• Follow NativePlanet
Share
» »என்னங்க இல்ல நம்ம நாட்டுல – எவ்வளவு அதியசங்கள் என்று நீங்களே பாருங்களேன்!

என்னங்க இல்ல நம்ம நாட்டுல – எவ்வளவு அதியசங்கள் என்று நீங்களே பாருங்களேன்!

இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடாக பல வகையான சுற்றுலாத் தலங்களுக்கும் தாயகமாக இருக்கிறது. நாம் தான் இது நம்ம ஊர் என்பதினாலே என்னவோ, பெரிதாக மதிக்காமல் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதில் அதிக கவனம் செலுத்துகிறோம்!

பனி மூடிய சிகரங்கள் துவங்கி, வெள்ளி போன்று சலசலவென ஓடும் ஆறுகள், வயதை குறைக்க வைக்கும் சாகச சுற்றுலாத் தலங்கள், காலம் கடந்து நிற்கும் கோட்டைகள், புராதன கோயில்கள் என இந்தியாவில் இருக்கும் வேறுபாடு நிறைந்த சுற்றுலாத் தலங்கள் எண்ணற்ற வெளிநாட்டவரை இந்தியா நோக்கி வரவழைக்கிறது!

ஆனால் இதன் அருமை இந்தியர்களில் பலருக்கும் கூட தெரிவது இல்லை! அந்த வகையில், இந்தியாவில் இருக்கும் வேறுபாடு நிறைந்த சுற்றுலாத் தலங்கள் என்னென்ன என்று பார்ப்போம் வாருங்கள்!

Travel

கலாச்சார மற்றும் வரலாற்று சுற்றுலாத் தலங்கள்

இந்தியா கலாச்சார மற்றும் வரலாற்று தளங்களின் புதையல் ஆகும், ஒவ்வொன்றும் அதன் வளமான பாரம்பரியத்தையும் பல்வேறு மரபுகளையும் பிரதிபலிக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தலங்கள் யாவும் இந்தியாவின் மகத்தான வரலாறு, கட்டிடக்கலை புத்திசாலித்தனம் மற்றும் கலாச்சார செழுமைக்கு ஒரு சாளரத்தை வழங்குகின்றன, இது எந்தவொரு பயணியும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாக அமைகிறது.

· தாஜ்மஹால்

· ஜெய்ப்பூர்

· கஜுராஹோ

· அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள்

· ஹம்பி

· மைசூர் அரண்மனை

· ராணி கி வாவ்

· பதேபூர் சிக்ரி

Travel

வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகள்

நீங்கள் வரலாற்று கட்டிடக்கலையின் ரசிகராகவும், கடந்த காலத்தை ஆராய்வதில் விருப்பமுள்ளவராகவும் இருந்தால், இந்தியாவின் அற்புதமான கோட்டைகள் உங்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியா முழுவதிலும் உள்ள வலிமைமிக்க கோட்டைகள் பல்வேறு வரலாற்று காலங்களின் பயணத்தின் மூலம் உங்களை பின்னோக்கி அழைத்துச் செல்லும்.

· உமைத் பவன்

· காங்க்ரா கோட்டை

· ஆம்பர் கோட்டை

· சித்தகோர் கோட்டை

· மெஹ்ரங்கர் கோட்டை

· ஜெய்சால்மர் கோட்டை

· ஜான்சி கோட்டை

· குவாலியர் கோட்டை

· கோல்கொண்டா கோட்டை

· சிந்துகர் கோட்டை

· ஆக்ரா கோட்டை

Travel

கலாச்சாரம் ததும்பிய கோவில்கள்

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தாலும், பல நூறு ஆண்டுகளாக, பல வம்சங்களைச் சேர்ந்த இந்து ஆட்சியாளர்கள் நாட்டின் குடிமக்களின் வாழ்க்கையில் தங்கள் இருப்பை விட்டுச் செல்ல கோவில்களைக் கட்டியுள்ளனர். பழங்காலத்தில் கோவில்கள் மக்கள் கூடும் சமூக மையங்களாக இருந்தன. இன்று, இந்தக் கோயில்கள் நமது கடந்த காலத்தையும், அன்றைய கைவினைஞர்களின் கட்டிடக்கலைப் புத்திசாலித்தனத்தையும் நமக்கு நினைவூட்டுகின்றன.

· தஞ்சை பெரிய கோவில்

· எல்லோரா கைலாசநாதர் கோவில்

· குஜராத் சோம்நாத் ஆலயம்

· அமிர்தசரஸ் பொற்கோவில்

· ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில்

· மதுரை மீனாட்சி கோவில்

· கர்நாடகாவின் சென்னகேஷவா கோவில்

· மகாபலிபுரம் கடற்கரை கோவில்

· கோனார்க் சூரியனார் கோவில்

Travel

வனவிலங்கு பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள்

இந்தியாவில் தனித்துவமான அனுபவங்களை வழங்கும் மற்றும் நாட்டின் வளமான பல்லுயிர் பெருக்கத்தை வெளிப்படுத்தும் ஏராளமான வனவிலங்கு பூங்காக்கள் உள்ளன. அடர்ந்த காடுகள் மற்றும் பரந்த புல்வெளிகள் முதல் வறண்ட பாலைவனங்கள் மற்றும் பசுமையான ஈரநிலங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பெருமைப்படுத்துகிறது.

· ஜிம் கார்பெட் தேசிய பூங்கா

· காசிரங்கா தேசிய பூங்கா

· சுந்தரவன தேசிய பூங்கா

· ரந்தம்போர் தேசிய பூங்கா

· கிர் தேசிய பூங்கா

· பந்தவ்கர் தேசிய பூங்கா

· பெரியார் வனவிலங்கு சரணாலயம்

· கன்ஹா தேசிய பூங்கா

Travel

அழகிய மலைப்பிரதேசங்கள்

கம்பீரமான மலைகள், பசுமையான காடுகள், வசீகரமான பள்ளத்தாக்குகள், தூய்மையான காற்று, ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவை ஒன்றிணைந்து இந்தியாவில் மலைவாசஸ்தலங்களை உருவாக்குகின்றன. எப்போதுமே இயற்கை அழகை ரசிப்பது ஒரு அலாதிதான், அதன் அழகில் நனைந்தபடியே நமக்கு பல அற்புதமான போட்டோக்களும் கிடைக்கும்.

· ஸ்ரீநகர்

· பஹல்கம்

· குல்மார்க்

· மணாலி

· சிம்லா

· நைனிடால்

· தவாங்

· டார்ஜிலிங்

· கலிம்பாங்

· ஷில்லாங்

· சிரபுஞ்சி

· மஹாபலேஷ்வர்

· குடகு

· தேக்கடி

· மூணார்

· அரக்கு

· ஊட்டி

· கொடைக்கானல்

· ஏற்காடு

· லோனாவாலா

· லடாக்

· முசொரி

Travel

துடிப்பான நகரங்கள்

இந்தியாவின் பல அம்சங்கள் இன்றைய சமூகங்களில் வேரூன்றியிருக்கின்றன, குறிப்பாக இந்தியாவின் சில சிறந்த நகரங்கள் நாடு முழுவதும் இத்தகைய செல்வாக்கைக் கொண்டுள்ளன. பல இனக்குழுக்கள், கலாச்சாரங்கள், நினைவுச்சின்னங்கள், அரண்மனைகள், உப்பங்கழிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பிற கண்கவர் காட்சிகள் நம் இந்திய நகரங்களில் நிறைந்து இருக்கிறது. இந்த நகரங்களுக்கு எல்லாம் சுற்றி பார்ப்பதோடு பல போட்டோக்களையும் கிளிக் செய்யலாம். நகர வாழ்க்கையில் ஈடுப்பட்டதோடு, பல வகை உணவுகளை சுவைத்து, ஷாப்பிங் செய்து, பல வண்ண போட்டோக்களை கிளிக் செய்யலாம்.

· மும்பை

· டெல்லி

· சென்னை

· கொல்கத்தா

· பெங்களூர்

· புனே

· அகமதாபாத்

· சூரத்

· கோயம்பத்தூர்

· வதோதரா

· ஹைதிராபாத்

· உதய்பூர்

· ஜெய்ப்பூர்

· கொச்சி

· டேராடூன்

· திருவனந்தபுரம்

· லக்னோ

· விசாகபட்டினம்

· பாண்டிச்சேரி

Travel

கண்கவர் கடற்கரைகளும் ஏரிகளும்

பிரகாசமான சூரியன், தென்றல் காற்று, தெளிவான வானம், மற்றும் அலைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்தியாவில் பல அழகான கடற்கரைகளை உருவாக்குகின்றன. அதே போல பனிமூடிய சிகரங்களுக்கு நடுவிலேயும், பசுமையான பள்ளத்தாக்குகளுக்கு இடையேயும், அழகான நிலபரப்புகளிலும் நாட்டில் பல அழகிய ஏரிகள் நிறைந்துள்ளன.

· ராதாநகர் பீச்

· தர்கர்லி பீச்

· ஜுஹு பீச்

· லட்சத்தீவு கடற்கரைகள்

· கோகர்ணா பீச்

· மரினா பீச்

· கோவாவின் பல கடற்கரைகள்

· கோவளம் பீச்

· பூரி பீச்

அழகிய ஏரிகள்

· பாங்கோங் த்சோ

· தார்சார் ஏரி

· மனஸ்பால் ஏரி

· டம்டமா ஏரி

· சூரஜ் தால் ஏரி

· பீம்டல் ஏரி

· குருடோங்மர் ஏரி

· லோக்டக் ஏரி

· சிலிகா ஏரி

· பிச்சோலா ஏரி

· ஊட்டி ஏரி

· வேம்பநாடு ஏரி

இத்தனை விதமான சுற்றுலாத் தலங்கள் இந்தியாவை அலங்கரிக்கும் போது நாம் ஏன் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும்? யோசியுங்கள்!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+