எத்தனையோ சினிமாக்களில் பல அற்புதமான, அழகான இடங்களை பெரிய திரையில் கண்டு ரசித்துள்ளோம். அந்த இடங்களுக்கு நாமும் நேரில் சென்று பார்க்க மாட்டோமா என்று கூட சிலருக்கு தோன்றி இருக்கும். அப்படி சினிமாவில் கண்டு ரசித்த காட்சிகளை நேரிலும் கண்டு ரசிக்க வேண்டுமா? அப்போ வாங்க இந்த இடங்களுக்கு ஒரு டூர் போய் விட்டு வருவோம்.

உதய்ப்பூர்
கம்பீரமான அரண்மனைகள், மின்னும் ஏரிகள், ராஜ வசீகரத்துடன் கூடிய கோட்டை போன்றவை உதய்ப்பூரின் அழகுக்கு மகுடம் போல் இருப்பவை. பாலிவுட் படங்களிலும் இங்குள்ள அரண்மனைகள், ஏரிகள், கோட்டைகளை கண்டு ரசித்திருப்பீர்கள்.
ஸ்பிதி பள்ளத்தாக்கு
அழகான மலைகள், பனிப் பள்ளத்தாக்குகள், அடர் நீல வானம் மற்றும் அடர்த்தியான நிலத் தோற்றங்கள் கொண்ட ஸ்பிதி, பாலிவுட்டின் படமான இன்டர்ஸ்டெல்லர் திரைப்படத்தில் வரும் காட்சிகளை நமக்கு நினைவுபடுத்தும். இது இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ளது. இத ஒரு குளிர்த்த பாலைவனம் ஆகும். குலு, லடாக் போன்ற பிரபலமான பகுதிகுளும் இங்கு தான் அமைந்துள்ளன.

சித்ரகோட் நீர்வீழ்ச்சி
சத்தீஸ்கரில் உள்ள இந்த அற்புதமான நீர்வீழ்ச்சி குறிப்பாக மழைக்காலங்களில் ஒரு சாகசப் படத்தில் வரும் கற்பனை காட்சியைப் போல அனைவரையும் உணரச் செய்யும். 90 அடி உயரம் கொண்ட இந்த நீர்வீழ்ச்சி மலைக் காலங்களில் சிவப்பு நிறமாகவும், கோடை காலங்களில் வெள்ளை நிறமாகவும் காட்சி அளிக்கும். கிட்டதட்ட 300 மீட்டர் நீளம் கொண்ட இந்த நீர்வீழ்ச்சியை, இந்தியாவின் நயாகரா என்றே அழைக்கிறார்கள்.
ஹம்பி
ஹம்பியின் பழங்கால கட்டிட கலைகள், பாறைகள் நிறைந்த நிலப்பரப்புகள் மற்றும் மாய அதிர்வுகள் ஹம்பியை ஒரு வரலாற்று காவியமாக உருவகப்படுத்துகிறது. விஜய நகர பேரரசின் சான்றாகவும், கட்டிடக் கலைக்கு சான்றாகவும் அமைந்துள்ள அற்புதமான நகரம். சினிமாக்களில் கூட காணாத அற்புதமான அழகிய இடங்களை இங்கு காண முடியும்.
டாவ்கி, மேகாலயா
டாவ்கியில் உள்ள உம்ங்கோட் நதியின் தெள்ளத் தெளிவான நீர், காற்றில் மிதக்கும் படகுகளின் சவாரி போன்றவை திரைப்பத்தில் தோன்றும் மாயை காட்சியை போல் தோற்றம் அளிக்கும். டாவ்கி நதியில், கேம்பிங் மற்றும் போட்டிங் செய்வது மாயாஜால அனுபவம் ஆகும். இந்த நதி நீர் இரவில் வைரம் போல் ஒளி வீசுவதை காண்பதற்கே பரவசமாக இருக்கும்.

குல்மார்க்
பனி மூடிய புல்வெளிகளும் பைன் காடுகளும் குல்மார்க்கை கனவு நிறைந்த கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் வரும் கனவு நிறைந்த காட்சி போல் தோற்றமளிக்கும். அந்தரத்தில் வின்சில் பறந்த படி பள்ளத்தாக்கின் அழகையும் ரசிக்கும் அற்புதமான அனுபவத்தை, பல படங்களில் பார்த்த காட்சிகளை நேரில் கண்ட அனுபவத்தை ஏற்படுத்தும்.
அந்தமானின் ராதா நகர் கடற்கரை
நீல நிற நீர், வெள்ளை மணல் மற்றும் அசையும் பனை மரங்கள் ராதா நகர் கடற்கரை ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் வரும் கடற்கரையை போன்று தோற்றமளிக்கிறது. பல படங்களில் நாம் கண்டு ரசித்த தீவு காட்சிகளை இங்கு தான் உள்ளன. இயற்கை அழகிற்கு பெற் பெற்ற கடற்கரை இது. சன் ரைஸ், சன் செட் போன்றவற்றையும் இங்கு கண்டு ரசிக்க முடியும்.



Click it and Unblock the Notifications



