67வது இந்திய குடியரசு தினவிழா வருகின்றன ஜனவரி 26ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கிறது. இவ்விழாவில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் பிரன்கிஸ் ஹோல்லாண்டே சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவிருக்கிறார். இந்தியாவின் கலாச்சார பெருமையையும், ராணுவ வலிமையையும் உலகுக்கு பறைசாற்றும் விதமாக கொண்டாடப்படும் இந்த விழாவை தொலைக்காட்சியில் காணும் அனைவருக்கும் இதில் ஒருமுறையாவது நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் ஒருமுறையாவது வந்திருக்கும்.
ஆனால், இதில் கலந்துகொள்ள எங்கு சென்று நுழைவுசீட்டு வாங்குவது? எங்கே தங்குவது என்பது போன்ற விஷயங்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரியாமல் இருக்கும். வாருங்கள் இந்திய குடியரசு விழாவில் எப்படி கலந்துகொள்வது? அதற்கான நுழைவு சீட்டுகள் எங்கே கிடைக்கும்? டெல்லியில் நாம் நிச்சயம் செல்ல வேண்டிய இடங்கள் மற்றும் அங்கே இருக்கும் தங்கும் விடுதிகள் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்வோம்.

இந்திய குடியரசு தின விழா !!
இந்தியா ஆங்கிலேயே அரசாங்கத்திடம் சுதந்திரம் பெற்ற பிறகு 1947ஆம் வருடம் ஆகஸ்ட் 28ஆம் தேதி Dr. அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கான குழு அமைக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நவம்பர் 26,1949 அன்று உலகிலேயே கைகளால் எழுதப்பட்ட மிகப்பெரிய ஆவணமான இந்திய அரசியலமைப்பு சட்டம் முடிக்கப்பட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற்றது. இந்த இந்திய அரசிலமைப்பு சட்டம் ஜனவரி 26,1950ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்நிகழ்வு தான் இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
Ramesh Lalwani

இந்திய குடியரசு தின விழா !!
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி மற்றும் ஜனவரி 26 குடியரசு தினம் ஆகியவை இந்திய அரசினால் நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும் தேசிய விழாக்கள் ஆகும்.
மற்ற இரண்டு விழாக்களை காட்டிலும் குடியரசு தினத்தின் போது அணிவகுப்புகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் என தலைநகர் டெல்லி விழாக்கோலம் கொள்கிறது.
Shilpi Boylla

அணிவகுப்பு !!
குடியரசு தலைவைரின் வசிப்பிடமான ராஸ்டிரபதி பவனில் தொடங்கி இந்தியா கேட் வரை குடியரசு தின அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த பல்வேறு படையணிகள், ராணுவ டேங்கர்கள் மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட ஏவுகணைகள் போன்றவை இடம்பெறுகின்றன.

அணிவகுப்பு !!
ஒவ்வொரு ஆண்டும் இந்த அணிவகுப்பில் தான் இந்தியாவின் ராணுவ வலிமை உலகுக்கு பறைசாற்றப்படுகிறது. இதில் என்னென்ன ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் இடம்பெறுகின்றன என்பதை உலகமே உற்று நோக்குகிறது என்றே சொல்லலாம்.

அணிவகுப்பு !!
ராணுவ அணிவகுப்பை தவிர இந்தியாவின் காலாச்சாரத்தை, அதன் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டும் விதமாக அலங்கார ஊர்திகளும் குடியரசு தின அணிவகுப்பில் முக்கிய இடம் வகிக்கின்றன.
ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒவ்வொரு ஊர்தி இந்த அணிவகுப்பில் இடம்பெறுகிறது.

சிறப்பு விருந்தினர்கள்!!
இந்திய அரசு ஒவ்வொரு குடியரசு தினத்தின் போதும் ஒரு வெளிநாட்டு அதிபரையோ அல்லது பிரதமரையோ சிறப்பு விருந்தினராக அழைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறது.
இந்த வருடம் பிரான்ஸ் நாட்டின் அதிபர் பிரான்கிஸ் ஹோல்லேண்டே சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவிருக்கிறார்.

எப்படி கலந்துகொள்வது?
இந்த விழாவில் பொதுமக்கள் கலந்துகொள்ள நுழைவுசீட்டு பெறவேண்டியது அவசியம். இந்த நுழைவு சீட்டுகள் கிடைக்கும் இடங்கள்
1.Government of India Tourist Office, 88 ஜன்பத்.
2.India Tourism Development Corporation (IDTC)
3.Parliament House Reception Office
4.ragati Maidan (Gate No. 1, Bhairon Road), Jantar Mantar (Main Gate), Shastri Bhawan (near Gate No. 1), India Gate (near Jamnagar House), Red Fort (near police picket).
இந்த இடங்கள் அனைத்திலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நுளைவுசீட்டுகளை பெறலாம்.

சமர்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்:
பாதுகாப்பு காரணங்களுக்காக நுழைவுசீட்டை பெறும்போது ஆதார் அட்டையை சமர்ப்பிக்கவேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது.

நுளைவுசீட்டின் கட்டணம் எவ்வளவு:
குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்வதற்கான நுழைவுச்சீட்டுகளுக்கான கட்டணம் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு ₹500, மற்ற இருக்கைகளுக்கு ₹200, ₹100 மற்றும் ₹50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
Ramesh Lalwani

டெல்லி:
குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக நீங்கள் டெல்லி சென்றால் அங்கிருக்கும் முக்கியமான சுற்றுலாத்தலங்களுக்கும் அவசியம் சென்று வரவேண்டும்.
டெல்லியில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள் பற்றிய விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.
Hotels in Delhi



Click it and Unblock the Notifications



