Search
  • Follow NativePlanet
Share
» »ஒவ்வொரு சுற்றுலா பயணியும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

ஒவ்வொரு சுற்றுலா பயணியும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

எந்த இடத்திற்கு சுற்றுலா செல்வதாக இருந்தாலும் அந்த இடத்தின் சுற்றுச்சூழல் குறித்த அக்கறை உணர்வு ஒவ்வொரு சுற்றுலா பயணிக்கும் இருக்க வேண்டும். ஏதோ ஒரு இடத்திற்கு சென்றோம், வந்தோம் என்று இருக்காமல், எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு சுற்றுலா பயணிகள் கற்றுக் கொண்டு, கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன.

eco conscious traveller

சுற்றுச்சூழல் பாதுகாப்புடன், உள்ளூர் சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் ஆதரவளிக்கும் வகையில் பயணிப்பதை ஒரு வழக்கமாக கொள்ளலாம். சுற்றுலா தரும் மகிழ்ச்சியை அனுபவிக்கும்போது, பாதிப்பை குறைக்க சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் நாம் பயணிப்பதும் அவசியமாகிறது. அதற்கு நாம் என்ன செய்யலாம்? வாங்க தெரிந்து கொள்ளலாம்.

சுற்றுலா பயணிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

1. காற்று மாசற்ற போக்குவரத்தை தேர்வு செய்யுங்கள்

விமானங்கள் அதிகப்படியான கார்பன் உமிழ்வை ஏற்படுத்துவதால், குறைந்த அளவிலேயே அவற்றைப் பயன்படுத்துங்கள். அதற்கு மாற்றாக, பஸ், ரயில், சைக்கிள் அல்லது நடைபயணம் மேற்கொள்வது சிறந்த தேர்வாக இருக்கும். குறிப்பாக, நகரங்களில் சைக்கிள் பயன்பாடு சுற்றுச்சூழல் நட்பாக இருக்கும். அருகில் உள்ள இடங்களை சுற்றி பார்க்க, பக்கத்தில் ஷாப்பிங் செல்வதற்கு சைக்கிளிலோ அல்லது நடந்தோ செல்வது, அங்குள்ள கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள இது வசதியாக இருக்கும்.

2. உள்ளூர் உணவை தேர்வு செய்யுங்கள்

பெரிய பெரிய புகழ்பெற்ற உணவகங்களை தவிர்த்து, உள்ளூர் விவசாயிகள் மற்றும் சிறிய உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உள்ளூர் உணவுகளை தேர்வு செய்து உண்ணலாம். இதன் மூலம், உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்கலாம் மற்றும் அதிகமான குப்பைகளை, கழிவுகள் சேருவதை தவிர்க்க முடியும். வித்தியாசமான பல உள்ளூர் உணவுகளை ருசி பார்க்க முடியும்.

Hill

3. சுற்றுச்சூழல் நட்புள்ள தங்குமிடங்களை தேர்வு செய்யுங்கள்

சுற்றுலா ஹோட்டல்கள் அதிகப்படியான எரிசக்தி மற்றும் நீரை வீணடிக்கக்கூடியவை. அதற்குப் பதிலாக, இயற்கைநிலை செயல்பாடு கொண்ட 'எக்கோ-லாஜ்' (Eco-lodge) அல்லது பசுமை சான்றிதழ் பெற்ற விடுதிகளை தேர்வு செய்யுங்கள். இயற்கையை அன்புடன் அணுகும் தங்குமிடங்கள் உங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும்.

4. எரிசக்தி பயன்பாட்டை குறையுங்கள்

பயணிக்கும் போது, மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தி வீணடிக்காமல், தேவையில்லாத விளக்குகளை அணைத்து, குறைந்தபட்ச அளவில் நீரை உபயோகிக்க வேண்டும். பயன்படுத்தும் பொருட்களில் மறுசுழற்சி செய்யக்கூடிய பாட்டில்கள், துணிப் பைகள் போன்றவற்றை பயன்படுத்துவது சிறந்த தேர்வாகும்.

5. இயற்கையை காப்பாற்றுங்கள்

சுற்றுலா பகுதிகளில் கழிவுகளை பொறுப்புடன் நீக்குதல், கடற்கரையில் பிளாஸ்டிக்குகளை வீசாமல் இருக்குதல், வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல் பாதுகாத்தல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும். இயற்கை சுற்றுலாவுக்கு முக்கியமான ஒற்றுமை - சுற்றுச்சூழலையும், உள்ளூர் கலாச்சாரத்தையும் மதிப்பது. இவற்றை செய்வதால் நிறைவான மகிழ்ச்சியான சுற்றுலாவை அனுபவித்த திருப்தி நமக்கு கிடைக்கும்.

More News

    Read more about: eco tourism
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+