Search
  • Follow NativePlanet
Share
» »முதல் முறையாக டிரெக்கிங் போறீங்களா? இந்த 10 பொருட்களை உங்களோடு எடுத்துச் செல்ல மறந்துடாதீங்க

முதல் முறையாக டிரெக்கிங் போறீங்களா? இந்த 10 பொருட்களை உங்களோடு எடுத்துச் செல்ல மறந்துடாதீங்க

பொதுவாக டிரெக்கிங் செல்பவர்கள் தாங்கள் செல்லும் இடத்தில் வானிலை எப்படி உள்ளது, பாதுகாப்பு எப்படி உள்ளது என்பதை மட்டும் தான் முக்கியமாக கவனிப்பார்கள். ஆனால் அதற்கு முன் தங்களுடன் எந்தெந்த பொருட்களை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் முதல் முறையாக டிரெக்கிங் போக போகிறீர்கள் என்றால் இந்த தகவல் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

List of 10 things to carry while trekking for beginners

தண்ணீர் பாட்டில்

டிரெக்கிங் செல்லும் போது எடுத்துச் செல்ல வேண்டிய அத்தியாவசிய பொருட்களில் முதன்மையானது தண்ணீர் பாட்டில். மலை ஏற்றத்தின் போது உயரமான இடங்களில் தண்ணீர் கிடைப்பது மிகவும் கடினம்.மலையேற்றம் நடை பயணத்தின் போது தண்ணீர் அருந்துவது உடலை எப்பொழுதும் நீர்ச்சத்து குறையாமல் வைத்திருக்க உதவும். இயற்கை நீரோடைகள் வழியாக செல்லும் பொழுது நீங்கள் கொண்டு சென்றுள்ள பாட்டிலில் மீண்டும் தண்ணீர் நிரப்பி கொள்ள உதவும்.

ஹேண்ட் வாஷ்

டிரெக்கிங் பயணத்தின் போது கிருமிகள் அதிக அளவில் தொற்றும் அபாயம் உள்ளது. எனவே அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள ஹேண்ட் வாஷ் உதவியாக இருக்கும். இது நோய்வாய்ப்படும் அபாயத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

டிராக் பேண்ட்கள்

டிரெக்கிங்கிற்கு காலனிகளை வாங்குவது எவ்வளவு முக்கியமானதோ அதே போன்று நல்ல வசதியான காற்றோட்டமான டிராக் பேண்ட்டுகளை எடுத்துச் செல்வது முக்கியம். விரைவாக உலரக்கூடிய கார்கோ பாணி பேண்ட்கள் டிரெக்கிங்கிற்கு வசதியாக இருக்கும். மேலும் பனிமலை டிரெக்கிங் செல்பவர்கள் பனியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலான கெய்டர்களை உபயோகப்படுத்தலாம்

பர்சனல் மெடிக்கல் கிட்

பர்சனல் மெடிக்கல் கிட் டிரெக்கிங் செல்லும் போது எடுத்துச் செல்ல வேண்டிய அத்தியாவசிய பொருள்களில் ஒன்று. அடிப்படை மருத்துவ பெட்டியில் தீக்காயங்களுக்கான மருந்துகள், கிருமி நாசினி லோஷன்கள், பேண்டைடுகள் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். இவை அவசர காலங்களில் சிறிய உடல்நிலை பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும்.

சன் ஸ்கிரீன் அல்லது சன் பிளாக்ஸ்

மலைகளில் உயரமான பகுதிகளில் uv கதிர்கள் மற்றும் நேரடி சூரிய ஒளி காரணமாக சருமம் வெயிலுக்கு ஆளாகி பாதிப்படையும் வாய்ப்புள்ளது. எனவே சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் லோசன்கள் மேலும் வெயிலில் இருந்து உதடுகளை பாதுகாக்க லிப் பாம்கள் போன்றவற்றை எடுத்துச் செல்வது அவசியமாகும்.

மேப்

டிரெக்கிங் செல்லும் போது அந்த பகுதியின் மேப் அவசியம் இருக்க வேண்டிய ஒன்றாகும். இது gps சாதனத்திற்கு ஒரு நல்ல மாற்றாகும். சில பகுதிகளில் gps இணைப்பு கிடைப்பது கடினமாக இருக்கும். அது போன்ற சந்தர்ப்பங்களில் மலையேற்ற வரைபடங்கள் பயணத்திற்கு உதவியாக இருக்கும்.

பவர் பேங்க்

மலையேற்றத்தின்போது சார்ஜிங் ஸ்லாட் மற்றும் சார்ஜ் செய்வதற்கான இடம் கிடைப்பது அரிதான ஒன்றாக இருக்கும். எனவே அவசர காலங்களில் எப்போதும் ஒரு பவர் பேங்க் எடுத்துச் செல்வது நல்லது. உங்கள் தொலைபேசியின் பேட்டரி தீர்ந்து விட்டாலும் பவர் பேங்க் கொண்டு சார்ஜ் செய்து கொள்ளலாம்.

நடைப்பயிற்சி கம்பம்

மலையேற்றத்தின் போது பாதைகள் மிகவும் சமதளமாகவும் நீளமாகவும் இருந்தால் நடப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும். எனவே ஒரு நடை பயிற்சி கம்பத்தை எடுத்துச் செல்வது அவசியம். இதனால் நீண்ட நேரம் நடப்பதற்கும், உயரமான மலைகளில் ஏறுவதற்கும் இது பயன்படும்.

சுவிஸ் கத்தி

மலையேற்ற பயணத்தின் போது எடுத்துச் செல்ல மிகவும் பயனுள்ள ஒன்று சுவிஸ் கத்தி இந்த கருவியில் பல்வேறு கத்திகள் இருப்பதால் இது எடுத்துச் செல்ல வேண்டிய சிறந்த பொருள்களில் ஒன்றாகும். அவசர காலங்களில் இந்த கத்தியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரெயின் கோட்

மலையேற்றத்தின் போது ஏற்படும் கடுமையான வானிலையில் இருந்து இது நம்மை காப்பாற்றிக் கொள்ள உதவியாக இருக்கும். மலைகளில் மழைப்பொழிவு கணிக்க முடியாதது. எனவே குடை அல்லது மழைக்கோட்டை எடுத்துச் செல்வது மிகவும் நல்லது. கடுமையான வானிலையை தாங்கும் வகையில் மிகவும் தரமான மழைக்கோட் எடுத்துச் செல்வது அவசியம்.

More News

    Read more about: trekking
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+