கிருஷ்ணப்ப நாயக் எனும் தளபதியால் 11ம் நூற்றான்டில் உருவாக்கப்பட்ட இந்த ஹாசன் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது. உள்ளூர் குலதெய்வமான ஹாசனம்பா எனும் தெய்வத்தின் பெயரைக்கொண்டுள்ள இந்த நகரம் கர்நாடக மாநிலத்தின் கட்டிடக்கலைத் தலைநகரமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த மாவட்டம் முழுவதுமே ஹொய்சளர் காலத்து உன்னதங்களையும் சின்னங்களையும் காண முடிகிறது என்பது குறிப்படத்தக்கது. இப்படி கண்கொள்ளா காட்சிகள் நிறைந்த ஒரு இடத்தை பார்ப்பதற்கு உங்களுக்கும் ஆசை இருக்கும் அல்லவா.... வாருங்கள் ஒரு சூப்பர் சுற்றுலா போய் வரலாம்

பொதுத் தகவல்கள்
வானிலை 25 டிகிரி செல்சியஸ்
சிறந்த காலம் - எப்போது வேண்டுமானாலும் வருடம் முழுவதும் செல்லலாம்
செலவழிக்கும் காலம் - 1 நாள் முழுவதும் குறைந்த பட்சம் செலவழிக்கலாம்
chetan tg

பெயர்க்காரணம்
கர்நாடக மாநில தலை நகரான பெங்க ளூருவில் இருந்து 187 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பகுதி. இங்கு சுற்றுலா செல்ல பல இடங்கள் காணப்படுகின்றன. இந்த நகரின் பெயர் ஹாசனம்பா எனும் கடவுளின் பெயரிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. இதன் பொருள் சிரிக்கும் அன்னை என்பதாகும்.
Ashwin Kumar

கட்டிடக் கலை தலைநகரம்
இது கர்நாடக மாநிலத்தின் கட்டிடக் கலை தலை நகரமாக விளங்குகிறது. இது அப்படி போற்றப் படுவ தற்கு காரணம் இல்லாமல் இல்லை. இங்குள்ள கட்டிடங்களும் பழங்கால கலைகள் நிறைந்த நினைவுச் சின்னங்களும் இதற்கான காரணத்தை விளக்கும்.
Prof tpms

என்னெல்லாம் பாக்கலாம்
1 ஹெய்சாலா கோயில்கள்
2 கோரூர் அணை
3 செட்டிஹல்லி ஆலயம்
4 ஸ்ரீ ரங்கநாத கோயில்
5 ராமநாதப்பூர் கோயில்கள்
6 கேதாரேஸ்வரர் கோயில்
Karsolene

தங்கும் இடங்கள்
இந்த ஊரிலேயே நிறைய தங்கும் விடுதிகள் காணப்படுகின்றன. வசதிகளுக்கு ஏற்றப் படி அவர்களின் கட்டணங்களும் மாறுபடுகின்றன. குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் முதல் வாடகை விடுதிகளை நாம் காண முடியும்.
நீங்கள் தங்க வேண்டும் என ஆசைப்பட்டால் முன் கூட்டியே புக் செய்வது சிறப்பு. ஏனென்றால் சீசன் நாட்களில் எளிதில் எல்லா விடுதிகளும் புக் ஆகிவிடும்.
Arbu bhai

இங்கிருந்து எளிதில் அடையக் கூடிய மற்ற சுற்றுலாத் தளங்கள்
குடகு மலை
கூர்க் அல்லது கொடகு என்று அழைக்கப்படும் மலைப்பிரதேசம் கர்நாடக மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்று. கர்நாடக மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலநாட் பிரதேசத்தில் இது உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டரிலிருந்து 1715 மீட்டர் வரையான உயரத்தில் இது அமைந்துள்ளது. இந்த மலைப்பிரதேசத்தில் என்றும் பசுமையான காடுகள், வளப்பமான பசுமை பள்ளத்தாக்குகள், பனி படர்ந்த மலைகள், பரந்து காணப்படும் காபி மற்றும் தேயிலை தோட்டங்கள், ஆரஞ்சு தோப்புகள், விண்ணைத் தொடும் சிகரங்கள் மற்றும் சலசல வென ஓடும் ஓடைகள் என்று பல விதமான இயற்கை அம்சங்கள் நிறைந்து காணப்படுவதால் இது கர்நாடகாவின் காஷ்மீர் என்றும் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்றும் அழைக்கப்படுகிறது
ஹலேபீடு
ஹலேபீடு எனும் பெயருக்கு ‘தொன்மையான நகரம்' என்பது பொருளாகும். இது முற்காலத்தில் ஹொய்சள சாம்ராஜ்யத்தின் தலைநகராக திகழ்ந்துள்ளது. அக்காலத்தில் இந்த நகரம் ‘துவாரசமுத்ரா' எனும் பெயரால் அழைக்கப்பட்டுள்ளது. சமுத்திர வாயில் என்பது அந்த பெயரின் பொருளாகும்.
கர்நாடக மாநிலத்தில் ஹாசன் மாவட்டத்தில் மாநிலத்தலைநகரான பெங்களூரிலிருந்து 184 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் கர்நாடகாவின் பாரம்பரிய தலைநகரமான மைசூரிலிருந்து 118 கி.மீ தூரத்தில் உள்ளது. 12ம் நூற்றாண்டு வரை ராஜகீர்த்தியுடன் விளங்கிய இந்த நகரம் இரண்டு முறை பாமனி சுல்தானால் சூறையாடப்பட்ட பின்னர் ஹலேபீடு (சிதில நகரம்) என்ற பெயரை பெற்றுவிட்டது.
சிரவணபெலகொலா
சிரவணபெலகொலா நகரத்துக்குள் நுழைவதற்கு முன்பே பயணிகள் 17.5 அடி உயரத்தில் உயர்ந்து நிற்கும் கோமதேஸ்வரர் சிலையை பார்க்க முடியும். 978ம் ஆண்டில் எழுப்பப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட சிலையானது ஒரு காலத்தில் சிரவணபெலகொலா நகரம் பிரசித்தமான ஜைன திருத்தலமாக விளங்கியிருப்பதற்கான ஆதாரமாக திகழ்கிறது.
HoysalaPhotos

ஹாசன் பற்றிய தகவல்கள்
கிருஷ்ணப்ப நாயக் எனும் தளபதியால் 11ம் நூற்றான்டில் உருவாக்கப்பட்ட இந்த ஹாசன் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது. உள்ளூர் குலதெய்வமான ஹாசனம்பா எனும் தெய்வத்தின் பெயரைக்கொண்டுள்ள இந்த நகரம் கர்நாடக மாநிலத்தின் கட்டிடக்கலைத் தலைநகரமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த மாவட்டம் முழுவதுமே ஹொய்சளர் காலத்து உன்னதங்களையும் சின்னங்களையும் காண முடிகிறது என்பது குறிப்படத்தக்கது. அக்காலத்திய ஹொய்சள சாம்ராஜ்யம் 11 - 14ம் நூற்றாண்டுகளில் துவார சமுத்ரத்தை தலைநகராக கொண்டு ஆளப்பட்டுள்ளது. அந்த நகரின் அடையாளங்களை இன்னமும் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹலேபீடு எனும் இடத்தில் பார்க்க முடிகிறது.
Matthew Logelin

எப்படி அடைவது
சாலை, ரயில் போன்ற போக்குவரத்து மார்க்கங்களின் மூலமாக மாநிலத்தின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் எளிதில் சென்றடையும் வகையில் ஹாசன் நகரம் அமைந்துள்ளது. அருகாமை விமானநிலையங்கள் மங்களூரில் 115 கி.மீ தூரத்திலும், பெங்களூரில் 187 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளன. எனவே இந்த நகருக்கு விஜயம் செய்வது சுலபமாகவே உள்ளது.
பேலூர், ஹலேபீடு, சிரவணபெலகொலா மற்றும் கோரூர் அணை போன்றவை இங்குள்ள சில பிரசித்தமான சுற்றுலாத்தலங்களாகும். ஹாசன் நகரத்தில் பல வகையான உயர்தர தங்குமிடங்களும் மூன்று நட்சத்திர மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் மிகுந்திருப்பதால் பயணிகளுக்கு வசதிகுறைவு ஏதுமில்லை. கர்நாடக மாநிலத்தின் உன்னதமான வரலாற்றுப்பின்னணி மற்றும் பாரம்பரியம் போன்றவற்றை அறியும் ஆர்வம் உங்களுக்கு இருப்பின் கண்டிப்பாக நீங்கள் ஒரு முறை இந்த ஹாசன் நகருக்கு விஜயம் செய்துதான் ஆகவேண்டும். அதற்கு இப்போதிருந்தே திட்டமிடுங்கள்.
Ashwin Kumar



Click it and Unblock the Notifications




