Search
  • Follow NativePlanet
Share
» »அரபிக்கடலில் அமைந்திருக்கும் அற்புத தீவு எது தெரியுமா?

அரபிக்கடலில் அமைந்திருக்கும் அற்புத தீவு எது தெரியுமா?

By Naveen

கல்யாண சீசன் இப்போது களைகட்ட துவங்கியிருக்கிறது. திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்கு செல்லும் வழக்கம் இப்போது நம்ம ஊர்களில் அதிகரித்துள்ளது. எனினும் தேனிலவுக்கு செல்லும் பலரும் ஊட்டி, கொடைக்கானல், மூணார் போன்ற இடங்களுக்கு செல்வதையே வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதைத்தாண்டி இந்தியாவினுள் குறைந்த செலவில் செல்லக்கூடிய பல அற்புதமான இடங்கள் பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை.

அப்படி கேரளாவில் இருந்து சில நூறு கி.மீ தொலைவில் இருக்கும் லட்சத்தீவுகள் அரபிக்கடலில் அமைந்திருக்கும் சுற்றுலா சொர்க்கமாகும். தேனிலவுக்கு செல்ல இதைவிட நல்லதொரு இடமே இல்லையெனலாம். வாருங்கள், லட்சத்தீவுகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

லட்சத்தீவு !!

லட்சத்தீவு !!

சுத்தமான வெள்ளை மணல் கடற்கரைகள் , சக்குபா டைவிங் செய்யவும், ச்னார்கிளிங் செய்ய ஏதுவான கடல் பகுதிகளையும் கொண்டிருக்கும் லட்சத்தீவில் வேறெங்கும் இல்லாத இயற்கையின் பேரழகை எந்த தொந்தரவும் இன்றி ரசிக்கலாம்.

Sankara Subramanian

லட்சத்தீவு:

லட்சத்தீவு:

லட்சத்தீவுகள் என்பது 27 சிறிய தீவுகளின் கூட்டமாகும். இதில் 10 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசிக்கின்றனர்.

கவரத்தி, அகத்தி, மினிகாய் மற்றும் அமினி ஆகியவை லட்சத்தீவுகளில் இருக்கும் முக்கிய தீவுகளாகும். கவரத்தி இதன் தலைநகராக செயல்படுகிறது.

Sankara Subramanian

லட்சத்தீவு - அகத்தி தீவு:

லட்சத்தீவு - அகத்தி தீவு:

அகத்தி தீவு லட்சத்தீவில் இருக்கும் மிகமுக்கியமான தீவுகளில் ஒன்றாகும்.அற்புதமான கடற்கரைகளும்,பீச் ரீசார்டுகளும், ஸ்நார்க்ளிங் போன்ற சாகச விளையாட்டுகளும் நடைபெறும் இந்த தீவுக்கு வரும் முன்பாக முன்னனுமதி பெறவேண்டியது அவசியமாகும்.

Sankara Subramanian

லட்சத்தீவு - அகத்தி தீவு:

லட்சத்தீவு - அகத்தி தீவு:

'அகத்தி தீவு பீச் ரிசார்ட்' மட்டும் 'ஷீ ஷேல்ஸ் பீச் ரிசார்ட்' என இங்குள்ள இரண்டு ஹோட்டல்களில் ஏதேனும் ஒன்றில் நாம் தங்கிக்கொள்ளலாம்.

Sankara Subramanian

லட்சத்தீவு - கவரத்தி தீவு:

லட்சத்தீவு - கவரத்தி தீவு:

கவரத்தி தீவு தான் லட்சதீவுகளின் தலைநகரமாக இருக்கிறது.தோராயமாக கொச்சி கடற்கரையிலிருந்து 360 கி.மீ தூரத்திலும் அகத்தி தீவிலிருந்து 50 கி.மீ தூரத்திலும் இந்த தீவு அமைந்துள்ளது.

Sankara Subramanian

லட்சத்தீவு - கவரத்தி தீவு:

லட்சத்தீவு - கவரத்தி தீவு:

4.22 ச.கி.மீ பரப்பளவை மட்டுமே கொண்ட இந்த தீவு முழுதையும் சுலபமாக சுற்றிப்பார்த்து விடலாம். நல்ல சாலை வசதிகளை கொண்ட இந்நகரத்தில் ஊர் சுற்றிப்பார்க்க பைக்குகள் வாடகைக்கு கிடைக்கின்றன.

பயிற்சியாளர்களுடன் கூடிய ஸ்கூபா டைவிங் நீர் மூழ்கு பயணங்கள் இங்கு சுற்றுலாப்பயணிகளுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. ஆழத்தில் செல்வதற்கு அச்சப்படுபவர்கள் குறைந்த ஆழத்தில் மேற்கொள்ளப்படும் முறையான ‘ஸ்நார்க்கெலிங்' உபகரணங்களை பயன்படுத்தி டைவிங்'கில் ஈடுபடலாம்.

Sankara Subramanian

லட்சத்தீவு - கவரத்தி தீவு:

லட்சத்தீவு - கவரத்தி தீவு:

வெண்மையான மணற்பரப்புடன் எழிலுடன் காட்சியளிக்கும் காவரத்தி தீவு பல வருடங்களாக கோடைச்சுற்றுலா பயணிகளிடையே பிரசித்தமாக அறியப்படுகிறது. மரகதப்பச்சை நிறத்தில் ஸ்படிகம் போன்று பிரகாசிக்கும் இந்த தீவின் கடற்கரை நீர் உற்சாகமான மதிய குளியலுக்கு மிகவும் ஏற்றது. அதிகம் பரபரப்பில்லாத அமைதியான சூழலைக்கொண்டுள்ள இந்த தீவு ஒரு வித்தியாசமான விடுமுறை அனுபவத்தை தர காத்திருக்கிறது.

Thejas

லட்சத்தீவு - கல்பேணி தீவு:

லட்சத்தீவு - கல்பேணி தீவு:

2.8 ச.கி.மீ பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளகல்பேணி தீவு இதன்2.8 கி.மீ நீளஆழம் குறைவான அலைகள் அற்ற ஸ்படிகம் போன்ற தூய நீருடன் காட்சியளிக்கும் கடலுக்கு பிரபலமானதாகும்.

Sankara Subramanian

லட்சத்தீவு - கல்பேணி தீவு:

லட்சத்தீவு - கல்பேணி தீவு:

கல்பேணி தீவில் டிப் பீச் எனபடும் ஆழமற்ற மரகதப்பச்சை தரைக்கடல் பகுதி காணப்படுகிறது. இது கடல் குளியல் மற்றும் ஸ்நார்க்கலிங் போன்ற பொழுதுபோக்குகளுக்கு மிகவும் ஏற்ற கடற்கரைப்பகுதியாகும்.

Thejas

லட்சத்தீவு - கல்பேணி தீவு:

லட்சத்தீவு - கல்பேணி தீவு:

இங்குள்ள தங்கும் காட்டேஜ் வீடுகள் இரண்டு பிரிவுகளைக் கொண்டதாக கட்டப்பட்டுள்ளன. (இரண்டு வெவ்வேறு விருந்தினர் வாடகைக்கு எடுக்கும்படியாக). கல்பேணி தீவிற்கு செல்வது மிகவும் எளிதாகவே உள்ளது. இந்தியாவின் மேற்குக்கடற்கரையிலுள்ள கொச்சியிலிருந்து இந்த தீவிற்கு நேரடி சொகுசுப்படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது.

Paul Varuni

லட்சத்தீவு - புகைப்படங்கள்:

லட்சத்தீவு - புகைப்படங்கள்:

லட்சதீவின் அற்புதமான புகைப்படங்கள் !!

Paul Varuni

லட்சத்தீவு - புகைப்படங்கள்:

லட்சத்தீவு - புகைப்படங்கள்:

லட்சதீவின் அற்புதமான புகைப்படங்கள் !!

Thejas

லட்சத்தீவு - புகைப்படங்கள்:

லட்சத்தீவு - புகைப்படங்கள்:

லட்சதீவின் அற்புதமான புகைப்படங்கள் !!

Paul Varuni

லட்சத்தீவு - புகைப்படங்கள்:

லட்சத்தீவு - புகைப்படங்கள்:

லட்சதீவின் அற்புதமான புகைப்படங்கள் !!

Sankara Subramanian

More News

Read more about: honeymoon kerala lakshadweep
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+