இன்று, பலர் உடல்நலத்தை மேம்படுத்துவதற்காகவும், சுவாரஸ்ய த்ரில்லிங் சாகசங்களுக்காகவும் டிரெக்கிங் செல்ல விரும்புகிறார்கள். இயற்கையின் மடியில் பயணிக்க வேண்டும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றால், ட்ரெக்கிங் ஒரு சிறந்த தேர்வு. ஆனால், நீண்ட தூரம் பயணிக்கும் போது உங்கள் உடல்நிலை பாதிக்காமல் இருக்க சரியான முன்னேற்பாடுகள் அவசியம். உங்கள் ட்ரெக்கிங் அனுபவத்தை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்ற, நிபுணர்கள் வழங்கும் இந்த அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமான ட்ரெக்கிங் செல்ல கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

ஆரோக்கிய ட்ரெக்கிங் செல்ல கடைபிடிக்க வேண்டியவை :
1. உடல்நிலையை தயார் செய்யுங்கள் :
ட்ரெக்கிங் என்பது ஓர் உடற்பயிற்சி. அதனால், நீங்கள் திடீரென அதிக தூர பயணம் செய்ய தொடங்கினால், உடல் அதை தாங்க முடியாது. எனவே, ட்ரெக்கிங் செல்வதற்கு முன்பாக கீழ்க்கண்டவற்றை செய்யுங்கள்:
- தினசரி நடைபயிற்சிகுறைந்தது 30-45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள்.
- ஏற்றமுள்ள உடற்பயிற்சிகள், கால்கள், முழங்கால், முதுகு மற்றும் உடல் வலுவை அதிகரிக்கும் உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள்.
- மூச்சுப் பயிற்சி, மலையெல்லாம் நடக்கும் போது மூச்சு சீராக இருக்க வேண்டும். அதன் காரணமாக, பிராணாயாமா மற்றும் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகள் உதவும்.
2. நீர் போதுமான அளவு குடியுங்கள் :
ட்ரெக்கிங் செய்யும்போது உங்கள் உடல் அதிக கழிவுப் பொருட்களை வெளியேற்றும். இதை சமநிலைப்படுத்த தேவையான நீர்மம் குறைவாக இருந்தால், சோர்வு, தசை வலி, மற்றும் டிஹைட்ரேஷன் ஏற்படலாம்.மிகுந்த சுத்தமான நீர் எடுத்து செல்லுங்கள். ஒரு நாளுக்கு குறைந்தது 2-3 லிட்டர் நீர் பராமரிக்க வேண்டும். எலக்ட்ரோலைட் சேர்க்கவும் நீர்மத்தை அதிகரிக்க எலக்ட்ரோலைட் பவுடர் அல்லது சிறிதளவு உப்பு, சர்க்கரை கலந்த நீர் குடிக்கலாம். தண்ணீரை ஒழுங்காக பருகுங்கள், உடல்நிலை பாதிக்காமல் இருக்க, அடிக்கடி சிறிய அளவு நீர் பருகுவது நல்லது.
3. ட்ரெக்கிங்கிற்கு ஏற்ற உணவுகளை தேர்வு செய்யுங்கள் :
- உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்க, நீண்ட தூர பயணத்தில் சரியான உணவுகளை எடுத்துச் செல்ல வேண்டும். சத்து மிகுந்த உணவுகள், பழங்கள் ( வாழைப்பழம், ஆப்பிள்), உலர் பழங்கள் (முந்திரி, பாதாம்), புரத உணவுகள் (பொரிகடலை, பருப்பு) போன்றவை மிகவும் நல்லது.
- சுலபமாக சாப்பிடக்கூடிய உணவுகள, எளிதாக செரிக்கும் உணவுகளை எடுத்துச் செல்லுங்கள். சாண்ட்விச், கோதுமை ரொட்டி, வேர்க்கடலை பட்டர் போன்றவை பயணத்திற்கேற்றது.
- நீண்ட நேரம் பசிக்காமல் இருக்க, சிறிய இடைவெளியில் சிறிய அளவு உணவுகளை சாப்பிடுங்கள்.
4. சரியான உடை மற்றும் காலணிகளை அணியுங்கள் :
- தவறான ஆடைகளும் காலணிகளும் ட்ரெக்கிங் அனுபவத்தை மோசமாக்கிவிடும். காலநிலைக்கு ஏற்ப ஆடைகள், மலைப் பகுதிகளில் அதிக குளிர் இருக்கும். அடுக்கடுக்காக ஆடைகள் அணிவது நல்லது.
- வலுவான ஷூஸ் , மலையேறி செல்லும்போது தடுமாறாமல் இருக்க சிறந்த கிரிப் உள்ள ஷூ அணியுங்கள்.
- தலைக்கவசம் மற்றும் கைகளை பாதுகாக்க கையுறைகள், குளிர் பகுதியில் ட்ரெக்கிங் செய்தால், குளிரை சமாளிக்க இதை பயன்படுத்தலாம்.
5. போதுமான தூக்கம் அவசியம் :
- ட்ரெக்கிங்கிற்கு செல்லும் முன்பும், பயணத்தின்போதும் சரியான தூக்கம் பெறுவது மிகவும் அவசியம்.
- குறைந்தது 7-8 மணி நேரம் உறங்குங்கள், தூக்கமில்லாமல் ட்ரெக்கிங் செய்தால், உடல் தளர்ந்து போய் சோர்வாகி விடும்.
- கூடுதல் உறக்கம் பெற முயற்சிக்க வேண்டாம் . அதிகமாக உறங்கினால், நீங்கள் நன்கு செயல்பட முடியாது.
6. பாதுகாப்பு உபகரணங்கள் :
சில முக்கியமான பொருட்களை எடுத்துச் செல்லுவது பயணத்தை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் மாற்றும்.
- முதல் உதவி பெட்டி, சிறிய காயங்களுக்கான பாண்டேஜ், ப்லாஸ்டர், கிரீம் போன்றவை அவசியம்.
- சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க, கண் கண்ணாடி, லோஷன் போன்றவை தேவைப்படும்.
- கேம்பிங் பொருட்கள், நீண்ட ட்ரெக்கிங் பயணங்களுக்காக டென்ட், தூக்குப்பாய் போன்றவை கொண்டு செல்லலாம்.
7. மெதுவாக நகருங்கள்:
ட்ரெக்கிங் என்பது உடல்நலத்தை மேம்படுத்த ஒரு வாய்ப்பு. அதனால், துரிதமாக செல்ல முயற்சிக்காதீர்கள். தொடர்ந்து அதிக தூரமோ அல்லது வேகமாகவோ நடக்காதீர்கள். உடலுக்கு ஓய்வளிக்க, குறைந்தது 15-20 நிமிடங்களுக்கு ஓய்வு எடுங்கள். திடீரென்று ஓய்வெடுக்க வேண்டாம்,மெதுவாக நடப்பதும், ஒழுங்காக மூச்சை எடுப்பதும் மிகவும் முக்கியம்.
ட்ரெக்கிங் போன்ற பயணங்களை ஆரோக்கியமான முறையில் மேற்கொள்வதற்கு மேலே குறிப்பிட்ட நிபுணர் அறிவுரைகளை பின்பற்றுங்கள். உடல்நலத்தையும், மனநலத்தையும் பாதுகாத்து, இயற்கையுடன் இணைந்து ஒரு அருமையான அனுபவத்தைப் பெறுங்கள்!



Click it and Unblock the Notifications



