Search
  • Follow NativePlanet
Share
» »2024 ஆம் ஆண்டு மதுரை சித்திரை திருவிழா – எப்போ திருக்கல்யாணம், எப்போ அழகர் ஆத்துல இறங்குறது?

2024 ஆம் ஆண்டு மதுரை சித்திரை திருவிழா – எப்போ திருக்கல்யாணம், எப்போ அழகர் ஆத்துல இறங்குறது?

இந்தியாவையே தமிழ்நாடு பக்கம் திரும்பி பார்க்க வைக்கும் பிரசித்திப் பெற்ற திருவிழாக்களில் மிக முக்கியமானது மதுரையில் கோலாகலமாக நடைபெறும் 'சித்திரை திருவிழா'. இந்த ஒரு மாத நிகழ்வில் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் நிகழ்வானது மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். அச்சமயம் மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களும் கூட விழாக்கோலம் பூண்டு பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்! மதுரை மட்டுமின்றி சுற்றியுள்ள ஊர்களில் உள்ள மக்கள் இந்த அற்புத திருவிழாவை காண வருவர். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான மதுரை சித்திரை திருவிழா முழு நிகழ்வு பற்றிய தகவல்கள் இதோ!

கோலாகலமான மதுரை சித்திரை திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். ஆனால் அதில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, மாசி மாத திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. அதிலும் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 12 இல் தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. திருவிழாவின் நிகழ்ச்சி நிரல் கீழே முழு விபரங்களுடன் தரப்பட்டுள்ளது.

maduraichithiraithiruvizha

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் கொண்டாட்டம்

பிரம்மாண்டமான திருவிழா தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ளது, அதற்கான ஏற்பாடுகள் ஆடம்பரத்துடனும் மகிமையுடனும் ஏற்கனவே தொடங்கிவிட்டன. 2024 சித்திரை திருவிழாவின் முதல் நிகழ்வாக மீனாட்சி கோவில் வளாகத்தில் கொடியேற்றம் நடைபெறும். இந்த ஒரு மாத கால தொடர்ச்சியான விழாக்களில், ஒவ்வொரு நிகழ்வுகளும் அனைத்து மரபுகள் மற்றும் சடங்குகளைப் பின்பற்றி அர்ப்பணிப்புடன் கொண்டாடப்படுகின்றன.

மாதம் முழுக்க தினம் தினம் கொண்டாட்டம்

சித்திரை மாதம் அமாவாசை முடிந்த பிறகு கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் சித்திரை பெருவிழாவானது தொடங்கும். தென் தமிழகத்தில் நடைபெறும் மிகவும் தொன்மையான விழாவாக இது உள்ளது. விழா நடைபெறும் 12 நாள்களிலும் மீனாட்சி அம்மன், பல்வேறு விதமான வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருவார்.

maduraichithiraithiruvizha1

சித்திரை திருவிழாவின் மொத்த நிகழ்வுகள்

· ஏப்ரல் 12 - சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

· ஏப்ரல் 13 - காலை 7 முதல் 9.30 வரை தங்க சப்பர நிகழ்வு. மாலை 7 முதல் 10.30 வரை பூதம், அன்னம் வாகனம்

· ஏப்ரல் 14 - காலை 7 முதல் 9.30 வரை தங்க சப்பர நிகழ்வு. மாலை 7 முதல் 10.30 வரை கைலாச பர்வதம், காமதேனு வாகனம்

· ஏப்ரல் 15 - காலை, மாலை தங்க பல்லாக்கு

· ஏப்ரல் 16 - காலை தங்க சப்பரம், மாலை தங்க குதிரை நிகழ்வு

· ஏப்ரல் 17 - தங்க சப்பரம், தங்கம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனம்

· ஏப்ரல் 18 - தங்க சப்பரம், நந்திகேஸ்வரர் யாளி நிகழ்வு

· ஏப்ரல் 19 - காலை தங்க பல்லாக்கு, மாலை வெள்ளி சிம்மாசனம்

· ஏப்ரல் 20 - மரவர்ண சப்பரம், இந்திர விமானம்

· ஏப்ரல் 21 - வெள்ளி சிம்மாசனம், தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனம், புஷ்ப பல்லாக்கு

· ஏப்ரல் 22 - திருத்தேர் வடம்பிடித்தல், சப்தாவர்ண சப்பரம்

· ஏப்ரல் 22 - கள்ளழகர் எதிர்சேவை நிகழ்வு

· ஏப்ரல் 23 - சித்திரை திருவிழா நிறைவு

· ஏப்ரல் 23 - கள்ளழகர் ஆற்றில் இறங்குதல்

maduraichithiraithiruvizha1

மதுரையில் நீங்கள் பார்க்க வேண்டிய இதர சுவாரஸ்யமான இடங்கள்

தமிழ்நாட்டின் கோயில் நகரமான சித்திரை திருவிழாவில் கலந்து கொள்வதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், அருகில் உள்ள கண்கவர் இடங்களையும் நீங்கள் நிச்சயமாக ஆராய வேண்டும். மதுரையில் கட்டாயம் பார்க்க வேண்டிய சில இடங்கள் இதோ!

· மீனாட்சி கோவில்

· அழகர்கோயில் கோவில் மற்றும் சன்னதி

· திருமலை நாயக்கர் மஹால்

· குட்லாடம்பட்டி அருவி

· வைகை அணை

· புது மண்டபம்

· சமணர் மலைகள்

· திருப்பரங்குன்றம் முருகர் கோயில்

· காந்தி நினைவு அருங்காட்சியகம்

· மாரியம்மன் தெப்பக்குளம்

More News

    Read more about: madurai travel guide
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+