Search
  • Follow NativePlanet
Share
» »உடலையும் மனதையும் புத்துணர்வூட்டும் மசாஜ்! இப்படியும் ஒரு கிராமம் இருக்கு #தேடிப்போலாமா 9

உடலையும் மனதையும் புத்துணர்வூட்டும் மசாஜ்! இப்படியும் ஒரு கிராமம் இருக்கு #தேடிப்போலாமா 9

உடலையும் மனதையும் புத்துணர்வூட்டும் மசாஜ்! இப்படியும் ஒரு கிராமம் இருக்கு #தேடிப்போலாமா 9

கோட்டயம் மாவட்டத்தில் பல்லோம் தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் இந்த நாட்டகம் ஆகும். கிராமத்தின் இயல்பான அழகிய இயற்கை வளங்களைத் தன்னுள்ளே கொண்டு, தன் அழகிய சுற்றுலா அம்சங்களால் பல சுற்றுலாப் பிரியர்களை தனக்கென கட்டிப்போட்டுள்ளது இந்த கிராமம். கோட்டயம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் செல்லவேண்டிய ஒரு இடம் இது. வாருங்கள் நாமும் சென்று பார்க்கலாம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

எங்குள்ளது

எங்குள்ளது

கோட்டயத்திலிருந்து 6.5 கி.மீ தூரத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது. கேரளத்துக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்கும்போது, மிகவும் அரிதாகத்தான் கோட்டயத்தை சுற்றுகின்றனர். கோட்டயம் பகுதியில் பலருக்கு தெரியாத அழகிய இடங்களும், சொர்க்கலோகம் போல காட்சி தரும் பகுதிகளும் இருக்கின்றன.

 இயற்கை கொண்டாடும் வனப்பு

இயற்கை கொண்டாடும் வனப்பு


பசுமையான இயற்கைக் காட்சிகளின் பின்னணியில் வீற்றிருப்பதால் தன் இயற்கை அழகுக்காகவே நாட்டகம் கிராமம் பிரசித்தமாக அறியப்படுகிறது.

 பறவைகளின் புகுந்த வீடு

பறவைகளின் புகுந்த வீடு

ஏராளமான புகலிடப்பறவைகள் இங்கு கோடைக்காலத்தில் வருகா தருவது மற்றொரு விசேஷமாகும். வருடத்துக்கு ஒரு முறை வந்து செல்லும் பறவைகள் தாய் வீடு, புகுந்த வீடு போல இந்த இடத்தை கருதுகின்றன. எப்படி தன் பயணத்தில் ஏராளமான நிகழ்வுகளை சந்திக்கின்றவோ, அது போலவே நாமும் இந்த பயணத்தில் அந்த பறவைகளைப் போல பல அலாதியான நினைவுகளை நெஞ்சில் சுமந்து நிற்போம் என்பது மட்டும் உறுதி.

 இன்னிசை பாடும் பறவைகள்

இன்னிசை பாடும் பறவைகள்

வருடத்துக்கு ஒருமுறை என்றாலும், பறவைகளின் அழகை ரசிப்பதற்கே இங்கு சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகின்றனர். பறவைகளின் இசைக் கீச்சொலிகள் இந்த கிராமப்பகுதியை ஒரு இயற்கைச் சொர்க்கமாகவே மாற்றிவிடுகின்றன. அமைதியான சூழ்நிலையியல் கைதி போல நம்மை அந்த இடத்தை விட்டு வெளியேற மனம் மறுக்கிறது.

 கேரளத்தின் அதி சிறந்த ஆயுர்வேத மசாஜ்

கேரளத்தின் அதி சிறந்த ஆயுர்வேத மசாஜ்

ஆயுர்வேத மசாஜ் சேவை மையங்களும் இக்கிராமத்தில் உள்ளதால் பயணிகள் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியூட்டிக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. கேரளத்தில் சிறந்த மசாஜ் மையங்களில் மிகவும் சிறந்ததாக இந்த கிராமம் உள்ளது. இங்கு வருபவர்கள் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் மசாஜ்க்காகவும் சுற்றுலாப் பறவைகளை பார்ப்பதற்காகவும் தவறாமல் கோடையில் வந்துவிடுகிறார்கள்.

 சாகச மற்றும் பொழுதுபோக்கு

சாகச மற்றும் பொழுதுபோக்கு

இந்த கிராமத்தில், நீச்சல், மீன்பிடித்தல் மற்றும் படகுச்சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்துள்ளன. இங்கு சாகச விளையாட்டுகள் விளையாடவும் ஒரு சிலர் ஆசைப் படுகின்றனர். நீர்ச்சறுக்கு அலைச் சறுக்கு போன்ற விளையாட்டுகள் எப்போதாவது இங்கு சிலர் விளையாடிச் செல்கின்றனர்.

 புகைப்படங்களும் சுற்றுலாவும்

புகைப்படங்களும் சுற்றுலாவும்

புகைப்படங்களின்றி சுற்றுலா ஏது.. உண்மையில் செல்பி எடுக்க மிக அழகான இடமாக இந்த கிராமம் உள்ளது. இதனாலேயே சமீப காலமாக இந்த சிறு கிராமம் பரபரப்பான சுற்றுலா தலமாக மாறிவருவதும் குறிப்பிடத்தக்கது. புகைப்பட ஆர்வலர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் இயற்கை காட்சிகள் நிரம்பி வழிவது இக்கிராமத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+