Search
  • Follow NativePlanet
Share
» »புதுச்சேரிக்கு பேமிலி டூர் போறீங்களா? குழந்தைகளை துள்ளி குதிக்க வைக்கும் இந்த இடங்களுக்கு ஒரு விசிட் அடிக்க ம

புதுச்சேரிக்கு பேமிலி டூர் போறீங்களா? குழந்தைகளை துள்ளி குதிக்க வைக்கும் இந்த இடங்களுக்கு ஒரு விசிட் அடிக்க ம

இந்தியாவில் ஐரோப்பாவின் ஒரு பகுதியாகவும், சென்னை மாநகரிலிருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யூனியன் பிரதேசம் புதுச்சேரி. இங்கு பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், கோயில்கள், அழகான கடற்கரைகள் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன. லீவுக்கு குடும்பத்துடன் புதுச்சேரி செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கு ஏற்ற முக்கியமான, செம ஜாலியான இடங்கள் சிலவற்றை பார்க்கலாம்.

Pudducherry

போர் நினைவுச் சின்னம்

புதுச்சேரியின் கடற்கரையில் அமைந்துள்ள பிரெஞ்சு போர் நினைவுச் சின்னம் உள்ள இடத்திற்கு குழந்தைகளை அழைத்து சென்று வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ள வைக்கலாம்.

பாரதி பூங்கா

புதுச்சேரியில் அமைந்துள்ள பாரதி பூங்கா குழந்தைகள் ரசித்து மகிழ்ந்து விளையாட கூடிய அற்புதமான இடம் ஆகும். இந்தப் பூங்காவில் பழைய சிற்பங்கள், சிலைகள், கற்சிற்பங்கள் மற்றும் கம்பீரமான கட்டிடங்கள் ஆகியவை நிறைந்துள்ளன.

காந்தி சிலை

புதுச்சேரியின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மகாத்மா காந்தி சிலை 13 அடி உயர வெண்கல சிலையாகும். இது ப்ரோமனேட் கடற்கரையில் உள்ளது. இது ஒரு பிரபலமான சுற்றுலா தளமாகவும், நகரத்தின் முக்கிய அடையாளமாக உள்ளது. இங்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லலாம்.

Pudducherry

தாவரவியல் பூங்கா

புதுச்சேரியில் உள்ள தாவரவியல் பூங்காவில் சுமார் 1500 தாவர வகைகள் உள்ளன. இவை தோட்டம் முழுவதும் 30 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ராட்சத மரங்களும், புதை வடிவ தாவரங்களும், புதுச்சேரி தாவரவியல் பூங்காவின் சிறப்பு அம்சங்கள் ஆகும். இந்தப் பூங்காவின் முதன்மை நோக்கம் கல்வியை ஊக்குவிப்பதும், தாவரங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை பரப்புவதுமாகும். எனவே உங்கள் குழந்தைகளை மறக்காமல் அழைத்துச் செல்லுங்கள்.

மா பாண்டி

இங்கு அனைத்து விதமான புத்தகங்கள் கைவினைப் பொருள்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள இடமாகும்.

அருங்காட்சியகம்

புதுச்சேரியின் வரலாற்று தகவல்கள், பாரம்பரிய பொருட்கள், வரலாற்று சின்னங்களை பற்றி குழந்தைகள் தெரிந்து கொள்ள அருங்காட்சியகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பாரடைஸ் பீச்

சுன்னம்பாரில் இருந்து படகு சவாரி, கண்கவரும் அழகிய கடற்கரை, வெள்ளை நிற மென்மையான மணல் அமைதியான சூழல் ஆகியவை அனைவரின் மனதையும் கவர்ந்து விடும். குழந்தைகள் விளையாடி மகிழ பல வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளன. இது தவிர ராக் பீச் உள்ளிட்ட பல கடற்கரைகள் புதுச்சேரியில் உள்ளன.

அரவிந்தர் ஆசிரமம்

புதுச்சேரியில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான இடங்களில் ஒன்று அரவிந்தர் ஆசிரமம். யோகா, தியானம், ஆன்மிக ஆகியவற்றை பயிற்சி செய்வதற்கு மட்டுமின்றி குழந்தைகளை கவரும் வகையில் நீச்சல் பயிற்சி, விளையாட்டுக்கள், நூலகங்கள், யோகா உள்ளிட்ட பல பயிற்சிகள் இங்கு அளிக்கப்படுகின்றன.

சுன்னம்பார் படகு இல்லம்

சுன்னம்பார் ஆற்றில் இந்த படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இது சுன்னம்பார் ஆறு, வங்கக் கடலுடன் இணையும் இடமாகும். நண்பர்கள், குடும்பத்தினருடன் செல்ல ஏற்ற இடமாகம். இங்கு ஸ்பீட் போட், மோட்டார் போட் உள்ளிட்ட பல வகையான போட்கள் உள்ளதால் படகு சவாரி, சாகச பயணங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும்.

More News

    Read more about: puducherry
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+