Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் மிகப்பெரிய படப்பிடிப்பு வளாகம்!!!

உலகின் மிகப்பெரிய படப்பிடிப்பு வளாகம்!!!

By Arun

ஐதராபாத்திலிருந்து 25 கிலோ மீட்டடர் தொலைவில் உள்ள இராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி 1500 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் பெருமையாக அமைந்துள்ளது.

இது 'கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' பட்டியலில் உலகிலேயே சினிமாபடப்பிடிப்புக்கான மிகப்பெரிய படப்பிடிப்பு வளாகமாக இடம்பெற்றுள்ளது.

இந்த ஃபிலிம் சிட்டி படப்பிடிப்புத்தளமாக மட்டுமல்லாமல் பிக்னிக் சுற்றுலா, பார்ட்டி கொண்டாட்டம், தனியார் நிறுவன நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள், மாநாடுகள் மற்றும் தேனிலவுப்பயணம் ஆகியவற்றுக்காகவும் பயன்பட்டு வருகிறது.

இராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் கேளிக்கை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் போன்றவை பார்வையாளர்களுக்காக நடத்தப்படுகின்றன.

மேலும் ஷாப்பிங் வசதிகளும், உணவகங்களும், ஐந்து நட்சத்திர மற்றும் மூன்று நட்சத்திர தங்கும் விடுதிகளும் இங்கு அமைந்துள்ளதால் ஒரு முழுமையான பொழுதுபோக்கு தலமாக இராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி திகழ்ந்து வருகிறது.

படித்துப் பாருங்கள் : இந்தியாவுக்கு படையெடுக்கும் ஹாலிவுட் சினிமா!

ரயில் நிலையம்

ரயில் நிலையம்

ஏதேனும் ரயில் நிலையம் சென்று கூட்டத்துக்கு நடுவே ஷூட்டிங் செய்வதென்பது கடினம். எனவே இந்த ரயில் நிலையம் செட்டை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நுழைவாயில்

நுழைவாயில்

உலகின் மிகப்பெரிய படப்படிப்பு வளாகமான இராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியின் நுழைவாயில்.

இங்கிலாந்து செட்

இங்கிலாந்து செட்

இங்கிலாந்து செல்ல முடியாவதர்கள் இங்கிலாந்து வீதிகள் போலவும், வீடுகள் மாதிரியும் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த செட்டில் ஷூட்டிங் செய்துகொள்ளலாம்.

அரண்மனை தர்பார்

அரண்மனை தர்பார்

அரசர் காலத்து படங்கள் அல்லது தொலைக்காட்சி தொடர்கள் எடுப்பதற்கு வசதியாக உருவாக்கப்பட்டிருக்கும் அரண்மனை தர்பார் செட்.

பூங்கா

பூங்கா

இராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற பூங்காக்களில் ஒன்று.

சாலை செட்

சாலை செட்

ஷூட்டிங் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சாலை செட்.

பசுமையான சூழலில்

பசுமையான சூழலில்

இராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி பசுமையான மரங்கள் சூழ அமைந்திருக்கும் காட்சி.

நாடக அரங்கம்

நாடக அரங்கம்

நாடகம் நடத்துவதற்காக ஃபிலிம் சிட்டியில் உள்ள அமைப்பு.

செயற்கை குகை

செயற்கை குகை

பொதுவாக ஷூட்டிங் செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை குகை சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் பிரபலமாக உள்ளது.

அரண்மனை வாயில்

அரண்மனை வாயில்

பழைய அரண்மனை போன்ற அமைப்பும், அதன் வாயிலும்.

நடனக் காட்சி

நடனக் காட்சி

ஃபிலிம் சிட்டியில் ஒரு நடனக் காட்சி படம்பிடிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

சீன பாணி கட்டிடம்

சீன பாணி கட்டிடம்

சீன நாட்டின் கட்டிடக்கலையை எடுத்துக்கூறும் சீன பாணி கட்டிட அமைப்பு.

அற்புதமான தோட்டக்கலை

அற்புதமான தோட்டக்கலை

யானை, புலி என்று மிருகங்கள் போல் புற்கள் மற்றும் செடிகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.

வண்ணப் பூக்கள்

வண்ணப் பூக்கள்

தொட்டியில் வைத்து வளர்க்கப்படும் பல வண்ணப் பூக்கள்.

தாமரைக் குளம்

தாமரைக் குளம்

ஷூட்டிங் செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் செயற்கை தாமரைக் குளம்.

செயற்கை நீரூற்று

செயற்கை நீரூற்று

இயற்கை சூழ அமைந்திருக்கும் செயற்கை நீரூற்று.

அழகிய தோட்டம்

அழகிய தோட்டம்

இராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியின் பசுமையான சூழலுக்கு காரணமான மற்றொரு அழகிய தோட்டம்.

தேவயாணி பார்க்

தேவயாணி பார்க்

இராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியின் தேவயாணி பார்க்கில் அற்புதமான கலையம்சத்துடன் அமையப்பெற்றுள்ள சிற்பங்களில் இந்த நடன மங்கையின் சிலையும் ஒன்று.

நாட்டியத் தாரகை

நாட்டியத் தாரகை

தேவயாணி பார்க்கில் அமைந்துள்ள இந்த நாட்டியத் தாரகை, பெரும்பாலான பயணிகள் மனதை கொள்ளையடித்து விடுகிறாளாம்.

நடன மங்கைகள்

நடன மங்கைகள்

நடனத்தின் பல்வேறு முத்திரைகளை காட்சிப்படுத்தும் தேவயாணி பார்க்கின் நடன மங்கைகள்.

லெக் கார்டன்

லெக் கார்டன்

லெக் கார்டன் அழைக்கப்படும் இங்குள்ள இந்தச் சிலை சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.

படம் : Vincelaconte

ஹாலிவுட் செட்

ஹாலிவுட் செட்

அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய படப்பிடிப்பு ஸ்தலமான ஹாலிவுட் போலவே அமைக்கப்பட்டுள்ள செட்.

பயணிகள் வாகனம்

பயணிகள் வாகனம்

இராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியை சுற்றுலாப் பயணிகள் இந்த பயணிகள் வாகனத்தில் ஏறிச் சென்று சுற்றிப் பார்க்கலாம்.

ஃபந்துஸ்தான்

ஃபந்துஸ்தான்

குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த ஃபந்துஸ்தானில் குழந்தைகள் குதூகலமாக விளையாடி மகிழலாம்.

தேநீர் நிலையம்

தேநீர் நிலையம்

ஜாடி வடிவில் அமைக்கப்பட்டுள்ள தேநீர் நிலையம்.

சீறிப்பாயும் குதிரைகள்

சீறிப்பாயும் குதிரைகள்

அட்டகாசமான கலைப்படைப்பு!

சார்லி சாப்ளின்

சார்லி சாப்ளின்

நகைச்சுவை மேதை சார்லி சாப்ளின் அவர்களின் சிலை.

கேளிக்கை பூங்கா

கேளிக்கை பூங்கா

ஃபிலிம் சிட்டி வளாகத்தில் அமைந்துள்ள கேளிக்கை பூங்கா.

ஹாலிவுட் படங்களில் வருவது போன்ற செட்

ஹாலிவுட் படங்களில் வருவது போன்ற செட்

ஹாலிவுட் படங்களில் காட்டப்படும் ஷூட்டிங் ஸ்பாட்டுகளை ஞாபகப்படுத்தும் செட்.

மூவி மேஜிக்

மூவி மேஜிக்

ஃபிலிம் சிட்டி வளாகத்தில் உள்ள மூவி மேஜிக் கட்டிடம்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+