Search
  • Follow NativePlanet
Share
» »ஆசியாவின் மிகவும் விலையுயர்ந்த நகரம் இது தான் – இந்திய நகரங்களின் நிலை என்ன?

ஆசியாவின் மிகவும் விலையுயர்ந்த நகரம் இது தான் – இந்திய நகரங்களின் நிலை என்ன?

உணவு, உடை, இருப்பிடம் எனும் அடிப்படை தேவைகள் எந்த அளவுக்கு சுலபமாக அல்லது கடினமாக நம்மால் வாங்க முடிகிறதோ அதை வைத்து தான், நாம் வாழும் ஊர் விலையுயர்ந்ததா அல்லது வாழ்வதற்கு ஏற்றதா என்பதை முடிவு செய்கிறோம். அந்த வகையில் ஆசியாவிலேயே மிகவும் விலையுயர்ந்த நகரம் எனும் இடத்தைப் பிடித்திருப்பது சிங்கப்பூர் தான். சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் பெரும்பாலான தமிழர்களுக்கும் இந்த விஷயம் ஏற்கனவே தெரியும். இதற்கு அடுத்த இடங்களில் இருக்கும் நகரங்கள் என்னென்ன? இந்திய நகரங்களின் நிலை என்ன என்று பார்ப்போமா?

விலையுயர்ந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் சிங்கப்பூர்

உலகின் மிகப்பெரிய வாழ்க்கைச் செலவு தரவுத்தளமான நம்பியோ, சமீபத்தில் ஆசியாவின் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டது. இந்த தரவரிசை வாழ்க்கைச் செலவுகள், சொத்து விலைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள நகரங்களுக்கான பல காரணிகளைக் கருத்தில் கொள்கிறது, மேலும் ஆசியாவிற்கான பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பல இந்திய நகரங்களும் பட்டியலில் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

Costly city

தீர ஆய்வு சேயும் நம்பியோ தளம்

நம்பியோ என்பது உலகம் முழுவதிலுமிருந்து பங்களிப்பாளர்களிடமிருந்து தரவைச் சேகரிக்கும் ஒரு கூட்டத்தால் உருவாக்கப்பட்ட உலகளாவிய தரவுத்தளமாகும். வாழ்க்கைத் தரத்தை மதிப்பிடுவதற்கு அங்கு பங்களிப்பாளர்கள் வீட்டுவசதி, வாடகை, சம்பளம், போக்குவரத்து, சுகாதாரம், குற்றம் மற்றும் அவர்கள் வாழும் நாடுகள்/நகரங்கள் பற்றிய புள்ளிவிவரங்களைச் சேகரித்து அதன்படி நகரங்களின் வாழும் தரத்தை நிர்ணயம் செய்கிறது. அவர்களின் தரவு ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல, தரைவழி மற்றும் உள்ளூர் குடிமக்களை அடிப்படையாகக் கொண்டது.

முதல் மூன்று இடங்களைப் பிடித்த நகரங்கள்

வாழ்க்கைச் செலவு குறியீட்டில் 81.6 மதிப்பெண்களுடன், சிங்கப்பூர் ஆசியாவில் அதன் தற்போதைய வாழ்க்கைச் செலவு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ்-யாஃபோ 78.4 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஹாங்காங் 73.9 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Costly city

இந்தியாவில் விலையுயர்ந்த நகரம் எது?

இந்தப் பட்டியலில் 83 ஆசிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன, அவற்றில் 18 இந்திய நகரங்களும் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில், 25.3 மதிப்பெண்களுடன், மும்பை வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. அதைத் தொடர்ந்து, 24.6 மதிப்பெண்களுடன், குர்கான் இரண்டாவது மிகவும் விலையுயர்ந்த நகரமாக உருவெடுத்துள்ளது. பட்டியலில் உள்ள அனைத்து இந்திய நகரங்களும், அவற்றின் தரவரிசைகளும் இதோ.

பட்டியலில் இடம் பிடித்த இந்தியாவின் காஸ்ட்லியான நகரங்கள்

· மும்பை (61)

· குர்கான் (62)

· பெங்களூரு (65)

· புனே (66)

· டெல்லி (67)

· நொய்டா (68)

· ஹைதராபாத் (69)

· அகமதாபாத் (70)

· சென்னை (71)

· வதோதரா (73)

· கொல்கத்தா (74)

· சண்டிகர் (75)

· புவனேஸ்வர் (76)

· சூரத் (78)

· கொச்சி (79)

· ஜெய்ப்பூர் (80)

· லக்னோ (82)

· கோயம்புத்தூர் (83)

Costly city

மத்திய ஆசிய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள்

கஜகஸ்தானின் அல்மாட்டி மற்றும் அஸ்தானா, கிர்கிஸ்தானின் பிஷ்கெக் மற்றும் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் ஆகியவை மத்திய ஆசியாவில் இருந்து இந்த பட்டியலில் இடம் பெற்ற காஸ்ட்லியான நகரங்களாகும். ஹாங்காங், தென் கொரியாவின் சியோல், ஜப்பானின் டோக்கியோ, தைவானி தைபே, சீனாவின் சுசோ, ஷாங்காய், ஷென்சென், பெய்ஜிங், குவாங்சோ மற்றும் ஹாங்சோ ஆகிய கிழக்காசிய நாடுகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

தெற்கு ஆசிய, தென்கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய நாடுகள்

இலங்கையின் கொழும்பு, ஈரானின் தெஹ்ரான், இந்தியாவின் மும்பை, குர்கான், டெல்லி, பெங்களூரு, புனே, நொய்டா, நேபாளத்தின் காத்மாண்டு ஆகியவை தெற்கு ஆசிய காஸ்ட்லியான நகரங்களாகும். இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் சிங்கப்பூர், தாய்லாந்தின் ஃபூகெட், பட்டாயா மற்றும் பாங்காக், கம்போடியாவின் புனோம் பென், இந்தோனேசியாவின் பாலி, பிலிப்பைன்ஸின் மணிலா, மலேசியாவின் கோலாலம்பூர் ஆகியவை தென் கிழக்கு ஆசிய காஸ்ட்லியான நகரங்களாகும்.

இவை தவிர, இஸ்ரேலின் டெல் அவிவ்-யாஃபோ, ஜெருசலேம், ஹைஃபா, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா, தோஹா ஆகியவை இந்தப் பட்டியலில் இடம் பெற்ற மேற்கு ஆசிய நாடுகளாகும்!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+