Search
  • Follow NativePlanet
Share
» »ஊருன்னா இப்படி தான் இருக்கணும்...சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் உலகின் டாப் 10 தூய்மை நகரங்கள்

ஊருன்னா இப்படி தான் இருக்கணும்...சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் உலகின் டாப் 10 தூய்மை நகரங்கள்

எங்கு திரும்பினாலும் பளிச்சென்று அப்படி ஒரு சுத்தத்தால் உலக சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்ப்பதுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் மாசு இல்லாத தூய்மையான 10 நகரங்கள் உலகத்தில் எங்கெங்கு உள்ளன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். வேல்டு டூர் பிளான் பண்ணினா ஒருமுறை இந்த நகரங்களுக்கு சென்று நேரில் பார்த்து விட்டு வாருங்கள்.

சூரிச் சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகரம் அழகிய தெருக்கள் மற்றும் நன்கு பராமரிக்கப்படும் பொது போக்குவரத்து, நகர்புறத்தை தூய்மையாக வைத்திருக்க திட்டமிடல் ஆகியவற்றால் உலகின் தூய்மையான நகரங்களில் ஒன்றாக உள்ளது.

ஹெல்சின்கி பின்லாந்து

பின்லாந்து நாட்டில் உள்ள ஹெல்சின்கி அதன் சுத்தமான காற்று, பரந்து விரிந்த பசுமையான பூங்காக்கள் மற்றும் நல்ல சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கு புகழ்பெற்றது. சுற்றுலா செல்வதற்கு ஏற்ற சூப்பரான நகரமாக திகழ்கிறது.

சிங்கப்பூர்

கடுமையான தூய்மைச் சட்டங்கள், களங்கமற்ற சுத்தமான தெருக்கள் மற்றும் பசுமையான இடங்களுக்கு பெயர் பெற்ற சிங்கப்பூர், சுற்றுச்சூழல் உணர்வுள்ள பயணிகள், பயணம் செய்வதற்கு ஏற்ற சரியான இடமாகும்.

கோபன்ஹேகன் டென்மார்க்

குறைந்த மாசு அளவுகள் மற்றும் வலுவான சுற்றுச்சூழல் கொள்கைகளை கொண்ட, மிதிவண்டிகளுக்கு ஏற்ற நகரம் இது. மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடம் ஆகவும், சுத்தமான நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது.

வியன்னா ஆஸ்திரியா

வியன்னா நகரம் சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வியப்பூட்டும் விதமாக அதன் சுத்தமான பொது இடங்களும், வலுவான கழிவு மேலாண்மைகள் மற்றும் சுகாதார மேம்பாடுகளால் புகழ்பெற்றது. அதன் வரலாற்று சிறப்பை அழகாக தக்க வைத்துக் கொள்ளும் ஒரு நகரமாகும்.

ரெய்க்ஜாவிக் ஐஸ்லாந்து

இயற்கையை கெடுக்காமல் அழகாக புதுப்பித்து அதன் ஆற்றலால் ஈக்கப்படும் ரெய்க்ஜாவிக் நகரம், புதிய காற்று மற்றும் தூய்மையை தேடும் பயணிகளுக்கு ஒரு நல்ல தேர்வாகும்.

டோக்கியோ ஜப்பான்

ஜப்பான் ஒரு பெரு நகரமாக இருந்தாலும் டோக்கியோ அதன் அழகான தெருக்கள் திறமையான குப்பையை அகற்றும் மேலாண்மை மற்றும் தூய்மையை ஊக்குவிக்கும் கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது.

அடிலெய்டு ஆஸ்திரேலியா

நன்கு திட்டமிடப்பட்ட நகர்ப்புற இடங்கள் மற்றும் வலுவான சுற்றுச்சூழலை உருவாக்கும் முயற்சிகள், அடிலெய்டு நகரத்தை ஒரு சுத்தமான நகரமாக காட்டுகிறது. அடிலெய்டில் உள்ள சுத்தமான கடற்கரைகள் மற்றும் தெருக்களும் அங்கு செல்லும் பயணிகளை கவரும் விதத்தில் உள்ளது.

கால்கரி கனடா

வட அமெரிக்காவின் தூய்மையான நகரங்களில் ஒன்றான கால்கரியில் கழிவு மேலாண்மை மறுசுழற்சி திட்டங்கள் மற்றும் பசுமை முயற்சிகள் அதை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றதாக ஆக்குகின்றன.

ஃப்ரீபெர்க் ஜெர்மனி

பசுமை நகர்ப்புற திட்டமிடலில் முன்னணியில் இருக்கும் ஃப்ரீபெர்க் அதன் நிலையான போக்குவரத்து அமைப்புகள், பசுமையான இடங்கள் மற்றும் சுத்தமான காற்றுக்கு பெயர் பெற்ற ஊர் ஆகும்.

More News

    Read more about: world trip
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+