Search
  • Follow NativePlanet
Share
» »மூணாறு செல்ல இப்போ டபுள் டெக்கர் பஸ் சேவை வந்தாச்சு... இதற்கு புக் செய்யும் முறை இதோ...

மூணாறு செல்ல இப்போ டபுள் டெக்கர் பஸ் சேவை வந்தாச்சு... இதற்கு புக் செய்யும் முறை இதோ...

கேரளாவின் மிக முக்கியமான சுற்றுலா தலமாகவும், அதிகமான சுற்றுலா பயணிகள் அனைத்து சீசன்களிலும் வந்து செல்லும் பகுதியாகவும் இருப்பது மூணாறு. இயற்கை பிரியர்களின் ஃபரைட் இடம் என்றோ சொல்லலாம். இதனால் மூணாறு வரும் சுற்றுலா பயணிகளை மேலும் கவருவதற்கும், இங்கு வருபவர்களின் சுற்றுலா பயணத்தை இனிமையாக்குவதற்காகவும் கேரள போக்குவரத்து கழகம் புதிய வசதிகள் அறிமுகம் செய்து வருகிறது.

double decker bus to Munnar

தென்னிந்தியாவின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் மூணாறின் தேயிலை தோட்டங்கள், வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதைகளை 360 டிகிரி கோணத்தில், இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து மகிழும் வகையில் KSRTC மூணாறு ராயல் வியூ டபுள் டெக்கர் பஸ் சேவையை தொடங்கி உள்ளது. இந்த பஸ்சில் பயணம் செய்வதற்கு எப்படி புக் செய்ய வேண்டும், பஸ் டிக்கெட், பஸ் புறப்படும் நேரம், சுற்றி பார்க்கும் இடங்கள் உள்ளிட்டவற்றை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

கேரளா போக்குவரத்து கழகமான KSRTC (Kerala State Road Transport Corporation)பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் மூணாறு ராயல் வியூ டபுள் டெக்கர் பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேருந்து சேவை மூணாறு மலைப்பகுதியில் உள்ள அற்புதமான காட்சிகளை கண்டு ரசிக்கும் வகையில் 50 இருக்கைகள் கொண்ட சுற்றுலா பேருந்து ஆகும். இந்த சேவை சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

double decker bus to Munnar

மேலும் பலர் ஆன்லைன் மற்றும் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்து வருவதாகவும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் KSRTC பட்ஜெட் சுற்றுலா பிரிவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.ராஜீவ் தெரிவித்துள்ளார்.

நேரங்கள்:

இந்த டபுள் டெக்கர் பஸ் தினமும் காலை 9, மதியம் 12.30 மற்றும் மாலை 4 மணிக்கு என மூன்று முறை இயக்கப்படுகிறது. ஒவ்வொரு பயணமும் மூன்று மணிநேரம் கால அளவைக் கொண்டுள்ளது.

எங்கே எல்லாம் போகலாம்?

இந்த பேருந்து பயணம் மூணாறு KSRTC பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்குகிறது. பின்னர் அங்கிருந்து மூணாறு GAP சாலையில் சென்று, அங்கிருந்து ஆனயிரங்கல் அணைக்கு செல்கிறது. சுற்றுலா பயணிகள் பெரியகனல் நீர்வீழ்ச்சி, சிக்னல் பாயிண்ட், லாக்கார்ட் வியூ, மலைக்கள்ளன் குகை, ஆரஞ்சு தோட்டம் மற்றும் டீ எஸ்டேட் போன்ற இடங்களை பார்வையிடலாம். ஒவ்வொரு இடத்திலும் இப்பேருந்து 10 நிமிடங்கள் வரை நின்று செல்லும் .

கட்டண விபரம்:

இந்த பேருந்தில் பயணம் செய்வதற்கு மேல் தள இருக்கைகளுக்கு ரூ. 400, கீழ் தள இருக்கைக்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேல் தளத்தில் 38 இருக்கைகளும் கீழ் தளத்தில் 12 இருக்கைகளும் உள்ளன.

முன்பதிவு செய்வது எப்படி:

1. KSRTC SWIFT என்று இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
2. search optionல் ⁠Munnar KSRTC Royal View Double Deck என கொடுத்தால் sigthseeing option தானாகவே தோன்றும்.
3. பயணம் செய்வதற்கான தேதியை தேர்வு செய்ய வேண்டும்.
4. குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் தேவையான இருக்கையை தேர்வு செய்து, பின்னர் பயணிகள் பற்றிய விவரங்களை பதிவு செய்யவும். ஒரு முன்பதிவில் 6 இருக்கைகள் வரை தேர்வு செய்யலாம்.
5. பின்னர் பணம் செலுத்தலாம்.
6. இருக்கைகளை முன்பதிவு செய்ய 98985086324 என்ற எண்ணையும் அழைக்கலாம்.
7. ⁠Enter KSRTC Neo-orps என்ற செயலி மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.

More News

Read more about: munnar kerala
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+