Search
  • Follow NativePlanet
Share
» »டிக்கெட்டை ரத்து செய்யாமல் இலவசமாக போர்டிங் ஸ்டேஷனை மாற்றலாம் என்று உங்களுக்கு தெரியுமா?

டிக்கெட்டை ரத்து செய்யாமல் இலவசமாக போர்டிங் ஸ்டேஷனை மாற்றலாம் என்று உங்களுக்கு தெரியுமா?

உங்கள் ரயில் டிக்கெட்டை ரத்து செய்யாமலே பல வித மேம்பாடுகளை நீங்கள் செய்து கொள்ளலாம் என்று உங்களுக்கு தெரியுமா? இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) வசதியான பயண அனுபவத்தை பயணிகளுக்கு வழங்கும் வகையில் அவ்வப்போது மேம்பட்ட வசதிகளையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. நீங்கள் ஒரு இடத்தில் போர்டிங் செய்ய டிக்கெட் எடுத்தாலும் கூட, இலவசமாக நீங்கள் உங்களது போர்டிங் பாயிண்டை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. எப்படி போர்டிங் பாயிண்டை மாற்றுவது என்பது குறித்து கீழே பார்ப்போம்!

இலவசமாக போர்டிங் ஸ்டேஷனை மாற்றலாம்

சரியான நேரத்தில் ரயிலில் ஏறுவதற்கு முன்பு, உங்கள் ஏறும் நிலையத்தை மாற்றுவது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இந்திய ரயில்வேயில் உள்ள வசதிகள் பலவும் நம்மில் பலருக்கும் தெரிவது இல்லை. அவற்றில் ஒன்று தான் போர்டிங் ஸ்டேஷனை மாற்றுவது, இதில் பயணிகள் ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே தங்கள் ஏறும் நிலையத்தை மாற்றலாம் மற்றும் நிர்வகிக்கலாம். முந்தைய விதிகளின்படி, பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே தங்கள் ஏறும் நிலையங்களை மாற்றலாம்.

Train Ticket

டிக்கெட் வீணாகி விடுமோ என்ற கவலை வேண்டாம்

நாம் ஒரு இடத்தில் ரயிலில் ஏறுவதற்கு டிக்கெட் புக் செய்து இருப்போம். ஆனால் அவசர சூழ்நிலைகள் காரணமாக வேறு இடங்களுக்கு சென்று விட்டால், புக் செய்த அதே இடத்தில் இருந்து ரயிலைப் பிடிக்க முடியாமல் போய்விடும். இதனால் டிக்கெட் கட்டணம் வீணாவதோடு, போய் சேர வேண்டிய இடத்தையும் நாம் அடைய முடியாமல் போய்விடுகிறது. ஆனால் இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவுடன் பயணிகள் ஏறும் இடத்தை மாற்ற அனுமதிக்கிறது. இதன் மூலம் நீங்கள் உங்களது போர்டிங் பாயிண்டை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

இலவசமாக போர்டிங் ஸ்டேஷனை மாற்றிக் கொள்ளலாம்

பயணிகளின் வசதிக்காகவும் எளிமைக்காகவும் இந்திய ரயில்வே IRCTC டிக்கெட் முறையில் மாற்றங்களைச் செய்துள்ளது. புதிய அம்சம் என்னவென்றால், பயணிகள் ஏறும் நிலையத்தை ஒன்றுக்கு மேற்பட்ட முறை மாற்றலாம். ஏறும் நிலையத்தை மாற்ற, பயணிகள் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை என்பது சுவாரஸ்யமானது, ஆனால் 24 மணி நேரத்திற்குள் மாற்றம் செய்யப்பட்டிருந்தால், டிக்கெட்டிற்கான பணத்தைத் திரும்பப் பெற முடியாது.

Train Ticket

போர்டிங் ஸ்டேஷனை எப்படி மாற்றுவது

1. முதலில் நீங்கள் IRCTC அதிகாரப்பூர்வ வலைத்தளமான irctc.co.in ஐப் பார்வையிட வேண்டும்

2. முகப்புப் பக்கத்தில், உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும்

3. பின்னர் அடுத்த பக்கத்தில், எனது கணக்கு > எனது பரிவர்த்தனைகள் > முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வரலாறு என்பதற்குச் செல்லவும்

4. இந்தப் பக்கத்தில், நீங்கள் போர்டிங் ஸ்டேஷனை மாற்ற விரும்பும் டிக்கெட்டைத் தேர்ந்தெடுத்து, 'போர்டிங் பாயிண்டை மாற்று' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

5. தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் பாதைக்கு இடையே உள்ள நிலையங்களின் பட்டியலுடன் ஒரு புதிய சாளரம் தோன்றும். உங்களுக்கு விருப்பமான போர்டிங் பாயிண்டைத் தேர்வுசெய்யவும்

6. புதிய பக்கத்தில், நிலைய அமைப்பு உறுதிப்படுத்தலைக் கேட்கும், உங்கள் டிக்கெட்டின் போர்டிங் பாயிண்டை மாற்ற 'சரி' என்பதைக் கிளிக் செய்யவும்

7. பின்னர் போர்டிங் ஸ்டேஷன் வெற்றிகரமாக மாற்றப்பட்டால் ஒரு எச்சரிக்கை செய்தி தோன்றும்

8. முன்பதிவு செய்யும் போது வழங்கப்படும் உங்கள் மொபைல் எண்ணுக்கு புதுப்பிக்கப்பட்ட போர்டிங் பாயிண்ட் தொடர்பான மற்றொரு செய்தி அனுப்பப்படும்.

அவ்வளவு தான், உங்களது போர்டிங் பாயின்ட் மாற்றம் செய்தாகிவிட்டது!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+