பிறமொழி படங்கள் போடி மெட்டு பகுதியில் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

தேனி ஹோட்டல்கள்

படம் : Kujaal

தூத்சாகர் அருவி

தூத்சாகர் அருவி

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் சத்யராஜ் அறிமுகமாகும் சீன் இந்த அருவியின் பின்னணியில்தான் படமாக்கப்பட்டது. உலகின் மிக அழகிய அருவிகளில் ஒன்றாகவும், 310 மீட்டர் உயரத்திலிருந்து விழுவதால் இந்தியாவின் 5-வது உயரமான அருவியாகவும் கருதப்படும் தூத்சாகர் அருவி பனாஜி நகரிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் கர்நாடக-கோவா எல்லையில் அமைந்திருக்கிறது.

கோவா ஹோட்டல்கள்

படம் : Purshi

ஹில் பேலஸ்

ஹில் பேலஸ்

'சந்திரமுகி' படத்தின் ஒரிஜினலான 'மணிச்சித்திரத்தாழ்' திரைப்படத்தின் சில காட்சிகள் ஹில் பேலஸில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. 1865-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஹில் பேலஸ், கொச்சிக்கு அருகிலுள்ள திருப்புணித்துறா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் மான் பண்ணை, தொல்லியல் அருங்காட்சியகம், சிறுவர் பூங்கா என மொத்தம் 49 கட்டிடங்கள் உள்ளன. கேரள மாநில தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த வளாகம் அதன் பாரம்பரிய அழகு கெடாமல், மெருகுடன் அருங்காட்சியகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கொச்சி ஹோட்டல்கள்

படம் : Gokulvarmank

மூணார்

மூணார்

2012-ல் ஆஸ்கார் விருதுகளை அள்ளிக் குவித்ததோடு வசூலில் உலக அளவில் அசுர சாதனை படைத்த லைப் ஆஃப் பை திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது மூணாரில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. அதாவது மூணாரில் சுப்பிரமணியன் கோயில், மவுண்ட் கார்மல் சர்ச் மற்றும் இஸ்லாமிய மசூதி மூன்றும் ஒரே மலையில் அமைந்திருக்கும் அதிசயத்தை லைப் ஆஃப் பை படத்தில் காட்டியிருப்பார்கள்.

மூணார் ஹோட்டல்கள்

படம் : Issacsam

ஹம்பி

ஹம்பி

ஆக்ஷன் மன்னன் ஜாக்கி ஜான் நம்ம கவர்ச்சி புயல் மல்லிகா ஷெராவத்துடன் இணைந்து கலக்கிய 'தி மித்' திரைப்படம் கர்நாடகாவின் சில பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகா மாநிலம் ஹம்பியில் உள்ள விருபாக்‌ஷா கோயில் இப்படத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.

ஹம்பி ஹோட்டல்கள்

படம் : Apadegal

ஆபானேரி

ஆபானேரி

பேட்மேன் பட வரிசையில் இன்செப்ஷன் புகழ் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான தி டார்க் நைட் ரைசஸ் இந்தியாவின் பல இடங்களில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் அந்த படத்தின் மிகவும் பிரபலமான ஒரு சண்டை காட்சி ஒன்று ராஜஸ்தான் ஆபானேரியில் உள்ள சாந்த் பாவ்ரி படிக்கனற்றில்தான் எடுக்கப்பட்டது.

படம் : Chetan

செங்கோட்டை

செங்கோட்டை

டெல்லி செங்கோட்டையில் 'ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின்' செங்கோட்டை, அபிஷேக் பச்சனின் 'டெல்லி-6' போன்ற திரைப்படங்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

டெல்லி ஹோட்டல்கள்

படம் : Dennis Jarvis

உதய்பூர்

உதய்பூர்

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில்தான் 1983-ஆம் ஆண்டு 'ஆக்டோபுஸி' என்ற ரோஜர் மூர் நடித்த ஜேம்ஸ் பாண்ட் படம் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் லேக் பேலஸ், ஜக் மந்திர் மற்றும் மன்சூன் பேலஸில் படம்பிடிக்கப்பட்டன. அதோடு ஷிவ் நிவாஸ் பேலஸ் என்ற ஹோட்டலில்தான் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் தங்கியிருந்தார். மேலும் உதய்பூரின் மயக்கும் அழகின் பின்னணியில் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் விறுவிறுப்பான சண்டை காட்சிகள் படம்பிடிக்கப்பட்ட விதம் அற்புதம்.

உதய்பூர் ஹோட்டல்கள்

படம் : Flicka

மணப்பாடு கடற்கரை, தூத்துக்குடி

மணப்பாடு கடற்கரை, தூத்துக்குடி

தனுஷ் நடித்து வெளியான மரியான் பட சூப்பர் ஹிட் பாடல் 'சோனாபரியா' இந்தக் கடற்கரையில்தான் படம்பிடிக்கப்பட்டது. இந்த மணப்பாடு கடற்கரை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்படி கிரமமான மணப்பாடில் அமைந்துள்ளது.

படம் : Ramkumar

மும்பை

மும்பை

எல்லா புகழையும் இறைவனுக்கு கொடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியாவின் ஆஸ்கார் கனவை எட்டிபிடித்த படம் ஸ்லம்டாக் மில்லினியர். இந்த திரைப்படம் மும்பையின் பல்வேறு பகுதிகளில் படம்பிடிகப்பட்டது. அதிலும் குறிப்பாக ஜுஹூ குடிசை பகுதிகள் படம்பிடிக்கப்பட்டிருக்கும் விதம் மிகவும் சிறப்பானது.

மும்பை ஹோட்டல்கள்

மதுரை

மதுரை

சமீப காலமாக எண்ணற்ற தமிழ் திரைப்படங்கள் மதுரையில் படம்பிடிக்கப்பட்டு வருகின்றன. தனுஷ் நடித்து தேசிய விருது பெற்ற 'ஆடுகளம்', விஜய்யின் 'கில்லி', 'காதல்', 'வெயில்' உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் மதுரை மாநகரின் அழகு படம்பிடித்து காட்டப்பட்டுள்ளன.

மதுரை ஹோட்டல்கள்

படம் : Surajram

ஒகேனக்கல் அருவி

ஒகேனக்கல் அருவி

ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பிய 'சின்ன சின்ன ஆசை' பாடல் ஒகேனக்கல் அருவியில்தான் படம்பிடிக்கப்பட்டது. மேலும் 'மூங்கில் காடுகளே' (சாமுராய்), 'மழையே மழையே' (ரிதம்) உள்ளிட்ட எண்ணற்ற பாடல்கள் ஒகேனக்கல் அருவியில் படமாக்கப்பட்டுள்ளன.

மஹேஷ்வர்

மஹேஷ்வர்

'தல' அஜித்குமார் நடிப்பில் வெளியான ஆரம்பம் திரைப்படத்தில் வரும் 'அடடா ஆரம்பமே...' பாடல் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள மஹேஷ்வர் நகரில்தான் படம்பிடிக்கப்பட்டது. அதேபோல் அலைபாயுதே திரைப்படத்தில் வரும் சூப்பர் ஹிட் பாடலான 'ஸ்நேகிதனே ஸ்நேகிதனே...' பாடல் மஹேஷ்வர் நகரில் உள்ள அஹல்யாபாய் கோட்டையில் படமாக்கப்பட்டுள்ளது.

படம் : Arian Zwegers

சென்னக்கேசவா கோயில்

சென்னக்கேசவா கோயில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தளபதி' படத்தில் வரும் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' என்ற பாடல், கர்நாடக மாநிலம் பேலூரில் உள்ள சென்னக்கேசவா கோயிலில்தான் படம்பிடிக்கப்பட்டது.

படம் : Ashok Prabhakaran

ஊட்டி

ஊட்டி

மலைகளின் ராணியான ஊட்டியை சினிமாக்காரர்கள் விட்டுவைப்பார்களா?! ஊட்டியில் அபியும் நானும், அது ஒரு கனாக்காலம், அன்பே வா, பர்ஃபி, தெய்வத்திருமகள், கீதாஞ்சலி, ஜூலி கணபதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

ஊட்டி ஹோட்டல்கள்

படம் : L.vivian.richard

குணா குகை

குணா குகை

கமல்ஹாசனின் குணா திரைப்படம் இங்கு படம்பிடிக்கப்பட்டதிலிருந்து குணா குகையென்றே இது பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்த குகை கொடைக்கானலில் உள்ள தூண் பாறையில், இரண்டு பாறைகளுக்கு இடையே அமைந்துள்ளது.

கொடைக்கானல் ஹோட்டல்கள்

படம் : Parvathisri

செயின்ட் மேரிஸ் சர்ச், புளிங்குன்னு

செயின்ட் மேரிஸ் சர்ச், புளிங்குன்னு

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷா கல்யாணம் வேண்டாமென்று கூறிச்செல்லும் காட்சி செயின்ட் மேரிஸ் சர்ச்சில்தான் படம்பிடிக்கப்பட்டது. இந்த தேவாலயம் ஆலப்புழாவில் உள்ள புளிங்குன்னு என்ற அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது.

ஆலப்புழா ஹோட்டல்கள்

படம்

தாஜ் மஹால்

தாஜ் மஹால்

காதலின் அடையாளமாக கருதப்படும் தாஜ் மஹாலில் எண்ணற்ற காதல் பாடல்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை...' (வாரணம் ஆயிரம்), 'பனி விழும் இரவு...' (மௌன ராகம்), 'ரோஜா ரோஜா...' (காதலர் தினம்), 'வெண்ணிலா வெண்ணிலா...' (இருவர்) போன்ற எக்கச்சக்கமான பாடல்களில் தாஜ் மஹாலின் அழகு படம்பிடித்து காட்டப்பட்டுள்ளன.

ஆக்ரா ஹோட்டல்கள்

50 வித்தியாசமான கோணங்களில் தாஜ் மஹால்!

கோவா

கோவா

வெங்கட்பிரபுவின் 'கோவா' திரைப்படம், தல அஜித்தின் 'பில்லா 2' உள்ளிட்ட எண்ணற்ற திரைப்படங்கள் கோவாவில் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

கோவா ஹோட்டல்கள்

படம் : Swaminathan

சிம்லா

சிம்லா

கமல்ஹாசன், எஸ்.வி.சேகர் ஆகியோர் நடித்த சிம்லா ஸ்பெஷல் திரைப்படம் சிம்லாவில் படம்பிடிக்கப்பட்டது. அதே போல எண்ணற்ற தமிழ் மற்றும் பிறமொழி படங்கள் சிம்லாவில் படமாக்கப்பட்டுள்ளன.

சிம்லா ஹோட்டல்கள்

படம் : anurag agnihotri

குலு மணாலி

குலு மணாலி

ஆர்யாவும், விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துவரும் 'புறம்போக்கு' திரைப்படத்தின் சில காட்சிகள் குலு மணாலியில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. இதைப்போலவே எண்ணற்ற திரைப்படங்களில் குலு மணாலியின் அழகு படம்பிடிக்கப்பட்டுள்ளன.

குலு ஹோட்டல்கள்

மணாலி ஹோட்டல்கள்

படம் : Nick Irvine-Fortescue

காஷ்மீர்

காஷ்மீர்

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ரோஜா' திரைப்படம் காஷ்மீரில்தான் படம்பிடிக்கப்பட்டது. ஆனால் காஷ்மீரின் அழகை முதன் முதலாக தமிழர்களுக்கு படம்பிடித்து காட்டிய பெருமை 'தேன் நிலவு' படத்தையே சேரும்.

காஷ்மீர் ஹோட்டல்கள்

படம் : Tony Gladvin George

கொல்கத்தா

கொல்கத்தா

'ஜே ஜே', 'ஆதவன்', 'மகாநதி', 'பொக்கிஷம்' உள்ளிட்ட எண்ணற்ற தமிழ் மற்றும் பிறமொழி திரைப்படங்கள் கொல்கத்தாவில் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

கொல்கத்தா ஹோட்டல்கள்

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

'கன்னத்தில் முத்தமிட்டால்', 'லிட்டில் ஜான்', 'மௌனம் பேசியதே' போன்ற தமிழ் திரைப்படங்கள் பாண்டிச்சேரியில் படம்பிடிக்கப்பட்டிருந்தாலும், ஆஸ்கார் வாங்கிய ஹாலிவுட் படமான 'லைப் ஆப்ஃ பை' திரைப்படம் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்ட பிறகுதான் பாண்டிச்சேரிக்கு ஒரு சர்வதேச ஷூட்டிங் தளம் என்ற அங்கீகாரம் கிட்டியது.

பாண்டிச்சேரி ஹோட்டல்கள்

படம் : Sankara Subramanian

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+