Search
  • Follow NativePlanet
Share
» »2025 புத்தாண்டை சூப்பரா வரவேற்க தயாரா – புதுச்சேரியில் நடைபெறும் கொண்டாட்டங்களின் லிஸ்ட் இதோ!

2025 புத்தாண்டை சூப்பரா வரவேற்க தயாரா – புதுச்சேரியில் நடைபெறும் கொண்டாட்டங்களின் லிஸ்ட் இதோ!

2024க்கு டாடா பை-பை சொல்லி, வரவிருக்கும் புத்தாண்டை உற்சாகத்துடனும் வெடித்துடனும் வரவேற்கவும். சுவையான உணவுகள் மற்றும் பானங்களுடன் மனதைக் கவரும் புத்தாண்டு விருந்தின் வேடிக்கையை எதுவும் வெல்ல முடியாது. புத்தாண்டு கொண்டாட்டம் நமக்கு நல்லவிதமாக அமையும் போது அந்த ஆண்டு முழுக்க நல்லதாகவே அமையும். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், ரகளை, சுவையான சாப்பாடு, பானங்கள் என புத்தாண்டை இனிமையாகவும் கம்மி பட்ஜெட்டிலும் வரவேற்க நீங்கள் செல்ல வேண்டிய இடம் தான் அழகிய கடற்கரை நகரமான புதுச்சேரி! புதுச்சேரியில் எங்கே எல்லாம் பார்ட்டிகள் நடக்கிறது? ஒரு டிக்கெட்டின் விலை எவ்வளவு? இலவச பார்ட்டிகள் எங்கே என்று பார்ப்போமா?

New Year Party

புத்தாண்டை புதுவிதமாக வரவேற்க புதுச்சேரி செல்வோமா

பிரெஞ்சு காலனி ஆதிக்கச் செல்வாக்கு, அழகிய கடற்கரைகள், பல ஊர் மக்கள், கண்கவர் இசை நிகழ்ச்சிகள், பானங்கள் என உங்கள் நண்பர்களோடு புத்தாண்டை வரவேற்க இப்போதே புதுச்சேரியில் நடைபெறும் புத்தாண்டு விருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்! புத்தாண்டு ஈவ் கொண்டாட்டங்களின் போது நீங்கள் புதுச்சேரியின் கலகலப்பான தெருக்களை ஆராயலாம், ருசியான பிரஞ்சு மற்றும் இந்திய உணவு வகைகளை ரசிக்கலாம், புதிய நண்பர்களோடு இரவு முழுக்க நடனமாடி புத்தாண்டை வரவேற்கலாம்!

புதுச்சேரியில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாடங்கள்

வண்ணமயமான பல கடற்கரைகள், அமைதியான ஆசிரமம், அழகான ஆரோவில், பிரெஞ்சு காலனித்துவ கட்டிடக்கலை, பழங்கால கோவில்கள், வித விதமான கபேக்கள், படகு சவாரி, சர்பிங், ஸ்கூபா என சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பல வித அம்சங்கள் புதுச்சேரியில் இருந்தாலும், பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னையிலிருந்து கூட்டம் கூட்டமாக இளசுகள் புதுச்சேரிக்கு செல்வது இரவு பார்ட்டிகள் மற்றும் பப்களில் ஆட்டம் போடத் தான்!

New Year Party

புத்தாண்டை கோலாகலமாக வரவேற்கும் புதுவை

கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதற்கு முன்னே புதுவை நகரம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிப்பட்டு மின்ன ஆரம்பிக்கிறது. இந்த விழாக்கோலம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மட்டுமே அல்ல, அடுத்த ஒரு வாரத்திலேயே வரவிருக்கும் புத்தாண்டை வரவேற்க தான்! புத்தாண்டு பிறப்பதற்கு குறைந்துது 10 நாட்களுக்கு முன்னரே, புது வருட கொண்டாட்டத்தின் அதிர்வுகள் புதுவையில் கால் பதித்து விடுகிறது. இந்த ஆண்டும் அது போலவே புதுவையில் ஏற்கனவே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பார்ட்டிகள், பப்கள், நியூ இயர் வாக், கோவில்கள், தேவாலயத்தில் நைட் மாஸ், கடற்கரைகளில் கொண்டாட்டம் என எல்லா வகையான கூட்டத்தினருக்கும் புதுவை ஏதோ ஒன்றை வழங்குகிறது. நீங்கள் இதில் எந்த வகையோ அப்படி உங்கள் கொண்டாட்டத்தை தேர்வு செய்யுங்கள்.

உலகத்தர பப்களில் புத்தாண்டு கொண்டாட்டம்

புதுவையில் இரவு கலாச்சாரம் என்பது மேற்கத்திய நாடுகளைப் போல மெருகேறிக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு வார இறுதியும் இங்கு துடிப்பான பார்ட்டிகள் நடைபெறுகின்றன. ஏறக்குறைய புதுவையின் எல்லா முக்கிய வீதிகளிலும் நாம் ஒரு பப்பை கண்டுபிடித்துவிடலாம். வார இறுதிகளிலே பார்ட்டி என்றால், புத்தாண்டு அன்று சொல்லவா வேண்டும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள புதுவையின் பிரபலமான பப்பில் கலந்துக் கொண்டு புத்தாண்டை கொண்டாடி வரவேற்றிடுங்கள்!

New Year Party

எந்த இடத்தில் எவ்வளவு கட்டணம்

1. சன்பர்ன் ரீலோட் NYE - ஈடன் பீச் - நுழைவுக்கட்டணம் ரூ.3000 முதல்

2. ஃபுல் மூன் நியூ இயர் ஈவ் 2025 புதுச்சேரி - சான்ட்டியூன் பீச் - நுழைவுக்கட்டணம் ரூ.999 முதல்

3. சஜன்கா லைவ் இன் புதுச்சேரி - அசோக் பீச் ரிசார்ட்ஸ் - நுழைவுக்கட்டணம் ரூ.1500 முதல்

4. ஸ்டார்லைட் சொயிரீ நியூ இயர் பார்ட்டி - அமிட்டி ஸ்கை பிஸ்ட்ரோ - நுழைவுக்கட்டணம் ரூ.499 முதல்

5. நியூ இயர் ஈவ் பார்ட்டி புதுச்சேரி - ஆசியன் ஹவுஸ் - நுழைவுக்கட்டணம் ரூ.299 முதல்

6. தி லாஸ்ட் ஹேங்ஓவர் பார்ட்டி 2025 - ஹாப்பர்ஸ் பார் & கிட்சன் - நுழைவுக்கட்டணம் ரூ.2499 முதல்

7. வைப் 2025 ரிவர் சைடு நியூ இயர் பார்ட்டி - பிராங்கோ தமிழ் வில்லாஸ் - நுழைவுக்கட்டணம் ரூ.999 முதல்

8. நியூ இயர் நைட் பார்ட்டி - கிராவிட்டி ரெஸ்டோ பப் - நுழைவுக்கட்டணம் ரூ.2999 முதல்

9. பாண்டிச்சேரி நியூ இயர் பார்ட்டி - OMG பப் & கிட்சன் - நுழைவுக்கட்டணம் ரூ.2999 முதல்

10. KEMET 2024 பாண்டிச்சேரி - பிரணவ் பீச் ரெசார்ட் - நுழைவுக்கட்டணம் ரூ.999 முதல்

11. நியூ நோ பாஸ் பார்ட்டி - ஹெய்ஸ்ட் நைட்லைஃப் - நுழைவுக்கட்டணம் ரூ.2999 முதல்

ப்ரோமினெட் பீச் இலவச கொண்டாட்டம்

மேற்கூறிய அனைத்து இடங்களுக்கும் நாம் கட்டாயம் செலவு செய்ய வேண்டும். ஆனால் இந்த இடத்திற்கு செல்ல உங்களுக்கு எந்த கட்டணமும் தேவையில்லை. ஏனென்றால் இது முற்றிலும் இலவசம். புதுவை சுற்றுலாத் துறையால் ப்ரோமினெட் கடற்கரையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. புதுவையின் பாதி இளசுகள் கூட்டம் இந்த இடத்தில் தான் வட்டமடிக்குமாம்! இங்கு உற்சாகமான இசை இசைக்கப்படுகிறது, நீங்கள் நடனமாடலாம். புத்தாண்டு பிறக்கும் போது வெடிக்கும் வான வேடிக்கைகளை பார்த்து மகிழலாம். முகம் தெரியாத நண்பர்களுடன் புத்தாண்டு வாழ்த்து சொல்லி சந்தோஷத்தை பரிமாறலாம்.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+