Search
  • Follow NativePlanet
Share
» »நீங்க இப்போதே கோவா கிளம்ப வேண்டும் என்பதற்கான சில காரணங்கள்

நீங்க இப்போதே கோவா கிளம்ப வேண்டும் என்பதற்கான சில காரணங்கள்

கோவாவிற்கு செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக விருப்பம் கொண்டிருக்கிறீர்களா?. இருந்தும் செலவு அதிகம் ஆகுமே என்ற கவலையில் நீண்ட நாட்களாக அந்த திட்டத்தை தள்ளி வைத்திருக்கிறீர்களா?. அந்த ஆசையை நிறைவேற்ற இது தான் சரியான தருணம். கோவாவை மிகக் குறைந்த செலவில் சுற்றிப்பார்க்க ஆசைப்படுபவர்கள் நவம்பர் மாதத்தில் கட்டாயம் கோவாவிற்கு செல்ல வேண்டும். இப்போது செலவு குறைவு என்பதோடு மட்டுமில்லாமல் நிறைய திருவிழாக்களும் நவம்பர் மாதத்தில் நடக்கின்றன.

வாருங்கள், நவம்பர் மாதத்தில் நாம் ஏன் கோவாவிற்கு செல்லவேண்டும் என்பதற்கான காரணங்களை தெரிந்துகொள்வோம்.

ஹோட்டல்களில் கட்டணம் மிகக்குறைவு :

ஹோட்டல்களில் கட்டணம் மிகக்குறைவு :

பொதுவாக நவம்பர் மாதம் off-season காலம் என்பதால் ஹோட்டல்களில் கட்டணம் மிகக்குறைவாகவே இருக்கும். கோவா சுற்றுலாவில் அதிக செலவு பிடிக்கும் விஷயம் ஹோட்டல்களில் தங்கும் கட்டணம் தான். சாதரணமாக 1500 முதல் 5000வரை கட்டணம் வசூலிக்கப்படும் அறைகள் நவம்பர் மாதத்தில் பாதி வாடைக்கு கிடைக்கும்.

அட்டகாசமான பைக் ரைட்

அட்டகாசமான பைக் ரைட்

நவம்பர் மாதத்தில் கோவாவில் இருக்கும் புகழ்பெற்ற கடற்கரைகளில் ஒன்றான வகேடார் கடற்கரையில் 'Raider Mania' என்ற பெயரில் ஆயிரக்ககணக்கான ராயல் என்பீல்ட் ரைடர்கள் நீண்ட தூர பைக் பயணம் மேற்கொள்கின்றனர்.

ராயல் என்பீல்ட் வண்டியின் மீது அளவில்லாத காதல் கொண்டவராக இருந்தால் இந்த ரைடில் நிச்சயம் கலந்துகொள்ளுங்கள்.

தனிமை என்றும் இனிமை !!

தனிமை என்றும் இனிமை !!

வருடம் முழுக்க கோவாவில் சுற்றுலாப்பயணிகளின் வருகை இருக்கும். ஆனால் நவம்பர் மாதத்தில் அது மிகவும் குறைவு. தனிமையில் கோவாவை சுற்றிப்பார்க்க விரும்புகிறவர்களுக்கு சிறந்த நேரம் நவம்பர் மாதமாகும்.

அதிக கூட்டம் இல்லாத கடற்கரைகளில் இனிமையாக, தனிமையாக சில நாட்களை கொண்டாட விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

பார்டி !!

பார்டி !!

இந்தியாவின் பார்டி தலைநகரமான கோவாவில் நவம்பர் மாதத்தில் நடக்கும் ரைடர் மேனியாவின் இறுதி நிகழ்ச்சியாக வகேடார் கடற்கரையில் அட்டகாசமான பார்டி நடக்கிறது.

இதில் ரகு திக்ஷித், கர்ஷ் காலே போன்ற உலகளவில் பிரபலமான டீஜேக்கள் கலந்துகொள்கின்றனர்.

சாகசங்கள் !!

சாகசங்கள் !!

பார்டி கொண்டாட்டங்களை தாண்டி கோவா சாகச விளையாட்டுகளுக்கும் பிரபலமானதாகும். இங்கே ஸ்கூபா டைவிங், பாராசெய்லிங், ஸ்நார்கிளிங் போன்ற விளையாட்டுகளில் நாம் ஈடுபடலாம்.

நவம்பர் மாதத்தில் நிலவும் இதமான வெப்பநிலை இதற்கு மிகவும் உகந்ததாகும்.

கோவா

கோவா

கோவாவில் இருக்கும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள் மற்றும் அங்கே தங்குவதற்கான ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+