Search
  • Follow NativePlanet
Share
» »ஜஷ்பூர் அட்டாகாச மலைகளும் அழகு நீர்வீழ்ச்சிகளும்!

ஜஷ்பூர் அட்டாகாச மலைகளும் அழகு நீர்வீழ்ச்சிகளும்!

ஜஷ்பூர் அட்டாகாச மலைகளும் அழகு நீர்வீழ்ச்சிகளும்!

மலைப்பாங்கான பூமியையும் பசுமையான காடுகளையும் உள்ளடக்கிய ஜஷ்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இங்குள்ள உயரமான மலைப்பகுதி 'ஊப்பர் காட்' (மேலேயுள்ள மலைப்பிரதேசம்) என்றும், சற்று கீழே உள்ள மலைகளை உள்ளடக்கிய பீடபூமிப்பகுதி 'நீச் காட்' என்றும் அழைக்கப்படுகின்றன.

ஜஷ்பூர் அட்டாகாச மலைகளும் அழகு நீர்வீழ்ச்சிகளும்!

Ksh85

ஜண்டா காட் மற்றும் பேலாகாட் எனும் இதர இரண்டு மலைப்பிரதேசங்களையும் ஜஷ்பூர் மாவட்டம் உள்ளடக்கியுள்ளது. ஜஷ்பூர்நகர் என்று அழைக்கப்படும் ஜஷ்பூர் மாவட்டத்தலைநகரம் சோட்டாநாக்பூர் பீடபூமிப்பகுதியின் மீது அமைந்திருக்கிறது. குன்குரி எனும் இடம் உஷ்ணப்பிரதேசமாகவும், பண்ட்ராபட் எனும் இடம் குளிர்ப்பிரதேசமாகவும் இம்மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

ஜஷ்பூர் அட்டாகாச மலைகளும் அழகு நீர்வீழ்ச்சிகளும்!

Pankaj Oudhia

இந்தியாவில் தற்போது 'நக்சல்' இயக்கத்தினரின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளை குறிக்கும் 'ரெட் காரிடார்' பட்டியலில் ஜஷ்பூர் மாவட்டம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜஷ்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் ஜஷ்பூர் மாவட்டம் முழுதும் அழகிய நீர்வீழ்ச்சிகள் நிரம்பியுள்ளதால் இயற்கை ரசிகர்களுக்கு பிடித்தமான எழில் அம்சங்களுக்கு இங்கு குறைவே இல்லை.

ஜஷ்பூர் அட்டாகாச மலைகளும் அழகு நீர்வீழ்ச்சிகளும்!

Pankaj Oudhia

ராஜ்புரி நீர்வீழ்ச்சி, கைலாஷ் குஃபா, தன்புரி நீர்வீழ்ச்சி, ராணி தஹ் நீர்வீழ்ச்சி, பிரிங்ராஜ் நீர்வீழ்ச்சி, கதீட்ரல் குன்குரி, தமேரா நீர்வீழ்ச்சி, குடியாராணி கி குஃபா, ஸ்னேக் பார்க், சொக்ரா அகோர் ஆஷ்ரம், பதல்கோலே அப்யாரண், குல்லு நீர்வீழ்ச்சி, சுரி நீர்வீழ்ச்சி, ராணி ஜூலா, பனே நீர்வீழ்ச்சி, ஹர தீபா, லோரோ காட்டி மற்றும் பேல் மஹாதேவ் போன்றவை இங்குள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும். ஜஷ்பூர் பருவநிலை ஒரு பீடபூமிப்பகுதியில் அமைந்திருப்பதால் ஜஷ்பூர் வருடம் முழுக்கவே இனிமையான பருவநிலையை கொண்டுள்ளது.

More News

    Read more about: travel
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+