Search
  • Follow NativePlanet
Share
» »நகரேஷூ காஞ்சி - காஞ்சிபுரத்தின் யாரும் அறியாத வரலாறு - தெரிந்து கொள்வோமா?

நகரேஷூ காஞ்சி - காஞ்சிபுரத்தின் யாரும் அறியாத வரலாறு - தெரிந்து கொள்வோமா?

காஞ்சிபுரம் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது

தன் பழங்காலப் பெருமையை இன்றும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் தமிழக நகரம் என்று பார்த்தால், அதில் புராதனமான காஞ்சிபுரம் நகரமும் அடங்கும். இந்நகரம், பல கோயில்களை கொண்டுள்ளதனால் மட்டுமல்ல, இது பல்லவ மன்னர்களின் தலைநகரமாகவும் இருந்த காரணத்தினாலும், பெரும் புகழ் பெற்றுள்ளது. இன்றும், சில சமயங்களில் இதன் பழைய பெயர்களான காஞ்சியம்பதி என்றும் கொஞ்சிவரம் என்றும் அழைக்கப்படுகிறது.வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், இந்நகரை ஆயிரம் கோயில்களின் நகரம் என்றே அறிந்து வைத்துள்ளனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து சுமார் 72 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்நகரத்திற்கு செல்வது எளிது. இந்த நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம் செயல்பட்டுவருகிறது. வாருங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அழகிய சுற்றுலா தலங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

 காஞ்சிபுரம் கோவில்கள்கள்

காஞ்சிபுரம் கோவில்கள்கள்

காஞ்சிபுரம் தமிழகத்தின் அதிக கோவில்கள் கொண்ட ஆன்மீக நகரம் என்றாலும் மிகை ஆகாது. அந்த அளவுக்கு கோவில்கள் நகரைச் சுற்றியும், காஞ்சி மாவட்டத்தைச் சுற்றியும் நிறைந்துள்ளன. இந்த மாவட்டத்தின் பல பகுதிகள் சென்னையை ஒட்டி இருப்பதால் இந்த 10 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. சரி காஞ்சிபுரத்தில் இருக்கும் கோவில்கள் பற்றி தெரியுமா?


ஏகாம்பரநாதர் கோவில்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிவ பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் ஆகும்.

1300 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவில் இது

பஞ்சபூதங்களுள் நிலத்தை குறிக்கும் கோவில் இது

இந்தியாவின் உயரமான கட்டிடங்களில் ஒன்றாக காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் அமைந்துள்ளது.


காமாட்சியம்மன் கோவில்

தேவியின் அவதாரம் காமாட்சி அம்மனுக்கு எழுப்பப்பட்ட கோவில் இதுவாகும்.

காமாட்சியம்மன் கோவிலில், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் கால ஓட்டத்தின் சோதனைகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் சிதைந்த பல்வேறு பகுதிகள் மற்றும் கட்டமைப்புகள், மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

காமாட்சி அம்மன், நின்ற கோலத்திலில்லாமல் உட்கார்ந்த கோலத்தில் காட்சியளிப்பது, இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்


கைலாசநாதர் கோவில்

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த கோவில் பல்லவ மன்னர் நரசிம்மனால் கட்டப்பட்டதாகும்.

சிறப்பான கட்டுமானம் மற்றும் ஒளியில்லா ஒரு சிறு சந்நிதியின் நேர் மேலே அமையப்பெற்றுள்ள விமானம் ஆகியவற்றுக்காக கைலாசநாதர் கோவில் பெரிதும் பேசப்படுகிறது.

கைலாசநாதர் கோவிலில் உள்ள மரச்சட்டங்கள் பலவற்றில், சிவபெருமான், நடராஜர் தோற்றத்தில் காணப்படுகிறார்

Ssriram mt

காஞ்சிபுரம் விடுதிகள்

காஞ்சிபுரம் விடுதிகள்


காஞ்சிபுரத்துக்கு சுற்றுலா வருபவர்கள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய பல தனியார் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. விடுதிகள் தொடர்பான தகவல்களுக்கு

 சென்னை - காஞ்சிபுரம்

சென்னை - காஞ்சிபுரம்

சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த மாவட்டங்களாகும். அதுமாதிரியே காஞ்சிபுரம் நகரமும் சென்னைக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது.

நீங்கள் விளம்பரங்களில் காணும் சென்னைக்கு மிக அருகில் வீட்டு மனைகள் பெரும்பாலும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவைதான். சரி சென்னையிலிருந்து காஞ்சிபுரத்துக்கு எப்படி செல்லலாம்?

சென்னையிலிருந்து மூன்று வழித் தடங்களில் காஞ்சிபுரம் நகரத்தை அடையமுடியும்.

1 சென்னை - திருப்பெரும்புதூர் - காஞ்சிபுரம்

2 சென்னை - படப்பை - வாலாஜா - காஞ்சிபுரம்

3 சென்னை - மறைமலைநகர் - வாலாஜா - காஞ்சிபுரம்

மூன்று வழிகளிலுமே போக்கு வரத்து சிக்கல் , இடையூறுகள் நிச்சயம் இருக்கும் என்றாலும், இரண்டாவது வழித்தடமே சென்னையிலிருந்து காஞ்சிபுரத்துக்கு பலர் அறிவுரைப்பது.

காஞ்சிபுரம் சேலைகள்

காஞ்சிபுரம் சேலைகள்

காஞ்சிபுரம் பட்டு சேலைகள் உலகமெங்கிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பட்டு நூலில், தங்கச் சரிகை சேர்த்து நெய்யப்படும் இச்சேலைகள், முற்காலத்தில் வாழ்ந்த பெண்கள் மட்டுமல்லாது, இக்காலத்து நவீன பெண்களும் விரும்பும் வண்ணம் நெய்யப்படுகின்றன. இச்சேலைகள், தென்னிந்தியாவின் உடைக் கலாச்சாரத்தில் முக்கியமான அங்கமாக இருப்பினும், தமிழர்களின் தனிப்பெருமை வாய்ந்த பாரம்பரியம் மற்றும் கலாச்சாரப் பெருமை பொருந்தியதாகும்.

 காஞ்சிபுரம் சிறப்பு உணவுகள்

காஞ்சிபுரம் சிறப்பு உணவுகள்

காஞ்சிபுரத்தில் செய்யப்படும் இட்லி தனி சுவை கொண்டது. இது பலராலும் விரும்பி வாங்கி உண்ணப்படுவது. மேலும் மாலை வேளைகளில் தெருவோர கடைகளில் விற்கப்படும் பஜ்ஜி உள்ளிட்ட பொருள்களும் சுற்றுலாப் பயணிகளால் விரும்பி உண்ணப்படுவது.

காஞ்சிபுரத்திலிருந்து வெளியில் செல்ல

காஞ்சிபுரத்திலிருந்து வெளியில் செல்ல

காஞ்சிபுரம் ரயில் நிலையம்

காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் ரயில் நிலையம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது. பொடிநடையாக நடந்தே சென்றுவிடலாம். 1 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இது.

காமாட்சியம்மன் கோவிலிலிருந்தும் கிட்டத்தட்ட அதே தொலைவில்தான் ரயில் நிலையம் அமைந்துள்ளது.

எப்படி அடைவது

காஞ்சிபுரம், நாட்டின் பிற பகுதிகளுக்கு, சாலை வழி மற்றும் இரயில் வழி போக்குவரத்து சேவைகளினால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையமே, இவ்வூருக்கு மிக அருகில் அமைந்துள்ள விமான நிலையம் ஆகும். காஞ்சிபுரத்தின் வானிலை, வெப்பமான கோடைகாலமும், இரம்மியமான குளிர்காலமுமாக மாறி மாறி காணப்படும்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+