Search
  • Follow NativePlanet
Share
» »ஜம்மு காஷ்மீரில் இருக்கும் அற்புதமான சுற்றுலாத்தலத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

ஜம்மு காஷ்மீரில் இருக்கும் அற்புதமான சுற்றுலாத்தலத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

ஜம்மு காஷ்மீர் அடிப்படைவாதிகளின் கைகளில் சிக்கி பகடைக்காயாக இருக்கும் இந்த மாநிலம் உண்மையில் இந்தியாவில் இருக்கும் மிக மிக அழகான இடங்களில் ஒன்றாகும். இமயமலையின் சாரலில் அமைந்திருக்கும் இந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இயற்கை அழகு நம் கற்பனைக்கு அப்பாற்ப்பட்டதாக இருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் இருக்கும் அற்புதமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான குல்மார்க் என்ற இடம் குளிர் காலத்தில் சாகச விளையாட்டுகளுக்கும், கோடை காலத்தில் பசுமையான மலை வாசஸ்தலமாகவும் திகழ்கிறது. புதுமையாக ஓரிடத்திற்கு சுற்றுலா செல்லவேண்டும் என்று விரும்புகிறவர்கள் நிச்சயம் செல்ல வேண்டிய இடமான இதை பற்றிய சுவையான, சுவாரஸ்யமான தகவல்களை அறிந்துகொள்வோம் வாருங்கள்.

குல்மார்க் :

குல்மார்க் :

பூக்களின் பூமி என்று பொருள்படும் குல்மார்க் காஷ்மீர் மாநிலத்திலுள்ள பாரமுல்லா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.

ஒரு நல்ல சுற்றுலாத்தலத்துக்கு என்னென்ன அம்சங்கள் இருக்கவேண்டுமோ அவை அனைத்தையும் கொண்டிருகிறது இந்த குல்மார்க்.

Basharat Alam Shah

குல்மார்க் :

குல்மார்க் :

கோடை காலம் மற்றும் குளிர் காலம் ஆகிய இரண்டு பருவ காலங்களிலும் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கும் இந்த குல்மார்க் 'இந்தியாவின் குளிர்கால விளையாட்டுகளின் இதயப்பகுதி' என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

Isriya Paireepairit

குல்மார்க் :

குல்மார்க் :

கடல்மட்டத்தில் இருந்து 8,000 அடி உயரத்தில் குல்மார்கில் 1927ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசால் முதல்முறையாக 'ஸ்கியிங்' எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

அதன்பிறகு சுதந்திரம் பெற்ற பின்னர் பாகிஸ்தானின் அத்துமீறிய ஆக்கிரமிப்பு, அதனை தொடர்ந்து நடந்துவந்த சண்டை போன்றவற்றால் பதட்டம் நிறைத்த பகுதியாகவே இருந்துவந்திருக்கிறது.

batschmidt

குல்மார்க் :

குல்மார்க் :

ஒருவழியாக 1970களின் துவக்கத்திலிருந்து ஸ்கியிங் விளையாட்டு இன்றுவரை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. ஸ்கியிங் விளையாட்டு மட்டுமில்லாமல் சேர் லிப்ட்,கேபிள் கார் போன்ற சுற்றுலா அம்சங்களும் குல்மார்கில் இருக்கின்றன.

Vineet Radhakrishnan

குல்மார்க் :

குல்மார்க் :

குல்மார்கில் இருக்கும் கோண்டோலா தான் உலகில் கேபிள் கார் போக்குவரத்து நடைபெறும் மிக உயரமான இடமாகும். கோண்டாலாவில் இருந்து நான்கு கி.மீ தொலைவில் இருக்கும் அபர்வத் மலை என்ற இடம் வரை கடல்மட்டத்தில் இருந்து 4,200 உயரத்தில் கேபிள் கார் போக்குவரத்து நடக்கிறது.

குல்மார்க் :

குல்மார்க் :

இந்தியாவில் குளிர்காலம் நிலவும் டிசம்பர்- ஜனவரி மாதங்களில் பனியால் மூடப்பட்டிருக்கும் மலைச்சரிவுகளில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட இந்தியர்கள் மட்டுமில்லாமல் ஏராளமான வெளிநாட்டவரும் வருகை தருகின்றனர்.

குல்மார்கில் இருக்கும் அபர்வத் என்ற மலையில் இந்த ஸ்கியிங் விளையாட்டு நடத்தப்படுகிறது.

batschmidt

குல்மார்க் :

குல்மார்க் :

சாகச விளையாட்டுகளில் எல்லாம் ஆர்வம் இல்லை. பசுமையான இயற்கையை ரசிப்பது தான் பிடிக்கும் என நினைப்பவர்கள் கோடை காலமான ஏப்ரல் முதல் ஜூன் வரை இந்த குல்மார்கிற்கு சென்று அங்கிருக்கும் மாசுபடாத இயற்கை அழகை ரசித்து மகிழலாம்.

Basharat Alam Shah

குல்மார்க் :

குல்மார்க் :

கோடைகாலத்தில் குல்மார்கில் பலவண்ண மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. அதோடு இங்கு சுற்றியுள்ள மலைகளில் டிரெக்கிங் பயணமும் போகலாம்.

குளிர்காலத்தை விட கோடை காலத்தில் குல்மார்கில் கேபிள் காரில் பயணம் செய்யும் போது இதன் மொத்த அழகையும் கண்டு மகிழலாம்.

sandeepachetan.com travel

குல்மார்க் :

குல்மார்க் :

குல்மார்கில் இருக்கும் சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இது முன்னொரு காலத்தில் காஷ்மீரை ஆண்ட டோக்ரா மன்னர்களின் ராஜ கோயிலாக திகழ்ந்திருக்கிறது.

draskd

குல்மார்க் :

குல்மார்க் :

குல்மார்கில் பூத்துக்குலுங்கும் மலர்.

Soumyadeep Paul

குல்மார்க் :

குல்மார்க் :

எங்கெங்குகாணினும் பசுமையால் நிறைந்திருக்கும் குல்மார்க்.

draskd

குல்மார்க் :

குல்மார்க் :

அபாயகரமான வளைவும், அற்புதமான இயற்கை அழகும்.

Basharat Alam Shah

குல்மார்க் :

குல்மார்க் :

அற்புதமான இந்த குல்மார்கை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களையும், அந்த இடத்தை எப்படி சென்றடைவது என்பது போன்ற விவரங்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Basharat Alam Shah

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+