Search
  • Follow NativePlanet
Share
» »உத்தரகண்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்!!!

உத்தரகண்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்!!!

By

உத்தரகண்ட் மாநிலம் வடக்கில் திபெத் நாட்டையும், கிழக்கில் நேபாள நாட்டையும் எல்லைகளாக கொண்டு, வடமேற்கில் ஹிமாசலப்பிரதேச மாநிலத்துக்கும் மற்றும் தெற்கே உத்தரப்பிரதேச மாநிலத்துக்கும் நடுவே இமயமலையின் பேரற்புதமாக வீற்றிருக்கிறது.

உத்ராஞ்சல் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த மாநிலம் 2007-ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து உத்தரகண்ட் என்று அதிகாரபூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆன்மீக வழிபாட்டுத்தலங்கள் முதல் இயற்கைக்காட்சிகள் மற்றும் சாகச மலையேற்ற பயணங்கள் வரை உத்தரகண்டின் சுற்றுலா அம்சங்களுக்கு குறைவேயில்லை.

புதிய புதிய இடங்களும் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வளர்ச்சியடைவதால் இங்குள்ள சுற்றுலாத்தலங்களின் பட்டியலானது நீண்டு கொண்டே தான் செல்கிறது.

உத்தரகண்ட் ஹோட்டல்களும், கொஞ்சம் டீல்களும்!

முன்ஷியாரி

முன்ஷியாரி

முன்ஷ்யாரி எனும் இந்த பனிமலை பிரதேசம் உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் நகரிலிருந்து 127 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மஹேஷ்வர் குண்ட் மற்றும் தம்ரி குண்ட் ஆகிய ஏரிகள் இந்த இடத்தை சூழ்ந்துள்ளன. கோரி கங்கா எனும் ஆறும் இப்பகுதியில் உற்பத்தியாகிறது. இங்கு அமையப்பெற்றுள்ள முன்ஷ்யாலி புக்யால் என்று அழைக்கப்படும் காட்டு மலர்கள் நிரம்பிய பரந்த புல்வெளிப்பிரதேசம் பயணிகளை வெகுவாக கவர்கிறது.

படம்

பத்ரிநாத்

பத்ரிநாத்

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் மலைவாசஸ்தலம் நாட்டின் புகழ்பெற்ற ஆன்மிக ஸ்தலங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது.

படம் : Greatartistssteal

தெஹ்ரி

தெஹ்ரி

இந்தியாவின் உயரமான அணையாக கருதப்படும் தெஹ்ரி அணைக்காக தெஹ்ரி நகரம் புகழுடன் அறியப்படுகிறது.

தெஹ்ரி ஹோட்டல்கள்

படம் : sporadic

ரிஷிகேஷ்

ரிஷிகேஷ்

உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற புண்ணியஸ்தலமான ரிஷிகேஷ், கங்கை ஆற்றின் கரையில் இருக்கும் இந்துக்களின் மிக முக்கிய இடமாகும். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் இமயமலையைக் காண்பதற்கும், கங்கையில் நீராடுவதற்காகவும், மதஸ்தலங்களைப் பார்வையிடுவதற்காகவும் ரிஷிகேஷில் குவிகிறார்கள்.

படம் : Tony Leon

ருத்ரபிரயாக்

ருத்ரபிரயாக்

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சிறு நகரமான ருத்ரபிரயாக் சிவபெருமான் ருத்ரா அவதாரத்தில் வீற்றிருக்கும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும்.

படம் : Vvnataraj

ஹர்சில்

ஹர்சில்

உத்தரகாசி 72 கி.மீ தொலைவில் பாகீரதி நதியின் கரையில் அமைந்துள்ள அழகிய சிறு கிராமம் ஹர்சில்.

படம் : Bipin Gupta

உத்தரகாசி

உத்தரகாசி

உத்தரகண்ட் மாநிலத்தில் பாய்ந்தோடும் பகீரதி நதிக்கரையில் உத்தரகாசி அமைந்துள்ளது.

படம் : Atarax42

கேதார்நாத்

கேதார்நாத்

இமயமலையின் கர்வால் மலைத்தொடர்களில், கடல் மட்டத்திலிருந்து 3584 மீ உயரத்தில் கேதார்நாத் ஸ்தலம் அமைந்துள்ளது. கேதார்நாத் கோயில் ஹிந்து மரபின் முக்கிய ஆன்மீக கேந்திரமாக வணங்கப்படுகிறது. 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையான ஜோதிர்லிங்கம் இக்கோயிலில் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.

படம் : Paul Hamilton

பித்தோராகர்

பித்தோராகர்

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள பித்தோராகர் மாவட்டம் இமயமலைத்தொடர்களுக்கான நுழைவாயிலாக கருதப்படுகிறது. இது ஒரு புறம் சோர் பள்ளத்தாக்கு பகுதியையும், மறுபுறம் அழகிய அல்மோரா மாவட்டத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது. அதோடு இங்கு பாய்ந்தோடும் காளி ஆறு பித்தோராகர் மாவட்டத்தையும், நேபாள் பகுதியையும் பிரிக்கிறது.

படம் : Shyamal

தார்சூலா

தார்சூலா

பனியை உடுத்திக் கொண்டிருக்கும் பஞ்ச்சூலி சிகரங்கள் தார்சூலாவை ஜோஹர் பள்ளத்தாக்கிலிருந்து பிரிக்கின்றன. இந்நகரத்திலுள்ள சுற்றுலாத்தலங்களில் மிகவும் புகழ் பெற்றதாக மானசாரோவர் அல்லது மனாஸ் ஏரி அறியப்படுகிறது.

படம் : rajkumar1220

ஜோஷிமத்

ஜோஷிமத்

உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் புனித நகரமான ஜோஷிமத் இமயமலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ளது. இந்த எழில் கொஞ்சும் மலைப்பிரதேசத்தில் சுமார் 1200 வருடங்கள் பழமையான கல்பவிருக்ஷா என்ற மரம் உள்ளது. இதன் கீழ் அமர்ந்து ஆதி குரு ஷங்கராச்சார்யா தியானம் செய்ததாக சொல்லப்படுகிறது.

ஜோஷிமத் ஹோட்டல்கள்

படம் : christian0702
http://en.wikipedia.org/wiki/File:Ropeway_at_Joshimath,_Uttarakhand.jpg

அல்மோரா

அல்மோரா

அல்மோரா மலையிலிருந்து அழகு கொஞ்சும் பனிமூடிய இமயமலையின் முழு அழகையும் பார்த்து ரசிக்கலாம். கசார் தேவி கோவில், நந்தா தேவி கோவில், சித்தை கோவில், மற்றும் கதர்மல் சூரியக் கோவில் ஆகியவை இங்கு அமைந்துள்ள பிரபலமான கோயில்களாகும்.

அல்மோரா ஹோட்டல்கள்

படம் : Travelling Slacker
https://www.flickr.com/photos/travellingslacker/9299767731

தனௌல்டி

தனௌல்டி

ஓவியம் போன்ற மலைவாழிடமாக இருக்கும் தனௌல்டி, கடல் மட்டத்திலிருந்து 2286 மீட்டர் உயரத்தில், உத்தரகண்டிலுள்ள கர்ஹ்வால் மாநகராட்சியில் அமைந்துள்ளது. இங்கு வருபவர்கள் இதன் அருகில் இருக்கும் டூன் பள்ளத்தாக்கின் மதிமயங்கும் அழகில் சொக்கி விழுவது நிச்சயம்.

படம் : Alokprasad

முசூரி

முசூரி

உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள மூசூரி, 'மலைகளின் ராணி' என அழைக்கப்படுகிறது. சமயச் சிறப்பு வாய்ந்த இடங்களான யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களின் நுழைவாயில் என்றும் முசூரி அழைக்கப்படுகிறது. சிவாலிக் மலைகள் மற்றும் டூன் பள்ளத்தாக்கின் எழில்மிகு தோற்றத்தை முசூரியில் இருந்து காணலாம்.

முசூரி ஹோட்டல்கள்

படம் : Harshanh
http://commons.wikimedia.org/wiki/File:Kempty_Falls_13.JPG

நைனித்தால்

நைனித்தால்

‘இந்தியாவின் ஏரி மாவட்டம்' என்று பெருமையோடு அழைக்கப்படும் நைனித்தால் நகரமானது இமயமலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு முக்கியமான மலைவாசஸ்தலமாகும்.

நைனித்தால் ஹோட்டல்கள்

படம் : Enjoymusic nainital

டேராடூன்

டேராடூன்

கங்கை ஆறு டேராடூன் பகுதியின் கிழக்குப்பகுதியிலும் யமுனை ஆறு மேற்குப்பகுதியிலும் ஓடுகின்றன. ஒவ்வொரு வருடமும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இந்த டேராடூன் பிரதேசம் கவர்ந்து இழுக்கிறது. இனிமையான பருவநிலை மற்றும் இயற்கை எழில் நிரம்பிய சுற்றுச்சூழல் ஆகியவை இங்கு பயணிகளை வெகுவாக கவர்கின்றன.

டேராடூன் ஹோட்டல்கள்

படம் : Paul Hamilton

சோப்தா

சோப்தா

சோப்தா உத்தரகாண்ட்டின் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2680 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மலை வாசஸ்தலம் ஆகும். கண்ணைக் கவரும் அழகிய இயற்கைக் காட்சிகள் மற்றும் புக்யால்ஸ் என்றழைக்கப்படும் செழுமையான பச்சைப் புல்வெளிகளைக் கொண்டிருப்பதினால் இந்த இடம் ‘குட்டி சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படுகிறது.

படம் : Vvnataraj

நௌகுசியாடல்

நௌகுசியாடல்

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அழகிய சிறிய கிராமமான நௌகுசியாடலில் உள்ள ஏரியின் அழகும், பல தீர விளையாட்டுக்களும் ஒரு நிறைவான சுற்றுலா அனுபவத்தை தரும். மேலும் மலை மீது பைக் ஓட்டுவதும் இங்கு புகழ்பெற்ற சாகச பொழுதுபோக்காகும். இவ்வாறு மலை மீது பைக் ஓட்டிச் செல்வதால், யாரும் கால் பதிக்காத பல இடங்களுக்கு சென்று வரலாம்.

படம் : Dr Satendra

சௌகோரி

சௌகோரி

உத்தரகண்ட் மாநிலம் பித்தோர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நகரம் வடக்கில் திபெத் மற்றும் தெற்கில் தேராய் ஆகியவற்றை எல்லைகளாக கொண்டுள்ளது. இந்த சிறிய கிராமத்தில் கண்ணைக்கவரும் இயற்கைக்காட்சிகள் மற்றும் பசுமையான பைன் மரங்கள் மற்றும் ஓக் மரங்கள் அடர்ந்த ஊசியிலைக்காடுகள் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம். அவற்றோடு கவர்ச்சியான சோள வயல்கள் மற்றும் பழத்தோப்புகள் போன்றவை இங்கு பயணிகளை கவரும் அம்சங்கள்.

சௌகோரி ஹோட்டல்கள்

படம் : Tribhuwan

ராணிக்கேத்

ராணிக்கேத்

ராணிக்கேத் மலைவாசஸ்தலம் நைனித்தால் நகரிலிருந்து 60 கி.மீ தூரத்திலும், அல்மோரா நகரத்திலிருந்து 50 கி.மீ தூரத்திலும் இயற்கையின் மடியில் ஏகாந்தமாக பொழுதைக் கழிப்பதற்கேற்றவாறு பைன், ஓக் மற்றும் தேவதாரு மரங்கள் அடர்ந்த பசுமையான இயற்கை எழிற்சூழலை கொண்டுள்ளது. இது செழிப்பான புல்வெளிகள் மற்றும் இயற்கை எழில் ததும்பி வழியும் வனப்பகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.

ராணிக்கேத் ஹோட்டல்கள்

படம் : Mrneutrino

கௌஸனி

கௌஸனி

உத்தரகண்ட் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து 6075 அடி உயரத்தில் கௌஸனி மலைவாசஸ்தலம் அமைந்துள்ளது. நம்முடைய தேசப்பிதா மகாத்மா காந்தி இப்பகுதியின் அழகில் மயங்கி, கௌஸனியை `இந்தியாவின் சுவிட்சர்லாந்து' என வியந்து கூறியுள்ளார்.

கௌஸனி ஹோட்டல்கள்

படம் : Ekabhishek

பவுரி

பவுரி

உத்தரகண்ட் மாநிலத்தின் கர்வால் மாவட்டத்தில் பவுரி மலைவாசஸ்தலம் அமைந்துள்ளது. பனியால் போர்த்தப்பட்டிருக்கும் பந்தர்புன்ச் மலை, ஜனலி மலை, கங்கோதரி குரூப், நந்ததேவி மலை, திரிசூல் மலை, சவுக்கம்பா மலை, கோரி பர்வத் மலை, ஹதி பர்வத் மலை, சுவர்க்கரோகினி மலை, ஜோகின் குரூப், தலாய சாகர் மலை, கேதர்நாத் மலை, சுமேரு மலை மற்றும் நீல்காந்த் மலை போன்றவற்றின் அழகுக் காட்சிகளை பவுரியிலிருந்து பார்த்து ரசிக்கலாம்.

படம் : Fowler&fowler

லந்தோர்

லந்தோர்

உத்தரகண்ட் மாநில தலைநகர் டேராடூனிலிருந்து 35 கி.மீ தொலைவில் லந்தோர் மலைவாசஸ்தலம் அமைந்துள்ளது.

படம் : anurag agnihotri

முக்தேஸ்வர்

முக்தேஸ்வர்

நைனித்தால் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்தேஸ்வர் நகரம் 350 பழமையான சிவன் கோயிலுக்காக புகழ்பெற்றது. அதுமட்டுமல்லாமல் முக்தேஸ்வர் நகரம் கவின் கொஞ்சும் இயற்கை சுற்றுலாத் தலமாகவும் அறியப்படுகிறது.

முக்தேஸ்வர் ஹோட்டல்கள்

படம் : Sanjoy Ghosh

கார்பெட் தேசிய பூங்கா

கார்பெட் தேசிய பூங்கா

உத்தரகண்ட்டின் நைனித்தால் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியாவின் பழமையான தேசிய பூங்காவான கார்பெட் தேசிய பூங்கா, பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த புலி வேட்டை மன்னன் ஜிம் கார்பெட்டின் பெயரால் அழைக்கப்படுகிறது. உலகத்திலேயே அதிகமான காட்டுப்புலிகளை கொண்ட இந்தியாவில், கார்பெட் தேசிய பூங்காவில் மட்டும் சுமார் 160 புலிகள் உள்ளன.

கார்பெட் தேசிய பூங்கா ஹோட்டல்கள்

கங்கோத்ரி

கங்கோத்ரி

கங்கோத்ரி, இமாலயத்தின் எல்லைக்கருகே உத்தரகாசி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபலமான யாத்திரை ஸ்தலமாகும்.

படம் : Barry Silver

ஆலி

ஆலி

உலகம் முழுவதுமுள்ள சுற்றுலாப் பயணிகள் பனிச்சறுக்கு செய்து விளையாட ஏற்ற அழகிய சுற்றுலாத் தலம் ஆலி! கடல் மட்டத்திலிருந்து 2800 மீ உயரத்தில் உள்ள ஆலி, அங்குள்ள ஓக் மரங்களை கொண்ட சரிவுகள் மற்றும் பசுமையான ஊசியிலைக்காடுகளுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும்.

ஆலி ஹோட்டல்கள்

படம் : Mandeep Thander

ஹரித்வார்

ஹரித்வார்

'கடவுள்களின் நுழைவாயில்' என்றழைக்கப்படும் புகழ்பெற்ற யாத்ரீக ஸ்தலமான ஹரித்வார் ரிஷிகேஷ், கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய உத்தராகாண்டின் பிற புண்ணியஸ்தலங்களுக்கும் நுழைவாயிலாக விளங்குகிறது.

ஹரித்வார் ஹோட்டல்கள்

படம் : -.-Paul-.-

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+