Search
  • Follow NativePlanet
Share
» »கோவாவில் இருக்கும் 'ரகசிய' கடற்கரைகளை பற்றி தெரியுமா உங்களுக்கு ??

கோவாவில் இருக்கும் 'ரகசிய' கடற்கரைகளை பற்றி தெரியுமா உங்களுக்கு ??

இயற்கை அழகும், கேளிக்கை கொண்டாட்டங்களும் நிறைந்திருக்கும் கோவாவின் முக்கிய சுற்றுலா அம்சம் என்றால் அது சந்தேகமே இல்லாமல் அங்குள்ள கடற்கரைகள் தான். இந்தியாவில் கொண்டாட்டங்களின் உச்சமாக கோவா கடற்கரைகளில் நண்பர்களுடன் பார்டிகளில் ஈடுபடுவது, கடற்கரைகளில் விளையாடுவது போன்றவை சொல்லப்படுகின்றன.

விடிய விடிய ரகளையாக பார்டி செய்வதற்கும், கடலலைகளின் ஓசை நிறைந்திருக்க இயற்கையின் பேரழகை ரசிக்கவும் கோவா கடற்கரைகள் மிகச்சிறந்த இடமாகும். இருப்பினும் கோவா செல்லும் பலருக்கும் அங்கிருக்கும் பிரபலமான சில கடற்கரைகளுக்கு மட்டும் சென்றுவிட்டு திரும்புகின்றனர். அப்படியில்லாமல் கோவாவில் வெளி ஆட்களுக்கு அதிகம் தெரியாத கடற்கரைகளும் அங்கே நிறைய இருக்கின்றன. அப்படிப்பட்ட கோவாவில் இருக்கும் ரகசிய கடற்கரைகளை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

பட்டாம்பூச்சி கடற்கரை :

பட்டாம்பூச்சி கடற்கரை :

Butterfly beach என்று அழைக்கப்படும் இந்த கடற்கரையானது கோவாவில் இருக்கும் மிக மிக அழகான இடங்களில் ஒன்றாகும். கோவாவின் மற்ற கடற்கரைகளை போல இல்லாமல் சற்றும் அசுத்தம் இன்றி இருக்கிறது. இந்த கடற்கரை பலோலம் கடற்கரைக்கு அருகில் அமைந்திருக்கிறது. இந்த கடற்கரை இருக்கும் இடம் அடர்த்தியான வனப்பகுதி என்பதால் இதனை படகு பயணத்தின் மூலம் மட்டுமே அடையமுடியும்.

Photo:Nicolas Mirguet

பட்டாம்பூச்சி கடற்கரை :

பட்டாம்பூச்சி கடற்கரை :

இந்த படகு பயணத்தின் போது நாம் இந்தியாவில் பார்ப்பதற்கு மிகவும் அரிதான டால்பின் மீன்களை பார்க்க முடியும். வழக்கமான கடற்கரை சூழலில் இருந்து விலகி தனிமையாக கொண்டாட விரும்புகிறவர்களுக்கு இந்த 'பட்டாம்பூச்சி கடற்கரை' மிகச்சிறந்த தேர்வாக அமையும்.

Photo:Mathanki Kodavasal

பட்டாம்பூச்சி கடற்கரை :

பட்டாம்பூச்சி கடற்கரை :

உங்களுக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வமிருந்தால் மாலை நேரத்தில் இந்த கடற்கரையில் நிகழும் சூரிய அஸ்தமனம் மற்றும் இந்த கடற்கரையை சுற்றியுள்ள வனப்பகுதியில் இருக்கும் விதவிதமான பறவைகள் போன்றவற்றை குவியத்தில் சிறை பிடிக்க தவறி விடாதீர்கள்.

Photo:swati kulkarni

பட்டாம்பூச்சி கடற்கரை :

பட்டாம்பூச்சி கடற்கரை :

பட்டாம்பூச்சி கடற்கரையில் நிகழும் அற்புதமான சூரிய அஸ்தமனத்தின் புகைப்படம்.

போட்டோ:swati kulkarni

கல்ஜிபாக் பீச் :

கல்ஜிபாக் பீச் :

கோவாவில் இன்னும் அதிகமாக யாருக்கும் தெரியாத அற்புதம் தான் இந்த கல்ஜிபாக் பீச் ஆகும். கோவாவின் தென்கோடி முனையில் கர்நாடக மாநில எல்லைக்கு வெகு அருகில் இந்த கடற்கரை அமைந்திருக்கிறது. இதனாலேயே இங்கு சுற்றுலாப்பயணிகள் வருகை வெகு குறைவாக இருக்கிறது.

கல்ஜிபாக் பீச் :

கல்ஜிபாக் பீச் :

வழக்கமான கோவா கடற்கரைகளை போல இந்த கடற்கரையை ஒட்டி தங்கும் விடுதிகளோ அல்லது குடிசைகளோ ஏதும் இல்லை என்பதால் இந்த கடற்கரை வெகு சுத்தமாக இருக்கிறது.

கல்ஜிபாக் பீச் :

கல்ஜிபாக் பீச் :

இதமான சூழல் இங்கே நிலவுவதாலேயே கடல் ஆமைகள் தங்களுடைய முட்டைகளை இட இந்த கடற்கரைக்கு வருகின்றன. இவை இடும் முட்டைகளை பாதுகாக்கும் நோக்கில் கடற்கரையெங்கும் சிறிய சிறிய வலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கல்ஜிபாக் பீச் :

கல்ஜிபாக் பீச் :

இந்த கல்ஜிபாக் கடற்கரையில் இருக்கும் கடலானது மிகவும் தெளிவாக இருப்பதால் நீச்சலடிக்க சிறந்த இடமாக இது சொல்லப்படுகிறது. இந்த கடற்கரையை இருசக்கர வாகனம் மூலம் பாட்நேம் கடற்கரையில் இருந்து எளிதாக வந்தடையலாம். அடுத்த முறை கோவா சென்றால் இந்த கடற்கரைக்கு செல்ல மறந்துவிடாதீர்கள்.

அகோண்டா பீச் :

அகோண்டா பீச் :

கோவாவில் சுவையான உணவுகளுக்கு பெயர்போன இடமாக இருக்கிறது இந்த அகோண்டா பீச். சற்றும் குப்பைகள் இல்லாத வெள்ளை மணல் கடற்கரையாகும் இது.

அந்தமான் தீவில் இருக்கும் கடற்கரைகள் நீங்கலாக இந்தியாவில் இருக்கும் சுத்தமான கடற்கரைகளில் ஒன்றாக இந்த கடற்கரை சொல்லப்படுகிறது.

போட்டோ:Aleksandr Zykov

அகோண்டா பீச் :

அகோண்டா பீச் :

இந்த கடற்கரையை ஒட்டியே ஏராளமான கோவா உணவு விடுதிகள் இருக்கின்றன. இவற்றில் அதிசுவையான உணவுகளை ருசித்து மகிழ்ந்தபடியே கடற்கரையின் ஏகாந்தத்தை ரசிக்கலாம்.

போட்டோ:Vinod Sankar

அகோண்டா பீச் :

அகோண்டா பீச் :

மற்ற கோவா கடற்கரைகளை காட்டிலும் இங்கே அலைகள் அதிக உயரம் எழும்பும் என்பதால் அலைச்சறுக்கு விளையாட்டில் ஆர்வமுடையவர்களுக்கு இந்த கடற்கரை மிகவும் ஏற்றதாக இருக்கிறது.

போட்டோ:Aleksandr Zykov

அகோண்டா பீச் :

அகோண்டா பீச் :

நிறைந்த அமைதியும், இதமான தட்பவெட்பமும் நிலவும் மாலை வேளையில் இங்கே கூடும் வெளிநாட்டினர் ஒரு குழுவாக யோகா பயிற்சிகளில் ஈடுபடுக்கின்றனர்.

போட்டோ:Dennis Yang

அகோண்டா பீச் :

அகோண்டா பீச் :

சூரியனின் பொன்னிறமான கதிர்களால் தங்க குளம் போல ஒளிரும் அகோண்டா கடற்கரையின் அழகு ததும்பும் ஓர் புகைப்படம்.

போட்டோ:Vinod Sankar

அகோண்டா பீச் :

அகோண்டா பீச் :

அகோண்டா கடற்கரையோரத்தில் உள்ள உணவகம் ஒன்றின் வெளியே இருக்கும் விதவிதமான உணவு வகைகளின் பட்டியல்.

போட்டோ:PRODaniel Incandela

கோவா :

கோவா :

கோவா நகரை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

கோவா நகரில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

photo:Yorick_R

More News

    Read more about: goa beaches adventure
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+