Search
  • Follow NativePlanet
Share
» »டிரெக்கிங் செல்ல விருப்பம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதெல்லாம் தெரிந்து கொள்ள மறந்துடாதீங்க

டிரெக்கிங் செல்ல விருப்பம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதெல்லாம் தெரிந்து கொள்ள மறந்துடாதீங்க

இந்தியாவில் அதிக சுற்றுலாத் தலங்களை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இங்கு மலைவாசஸ்தலங்கள் ஏராளமாக உள்ளது. மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்ல அனைவருக்கும் பிடிக்கும் என்றாலும், மலை பிரதேசங்கள், காட்டுப் பகுதிகளாக தேடிப் பிடித்து டிரெக்கிங் செய்வதில் சாகசப் பிரியர்களுக்கு அளாதிப் பிரியம். ஆனால் ஆசை, தைரியம், உடல் வலிமை உள்ள அனைவரும் டிரெக்கிங் சென்று விட முடியுமா என்றால், அது தான் கிடையாது. அதற்கு சில முக்கியமான தகுதிகளும், அதை விட முக்கியமாக முன்பதிவு செய்து தமிழ்நாடு அரசின் அனுமதியையும் பெற முடியும்.

Trekking

தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணியில் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் வனப்பகுதிக்குள் ஏற்பட்ட தீ விபத்தில் டிரெக்கிங் சென்ற 23 பேர் உயிரிழந்தனர். வனத்துறையினரின் அனுமதியின்றி டிரெக்கிங் சென்ற போது இந்த தீ விபத்து ஏற்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு டிரெக்கிங் எனப்படும் மலையேற்றத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது.

தமிழ்நாடு அரசு சார்பில் டிரெக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்ட வனப்பகுதிகளின் பட்டியலில் வெள்ளியங்கிரி மலை, குரங்கணி சாம்பலாறு, ஏலகிரி சுவாமிமலை, குற்றாலம் செண்பகதேவி நீர்வீழ்ச்சி, நீலகிரி அவலாஞ்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய மலை பிரதேசங்களும் இடம்பெற்றிருந்தது. அதற்கு பிறகு டிரெக்கிங் செல்வதற்கான தடைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு, அதற்கு பதிலாக வனப் பகுதிகளுக்குள் டிரெக்கிங் செல்ல விரும்புபவர்கள் முன்பதிவு செய்து, அரசின் அனுமதி பெற்ற பிறகு தான் டிரெண்டிங் செல்ல வேண்டும் என பலவிதமான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது.

தமிழ்நாட்டில் மலையேற்ற பயணத்திற்கு ஏற்றதாக 124 காட்டுப் பாதைகள் தேர்வு செய்யப்பட்டன. இவற்றில் முதல் கட்டமாக 40 பாதைகளில் மட்டும் டிரெக்கிங் செல்ல அனுமதி வழங்க வனத்துறை முடிவு செய்தது.

டிரெக்கிங் செல்வதற்கான தகுதி மற்றும் முன்பதிவு முறை :

* டிரெக்கிங் செல்ல முன்பதிவு செய்யும் நபர் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

* 18 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்தை சமப்பித்து, முன்பதிவு செய்து, டிரெக்கிங் செல்லலாம்.

* 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பெற்றொர் அல்லது பாதுகாவலரின் துணையோடு மட்டுமே டிரெக்கிங் செல்ல அனுமதி உண்டு. அதுவும் எளிதான மலையேற்ற பாதைகளில் மட்டுமே இவர்கள் டிரெக்கிங் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

* டிரெக்கிங் செல்ல நினைப்பவர்கள் www.trektamilnadu.com என்று தமிழக அரசின் மலையேற்ற அனுமதிக்கான பிரத்யேக இணையதளத்திற்கு சென்று, உங்களை பற்றிய விபரங்கள், நீங்கள் டிரெக்கிங் செல்ல நினைக்கும் பாதைகள் எளிய, மிதமான,நடுத்தரம் அல்லது கடினமான பாதைகளில் எது என பிரிக்கப்பட்டுள்ள பிரிவை தேர்வு செய்து முன்பதிவு செய்ய வேண்டும்.

* டிரெக்கிங் செல்வதற்கு ஒரு நபருக்கு ரூ.1000 முதல் ரூ.5000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் தேர்வு செய்யும் மலையேற்ற பாதையின் ரகத்திற்கு ஏற்ப இந்த கட்டணமானது மாறுபடும்.

* டிரெக்கிங் செல்வதற்கான இடத்தை தேர்வு செய்வதற்கு உதவிடும் வகையில் அந்த பகுதிகளின் போட்டோக்கள், வீடியோக்கள், 3டி அனிமேஷன், அந்த இடம் பற்றிய முக்கிய விபரங்கள், விதிமுறைகள் ஆகியன இந்த இணையதளத்திலேயே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

* பணம் செலுத்திய பிறகு, டிரெக்கிங் செல்ல அனுமதி பெற்ற நுழைவு சீட்டையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த நுழைவு கட்டணத்திலேயே வழிகாட்டிகளுக்கான கட்டணமும் அடங்கும்.

* இந்த இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்தவர்கள் வழிகாட்டிகளின் உதவியுடன் மட்டுமே வனப்பகுதியில் டிரெக்கிங் செல்ல முடியும்.

More News

    Read more about: tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+