Search
  • Follow NativePlanet
Share
» »2025 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இவ்வளவு விடுமுறை நாட்கள் வருகிறதா – நிறைய ட்ரிப் போகலாமே!

2025 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இவ்வளவு விடுமுறை நாட்கள் வருகிறதா – நிறைய ட்ரிப் போகலாமே!

ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்கிற ஆசையும், எதிர்பார்ப்பும் நம் எல்லோரிடமும் இருக்கும். 2025 ஆம் ஆண்டை வரவேற்க நம்மிடம் இன்னும் ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே உள்ளன. ஒவ்வொரு ஆண்டு முடிவடையும் போது, நம் உடல்நலம், தனிப்பட்ட வாழ்க்கை, புத்தகங்கள் படிப்பது, தொழில் திட்டங்கள் மற்றும் பலவற்றைப் பற்றிய தீர்மானங்களை எடுக்கத் தயாராகிறோம். அந்த பட்டியலில் 'பயணம்' என்பது இன்றியமையாத இடத்தை பிடித்து வெகு ஆண்டுகள் ஆகிறது. உங்களுக்காகவே 2025 ஆம் ஆண்டில் வரக்கூடிய நீண்ட வார இறுதி நாட்களை தெளிவாக பட்டியலிட்டு கொடுத்துள்ளோம். அதற்கு ஏற்றார் போல நீங்கள் உங்களது பயணங்களை திட்டமிட்டு கொள்ளலாம்!

பிஸியான நம் வாழ்வில் ஒரு குட்டி பிரேக் அவசியம்

வேகமாக சுழன்று கொண்டிருக்கும் இந்த நவீன உலகில், நாமும் காலில் சக்கரத்தை கட்டியது போல ஓடிக் கொண்டிருக்கிறோம்! ஆனால், எவ்வளவு தான் வேலை, வேலை என்று நாம் பிசியாக இருந்தாலும், நம்முடைய வாழ்க்கைக்கும், தெளிவான மனநிலைக்கும் ஒரு சின்ன பிரேக் என்பது அவசியம். குழப்பத்தில் இருந்து தப்பிக்க ஒரு அமைதியான இடமாக இருந்தாலும் சரி அல்லது ஆர்வத்தை மீண்டும் தூண்டுவதற்கான சாகசமாக இருந்தாலும் சரி, பயணம் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

Travel

2025 இல் உள்ள நீண்ட வார விடுமுறைகள்

முன்கூட்டியே வரவிருக்கும் வருடத்தில் எத்தனை நீண்ட விடுமுறை நாட்கள் இருக்கின்றன என்று தெரிந்தால் அதற்கு ஏற்றாற்போல் நாம் நமது ஹாலிடே திட்டங்களை பிளான் பண்ணிக் கொள்ளலாம்!

ஜனவரி:

பொங்கல்: ஜனவரி 11 சனிக்கிழமை ஜனவரி 12, ஞாயிறு

திங்கட்கிழமை, ஜனவரி 13 (இந்த நாளை விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்)

செவ்வாய், ஜனவரி 14: பொங்கல்/மகர சங்கராந்தி (பொது விடுமுறை)

புதன், ஜனவரி 15: மாட்டுப் பொங்கல்/ திருவள்ளுவர் தினம் (பொது விடுமுறை)

வியாழன், ஜனவரி 16: கரி நாள்/ காணும் பொங்கல் (பொது விடுமுறை)

மார்ச்:

ஹோலி: வெள்ளிக்கிழமை, மார்ச் 14: ஹோலி (பொது விடுமுறை)

சனிக்கிழமை, மார்ச் 15

ஞாயிறு, மார்ச் 16

ஈதுல் பித்ர்:

சனிக்கிழமை, மார்ச் 29

ஞாயிறு, மார்ச் 30

திங்கள், மார்ச் 31: ஈதுல் பித்ர் (பொது விடுமுறை)

ஏப்ரல்:

மகாவீர் ஜெயந்தி: வியாழன், ஏப்ரல் 10: மகாவீர் ஜெயந்தி (பொது விடுமுறை)

ஏப்ரல் 11 வெள்ளிக்கிழமை (இந்த நாளை விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்)

ஏப்ரல் 12 சனிக்கிழமை

ஏப்ரல் 13 ஞாயிறு

புனித வெள்ளி: வெள்ளி, ஏப்ரல் 18: புனித வெள்ளி (பொது விடுமுறை)

ஏப்ரல் 19 சனிக்கிழமை

ஏப்ரல் 20, ஞாயிறு

Travel

மே:

தொழிலாளர் தினம்: வியாழன், மே 1: தொழிலாளர் தினம் (பொது விடுமுறை)

வெள்ளிக்கிழமை, மே 2 (இந்த நாளை விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்)

சனிக்கிழமை, மே 3

ஞாயிறு, மே 4

புத்த பூர்ணிமா:

சனிக்கிழமை, மே 10

ஞாயிறு, மே 11

திங்கள், மே 12: புத்த பூர்ணிமா (பொது விடுமுறை)

ஆகஸ்ட்:

சுதந்திர தினம்: வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 15: சுதந்திர தினம் (பொது விடுமுறை)

சனிக்கிழமை, ஆகஸ்ட் 16

ஆகஸ்ட் 17 ஞாயிறு

செப்டம்பர்:

ஓணம்: வியாழன், செப்டம்பர் 4: ஓணம் (பொது விடுமுறை)

வெள்ளி, செப்டம்பர் 5: மிலாத் உன் நபி (பொது விடுமுறை)

சனிக்கிழமை, செப்டம்பர் 6

ஞாயிறு, செப்டம்பர் 7

அக்டோபர்:

தசரா/காந்தி ஜெயந்தி: வியாழன், அக்டோபர் 2: தசரா/தசரா (பொது விடுமுறை)

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 3 (இந்த நாளை விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்)

சனிக்கிழமை, அக்டோபர் 4

ஞாயிறு, அக்டோபர் 5

தீபாவளி:

சனிக்கிழமை, அக்டோபர் 18

ஞாயிறு, அக்டோபர் 19

திங்கள், அக்டோபர் 20: தீபாவளி (பொது விடுமுறை)

டிசம்பர்:

கிறிஸ்துமஸ்: வியாழன், டிசம்பர் 25: கிறிஸ்துமஸ் (பொது விடுமுறை)

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 26 (இந்த நாளை விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்)

சனிக்கிழமை, டிசம்பர் 27

டிசம்பர் 28 ஞாயிறு

இந்த தேதிகளில் உங்களின் விடுமுறையை தந்திரமாக திட்டமிடுவதன் மூலம், 2025 இல் உங்கள் விடுமுறை நேரத்தை அதிகரிக்கலாம்.

More News

    Read more about: year ender 2024 travel guide
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+