Search
  • Follow NativePlanet
Share
» »இனி பாலிக்கு சென்றால் 1 இல்லை 10 வருடங்கள் கூட தங்கலாம் – வந்துவிட்டது புது விசா!

இனி பாலிக்கு சென்றால் 1 இல்லை 10 வருடங்கள் கூட தங்கலாம் – வந்துவிட்டது புது விசா!

தெற்கு ஆசிய நாடுகளில் மிகவும் பிரபலமான சுற்றுலா நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒரு அற்புதமான விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் இந்தோனேசியாவை சுற்றிப் பார்க்க லட்சக்கணக்கில் மக்கள் வருகை தருகின்றனர்.

coverpicture

கடற்கரைகள், அடர்ந்தக் காடுகள், உலகப் புகழ்பெற்ற ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகளுக்கு பெயர் பெற்ற பல்லாயிரக்கணக்கான வெப்பமண்டல தீவுகள் அடங்கிய அழகிய இந்தோனேசியா புதுமண தம்பதிகள், இளைஞர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களுக்கான ஒரு சரியான சுற்றுலாத் தலமாகும்.

indonesiaintroduces10yearsbalivisa1

அதுவும் குறிப்பாக உலகளவில் பிரபலமான தேனிலவு தலைநகரான பாலியில் தங்குவதற்கு லட்சக்கணக்கான புதுமண தம்பதிகள் ஆண்டுதோறும் இந்தோனேசியாவிற்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் இந்தோனேசிய அரசு செல்வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு பாலியில் தங்குவதற்கான விசாவை 10 ஆண்டுகளாக நீட்டிக்கக முடிவு செய்துள்ளது. இந்த உற்சாகமான தகவல் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளிடம் மிகுந்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

indonesiaintroduces10yearsbalivisa2

கண்ணைக் கவரும் கடற்கரைகள், அழகிய ரைஸ் டெரஸ்கள், பெரிய பெரிய கோவில்கள், பழங்கால கட்டமைப்புகள், உலகின் சிறந்த பவளப்பாறைகள், நீர்வீழ்ச்சிகள், வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் என பாலி சுற்றுலாப் பயணிகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை வாரி வழங்குகிறது. பாலியில் எங்கு பார்த்தாலும் புதுமண தம்பதிகளே காணுவார்கள். ஏனென்றால் பாலியின் ரம்மியமான அழகில் தம்மை தொலைத்து, மனது விட்டு பேசி, ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ள ஒரு வாய்ப்பை கொடுப்பதால், இது உலகளவில் தேனிலவு சுற்றுலாவிற்காக பிரபலமாக உள்ளது.

indonesiaintroduces10yearsbalivisa3

பாலியில் நீண்ட வருடங்கள் அதாவது ஐந்து அல்லது பத்து வருடங்கள் தங்கி இருக்க இப்போது இந்தோனேசிய அரசு முடிவ்வு செய்துள்ளது. அதன்படி, பயணிகள் அவர்களது வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ. 1,06,17,192 வைப்புதொகையாக வைத்திருக்க வேண்டும். அதிக நிகர மதிப்புள்ள நபர்கள், அதிக திறன் வாய்ந்த தொழிலாளர்கள், இந்தோனேசிய புலம்பெயர்ந்தோர் மற்றும் வயதான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த விசாவைப் பெற விண்ணப்பிக்கலாம். 'செகன்ட் ஹோம்' என்றழைக்கப்படும் இந்த விசாவை visa-online.imigration.go.id என்ற இணையத்தளத்தில் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.

இந்த விசாவைப் பெற்று அங்கே சில வருடங்கள் வாழ வேண்டும் என்று தோன்றுகிறதா? இப்போதே அந்த இணையத்தளத்தை க்ளிக் செய்து மீதி தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!

More News

    Read more about: bali visa for 10 years
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+