Search
  • Follow NativePlanet
Share
» »தண்ணில மிதக்க பிடிக்குமாங்க உங்களுக்கு ? அப்போ இந்த இடங்களுக்கு கண்டிப்பா போங்க

தண்ணில மிதக்க பிடிக்குமாங்க உங்களுக்கு ? அப்போ இந்த இடங்களுக்கு கண்டிப்பா போங்க

By Naveen

வீட்டை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டியெடுக்கிறது. அப்படியே சில நாட்கள் ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ போகலாம் என்றால் அங்கெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் ஏற்படும் நெரிசலும், அசுத்தங்களும் நம்மை முகம் சுளிக்க வைக்கும். என்ன செய்வது ?

இன்னும் அதிகம் பிரபலமாகாத பேரழகுடைய இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம். அதிலும் குறிப்பாக கோடையின் வெப்பத்தில் இருந்து தப்பிக்க கடற்கரைகளுக்கும், நீர் சார்ந்த விளையாட்டுகள் இருக்கும் இடங்களுக்கும் செல்லலாம் வாருங்கள்.

பூவார் பீச் :

பூவார் பீச் :

கேரள மாவட்டத்தின் தென்கோடி முனையில் அமைந்திருக்கும் ஆள் ஆரவாரமில்லாத, அமைதியும் அழகும் நிறைந்த கடற்கரை கிராமம் தான் பூவார். இயற்கையான துறைமுக புவியமைப்பை கொண்டுள்ள இந்த இடம் கி.மு 1000மாம் ஆண்டிலேயே வெளிநாட்டவர் வந்துசெல்லும் துறைமுகமாக இருந்திருக்கிறது.

Photo:{ pranav }

பூவார் பீச் :

பூவார் பீச் :

மதுரை நாயக்கர் காலத்தில் நாடார் இனத்தவர்களுக்கு எதிராக கலவரம் வெடித்த போது மதுரையில் இருந்து வெளியேறி பூவார் உள்ளிட்ட இடங்களில் வந்து தஞ்சம் அடைந்திருகின்றனர். மேலும் இந்த பூவார் கடற்கரையில் தான் 1400 வருடங்களுக்கு முன்பு அரேபிய நாட்டிலிருந்து வந்த இஸ்லாமியர்கள் குடியேறி இருக்கின்றனர்.

Photo:Thejas Panarkandy

பூவார் பீச் :

பூவார் பீச் :

மிகப் பழமையான வரலாற்றை கொண்டிருக்கும் இந்த இடம் இப்போது சுற்றுலாப்பயணிகளால் மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாகி விட்டது. நம்மூர்களில்.இருப்பது போல இல்லாமல் இந்த பூவார் கடற்கரை வெகு சுத்தமாக இருக்கிறது.

மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தை ரசித்தபடியே காலாற கடற்கரையில் நடப்பது மிகவும் புத்துணர்வூட்டும் ஒரு விஷயமாக இருக்கும். இந்த ஊரானது கேரளா - தமிழக எல்லையில் கன்னியா குமரி மாவட்டத்தை ஒட்டி அமைந்திருக்கிறது.

Photo:Nagesh Jayaraman

பூவார் பீச் :

பூவார் பீச் :

பூவாரை பற்றிய மேலதிக தகவல்களையும், அந்த ஊரை எப்படி அடைவது என்பது பற்றிய தகவல்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo:{ pranav }

 வகேடோர் பீச் :

வகேடோர் பீச் :

அமைதியாக பொழுதை போக்குவதேல்லாம் சுத்த 'போர்' என்று சொல்லும் ஆளா நீங்கள். அப்போ இந்த கோடை விடுமுறையை கலகலப்பாக கொண்டாட நீங்கள் போக வேண்டிய இடம் இந்தியாவின் 'பார்டி தலைநகரம்' என்று சொல்லப்படும் கோவாவில் இருக்கும் வகேடோர் பீச் தான்.

Photo: Flickr

 வகேடோர் பீச் :

வகேடோர் பீச் :

கோவாவில் வெளிநாட்டவர்கள் அதிகம் வரும் கடற்கரைகளில் ஒன்றான இந்த வகேடோர் பீச்சில் வருடத்தில் எல்லா நாட்களும் விடிய விடிய பார்டி நடக்கிறது. குறிப்பாக ஞாயிற்று கிழமை இரவுகளிலும், புத்தாண்டு சமையத்திலும் பார்டிகள் களைகட்டுகின்றன.

Photo: Flickr

 வகேடோர் பீச் :

வகேடோர் பீச் :

இந்த கடற்கரையில் உள்ள உணவகங்களில் அதிசுவையான கோவா உணவுகள் பரிமாறப்படுகின்றன. இந்த கடற்கரைக்கு அருகில் தான் கோவாவின் புகழ்பெற்ற அஞ்சுனா கடற்கரை இருக்கிறது.

அஞ்சுனா கடற்கரை Photo: Flickr

 வகேடோர் பீச் :

வகேடோர் பீச் :

சில நாட்கள் அலுவுலகத்திற்கு விடுமுறை போட்டுவிட்டு நண்பர்களுடன் இந்த வகேடோர் கடற்கரைக்கு சென்று பார்டி, கொண்டாட்டம் என இஷ்டப்படி வாழ்ந்திடுங்கள்.

Photo: Flickr

 வகேடோர் பீச் :

வகேடோர் பீச் :

இந்த கடற்கரையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை நடக்கும் வார சந்தை ஷாப்பிங் பிரியர்களால் மிகவும் விரும்பப்படுகிறது.

Photo: Flickr

 வகேடோர் பீச் :

வகேடோர் பீச் :

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டை ஒட்டி உலகின் தலைசிறந்த டி.ஜேக்கள் பங்குபெறும் 'சன் பர்ன்' பார்டி நடக்கிறது. இதுவே இந்தியாவின் பார்டி கொண்டாட்டங்களின் உச்சமாக பார்க்கப்படுகிறது.

வகேடோர் கடற்கரையை எப்படி சென்றடைவது ?. அங்குள்ள ஹோட்டல்கள் என்னென்ன என்பது போன்ற விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo: Flickr

ஹெவ்லொக் தீவு ;

ஹெவ்லொக் தீவு ;

இந்த கோடை விடுமுறையை கொண்டாட ஆகச்சிறந்த இடமென்றால் அது அந்தமான் நிகோபாரில் இருக்கும் ஹெவ்லொக் தீவு தான் அது. இவ்வளவு அழகான ஓரிடத்தை வாழ்கையில் பார்த்ததே இல்லை என்று நம்மை நிச்சயம் சொல்ல வைக்கும். வாழ்கையில் ஒருமுறையேனும் சென்று பார்க்கவேண்டிய கனவு இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

Photo: Flickr

ஹெவ்லொக் தீவு ;

ஹெவ்லொக் தீவு ;

இங்குள்ள ராதா நகர் கடற்கரையில் வேறெங்கும் இல்லாத அம்சமாக இந்த கடற்கரையில் யானை மீது சவாரி செய்யலாம். நீல நிறக்கடலும், சற்றும் மாசுபடாத வெண்மணல் கடற்கரைகளும் நம்மை வேறொரு உலகத்தில் இருப்பது போல நினைக்க தூண்டும்.

Photo: Flickr

ஹெவ்லொக் தீவு ;

ஹெவ்லொக் தீவு ;

இந்த கடற்கரையை தவிர்த்து ஹெவ்லொக் தீவில் 'ஸ்கூபா டைவிங்', 'ஸ்நார்கிலிங்க்' போன்ற கடல் சார்ந்த சாகச விளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன. இங்குள்ள கடற்பகுதியில் பவளப்பாறைகள் நிறைய இருப்பதால் 'ஸ்கூபா டைவிங்' செய்து கடலுக்கு அடியில் இருக்கும் பேரழகு நிறைந்த உலகை தரிசிக்கலாம்.

Photo: Flickr

ஹெவ்லொக் தீவு ;

ஹெவ்லொக் தீவு ;

ஹெவ்லொக் தீவை கப்பல் மூலமாகவும், விமானம் மூலமாகவும் மட்டுமே சென்றடைய முடியும். இந்த தீவை எப்படி அடைவது என்பது பற்றிய இன்னும் அதிக தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்து கொள்ளுங்கள்.

More News

    Read more about: goa beaches adventure holidays
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+