Search
  • Follow NativePlanet
Share
» »முகுத்மணிபூர் - ஈர்க்கும் இடங்கள், புகைப்படங்கள், நேரம் மற்றும் செய்யவேண்டியவை

முகுத்மணிபூர் - ஈர்க்கும் இடங்கள், புகைப்படங்கள், நேரம் மற்றும் செய்யவேண்டியவை

மேற்கு வங்கத்தின் பீஹார் எல்லையில் அமைந்துள்ள இக்கிராமத்தில் இருக்கும் முகுத்மணிபூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும். 1950களில் கட்டபட்ட இந்த அணை ஏறத்தாழ 8000 சதுர கீமீ பரப்பளவில் அமைந்து

By Udhaya

மேற்கு வங்கத்தின் பீஹார் எல்லையில் அமைந்துள்ள இக்கிராமத்தில் இருக்கும் முகுத்மணிபூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும். 1950களில் கட்டபட்ட இந்த அணை ஏறத்தாழ 8000 சதுர கீமீ பரப்பளவில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற பூமி அணை முகுத்மணிபூர் சுற்றுலா இந்த அணையை மையப்படுத்தியே அமைந்துள்ளது. இங்கும் நிறைய சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன. இந்த இடத்தைச் சுற்றியுள்ள மற்ற இடங்களுக்கும் சென்றுவிட்டு திரும்புவோம் வாருங்கள்.

இயற்கை காட்சிகளை அள்ளித் தருவதால் ஏராளமான பயணிகள் இங்கே குவிகிறார்கள். உள்ளூர் பெங்காளி உணவுகளுக்காகவும் முகுத்மணிபூர் புகழ்பெற்று விளங்குகிறது. எங்கே தங்குவது? குறிப்பிடத்தக்க இரண்டு அரசு தங்கும் விடுதிகள் இருந்தாலும் ஏராளமான விடுதிகளும், உணவகங்களும் இங்கே உள்ளன. உள்ளூர் போக்குவரத்திற்காக பயணிகள் உள்ளூர் ஆட்டோ ரிக்‌ஷாக்களை பயன்படுத்தலாம். அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள் அணையில் இருந்து 2கிமீ தொலைவில் உள்ள பாங்கோபால்பூர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகளும், பறவை இனங்களும் உள்ளன. வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வருகை தருகிறார்கள். முகுத்மணிப்பூர் அணை இயற்கை காட்சிகளை அள்ளித் தருவதால் ஏராளமான பயணிகள் இங்கே குவிகிறார்கள்.

முகுத்மணிபூர் - ஈர்க்கும் இடங்கள், புகைப்படங்கள், நேரம் மற்றும் செய்யவேண்டியவை

Paulsub

இந்தியாவின் இரண்டாவது பெரிய அணை என்பதால் ஏராளமான பயணிகள் இங்கே குவிகிறார்கள். அணையின் கரையில் இருக்கும் விடுதியில் இருந்து பார்க்கும் போது எழில் நிறைந்த இயற்கை காட்சிகள் பிரம்மிக்க வைக்கின்றன.

இதன் அருகிலுள்ள இடம் கூச் பிஹார் என்று அழைக்கப்படுகிறது. தோர்ஸா எனும் ஆற்றிற்கு அருகில் இந்த நகரம் அமைந்திருப்பதோடு, மழைக்காலத்தில் இங்கு கடுமையான மழைப்பொழிவும் நிலவுவதால் அவ்வப்போது போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்படும் இயல்பை இந்நகரம் கொண்டிருக்கிறது. எனவே கூச் பிஹார் நகர மக்கள் உல்லாசத்தை விரும்பும் மனஇயல்பு கொண்டவர்களாக உள்ளனர். இவர்கள் பெங்காளி பண்டிகைகளான தீபாவளி, துர்க்கா பூஜா, காளி பூஜா மற்றும் துசேரா போன்ற பண்டிகைகளை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். வருடமுழுதும் இந்நகரத்தில் திருவிழாக் கொண்டாட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. ராஸ் மேளா எனும் திருவிழா இவற்றில் குறிப்பிடத்தக்கது

முகுத்மணிபூர் - ஈர்க்கும் இடங்கள், புகைப்படங்கள், நேரம் மற்றும் செய்யவேண்டியவை

SATYAJIT KUNDU

யணிகள் கூச் பிஹாருக்கு வரும் போது இங்கு கிடைக்கும் பல்வேறு உணவுப்பண்டங்களை ருசி பார்ப்பது அவசியம். புனா கிச்சிரி மற்றும் லப்ரா என்பவை பிரசித்தமான உள்ளூர் தின்பண்டங்களாகும். மோமோ எனப்படும் உருண்டைகளை விற்கும் நடைப்பாதைக்கடைகள் முதல் விரிவான பெங்காளி மற்றும் பங்களாதேஷ் உணவுவகைகளை பரிமாறும் உயர்தர உணவகங்கள் வரை இந்நகரத்தில் அதிகம் காணப்படுகின்றன. விசேஷமான கடல் உணவுத்தயாரிப்புகள் மற்றும் காடிகரம், ஜல்முரி போன்றவற்றை சுவை பார்க்கவும் பயணிகள் மறக்கக்கூடாது. கூச் பிஹார் நகர குடிமக்கள் ஒரு ஒற்றுமையான சமுதாய அமைப்புடன் வசிக்கின்றனர். பரா என்றழைக்கப்படும் குடியிருப்புகளில் இவர்கள் வசிக்கின்றனர்.

More News

    Read more about: travel temple
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+