இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாக அறியப்படும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, சென்னைக்கு தெற்கே 30 கீ.மீ தொலைவில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது.
இங்கு 170-க்கும் மேற்பட்ட பாலுட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன வகைகள் வசித்து வருகின்றன. 1855-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த உயிரியல் பூங்கா 1500 ஏக்கர் அளவுக்கு பரந்துவிரிந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா என்று பிரபலமாக அழைக்கப்படும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, நாட்டிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காவாக திகழ்ந்து வருகிறது.
இப்படியாக பல பெருமைகளை கொண்ட அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை சுற்றிக்காட்ட நாங்க ரெடி, நீங்க ரெடியா??!!!
படித்துப் பாருங்கள் : இந்தியாவின் டாப் 20 வனவிலங்கு சரணாலயங்கள்
: வேடந்தாங்கல் - ஓயாமல் கேட்கும் சிறகுகளின் சங்கீதம்!

ஜெயலலிதாவின் புலிக்குட்டிகள்!!!
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு சென்ற ஆண்டு (2013) மார்ச் மாதத்தில் வருகை தந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 7 புலிக்குட்டிகளுக்கு பெயரிட்டார். இவற்றில் 4 வெள்ளைப்புலிக்குட்டிகளுக்கு அர்ஜுனா, ஆத்ரேயா, காவேரி, சித்ரா என்றும், மற்ற 3 வங்காளப் புலிக்குட்டிகளுக்கு நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்றும் பெயர் வைத்தார். இந்த 7 குட்டிகளில் சித்ரா என்ற பெண் வெள்ளைப்புலிக்குட்டி கடந்த அக்டோபர் மாதம் இறந்துபோயிற்று. எனினும் ஆரோக்கியமாக உள்ள மற்ற 3 வெள்ளைப்புலிக்குட்டிகளுக்கு தற்போது 1 வயது ஆகிறது!

வெள்ளைப்புலிகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவின் முக்கிய ஈர்ப்பாக வெள்ளைப்புலிகள் அறியப்படுகின்றன. இங்கு வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெள்ளைப்புலிகளை காணும் ஆர்வத்திலேயே வந்து செல்கின்றனர். அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றான வெள்ளைப்புலிகளை பாதுகாத்து வரும் இந்தியாவின் ஒரு சில விலங்கியல் பூங்காக்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா முக்கியமானது.

விளையாடும் யானைகள்
வண்டலூர் பூங்கா வரும் பயணிகளுக்கு இதுபோன்ற காட்சி வெகு அரிதாகத்தான் காணக்கிடைக்கும்.
படம் : Sriram Jagannathan

சிறுத்தையும், கருஞ்சிறுத்தையும்!!!
சிறுத்தையும், கருஞ்சிறுத்தையும் ஒன்றாக அமர்ந்திருக்கும் அரிய காட்சி.
படம் : VasuVR

வெள்ளைக் கடற்கழுகு
விலங்கியல் பூங்கா வரும் பயணிகளின் கவனத்தை ஈர்த்தவாறு கம்பீரமாக அமர்ந்திருக்கும் வெள்ளைக் கடற்கழுகு.
படம் : Sunil Soundarapandian

நீர் யானை
நீரில் இருக்கும்போது பலமுடன் காணப்படும் நீர் யானை, நீருக்கு வெளியில் சோர்வாக காணப்படுகிறது.
படம் : Pranav Hundekari

சாம்பார் மான்
ஓய்வெடுக்கும் சாம்பார் மான் மீது ஓய்வெடுக்கும் காக்கை!!!
படம் : Sridharan Chakravarthy

பஃபூன் குரங்கு
ஜம்மென்று அமர்ந்திருக்கும் பஃபூன் குரங்கு.
படம் : cprogrammer

செங்கழுத்து ஆமை
வண்டலூர் உயிரியல் பூங்காவில் காணப்படும் அரியவகை பிராணிகளில் செங்கழுத்து ஆமையும் ஒன்று.
படம் : Vincent Paul S

குறைக்கும் மான்கள்
நாயைப் போன்று குரைத்து ஒலியெழுப்பும் குறைக்கும் மான்கள்.
படம் : Vinc3PaulS

கருப்பு லங்கூர்
மரத்தின் மீது அமர்ந்து ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் கருப்பு லங்கூர் குரங்கு.
படம் : Vincent Paul S

வரிக்குதிரை
குழந்தைகளின் ஃபேவரைட் விலங்கு என்றால் ஜீப்ரா என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த வரிக்குதிரைதான்.
படம் : Nagesh Jayaraman

சண்டையிடும் முதலைகள்
இந்திய சீங்கண்ணி முதலைகள் சண்டையிட்டு கொள்ளும் காட்சி.
படம் : Aravindan Shanmugasundaram

வெளிமான்
பசும்புல் தரையில் துள்ளித்திரியும் வெளிமான்.
படம் : Vinc3PaulS

கரடிக்கூட்டம்
அங்குமிங்கும் ஓடித்திரியும் கரடிகள்.
படம் : Challengethelimits

சீல்
ஆக்ரோஷமாக சீரும் சீல் எனப்படும் கடல் நாய்.
படம் : Vinc3PaulS

பைசன்
தனியாக உலாவிக்கொண்டிருக்கும் இந்தியக் காட்டெருமை.
படம் : Vasanth Mohan

பாய்ச்சலுக்கு தயார்!!!
பள்ளத்தில் பாய்வதற்கு தயாராக காத்திருக்கும் வெள்ளைப்புலி.
படம் : Vasanth Mohan

பெருநாரை
நீண்ட அலகுகளைக் கொண்ட பெருநாரை.
படம் : cprogrammer

காட்டுக்கழுதை
நின்றுகொண்டே தூங்கும் காட்டுக்கழுதை.
படம் : cprogrammer

நெருப்புக்கோழி
வண்டலூர் பூங்காவில் வசித்துவரும் நெருப்புக்கோழிகள்.
படம் : KiranSravan

விஷமற்ற பாம்புகள்
விஷமற்ற பாம்புகள்தான் என்றாலும் பார்ப்பதற்கு பயமாகத்தான் இருக்கின்றன.
படம் : Vincent Paul S

நட்சத்திர ஆமை
வண்டலூர் பூங்காவில் காணப்படும் மற்றொரு அரியவகை பிராணியான நட்சத்திர ஆமை.

யானைகளுக்கு உணவு
யானைகளுக்கு உணவளிக்கும் காட்சி.
படம் : Rnarendr

இராட்சஸ பல்லி
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வாழ்ந்துவரும் இந்த இராட்சஸ பல்லி பெரும்பாலான பயணிகளின் கவனத்தை ஈர்க்கிறது.
படம் : த*உழவன்

வெள்ளை கூழைக்கடா
குஞ்சுகளுக்குத் தன் குருதியையே ஊட்டி வளர்ப்பதாக முற்காலங்களில் கருதப்பட்ட வெள்ளை கூழைக்கடாக்கள்.
படம் : tshrinivasan

புள்ளி மான்
புள்ளிமான்கள் அல்லாத விலங்கியல் பூங்காவையே பார்க்க முடியாது!
படம் : Vinc3PaulS

நுழைவாயில்
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் நுழைவாயில் பெயர்ப்பலகையுடன் காட்சியளிக்கிறது.
படம் : Rasnaboy

எலெக்ட்ரிக் கார்
வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றிப் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் கார்.
படம் : த*உழவன்

அக்குவாரியம்
வண்டலூர் பூங்காவினுள்ளே சுறா மீன் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் அக்குவாரியம்.
படம் : த*உழவன்



Click it and Unblock the Notifications



