Search
  • Follow NativePlanet
Share
» »வாரத்திற்கு 4 நாள் தான் வேலை...மற்ற நாட்களில் சுற்றுலா...இப்படிப்பட்ட நாடுகள் எங்கிருக்கிறது தெரியுமா?

வாரத்திற்கு 4 நாள் தான் வேலை...மற்ற நாட்களில் சுற்றுலா...இப்படிப்பட்ட நாடுகள் எங்கிருக்கிறது தெரியுமா?

வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் தான் வேலை...மற்ற நாட்களில் ஜாலியா ஊர் சுற்றலாம்...அதுவும் சம்பளத்துடன் ஊர் சுற்ற நிறுவனங்களே தொழிலாளர்களுக்கு அனுமதி அளிக்கின்றன. என்னங்க நம்ப முடியவில்லை? இப்படிப்பட்ட நாடுகளும் உள்ளன. வாரத்திற்கு குறைந்த அளவு வேலை நேரம் கொண்ட 10 நாடுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Spain

ஸ்பெயின்

2023ம் ஆண்டு சோதனை முறையில் தொடர்ந்து நான்கு திங்கள்கிழமைகளுக்கு விடுமுறை அளித்து, ஒரு பரிசோதனை ஸ்பெயினில் செய்யப்பட்டது. அதில் பெரும் வெற்றியும் கிடைத்தது. சுற்றுலா மேம்பட்டது. நிறுவனங்களின் இந்த முயற்சியால் சக்ரதா பேமிலியா மற்றும் ஆலம்பரா ஆகிய இடங்களில் கூட்டம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து

2022ம் ஆண்டு முதல் இங்கு சோதனை முறையில் வாரத்திற்கு 4 நாள் வேலைத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்போது இந்தத் திட்டத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல நிறுவனங்களும் இதை நிரந்தரமாக்கி விட்டன. உலக அளவில் அதிக அளவிலான நிறுவனங்களில் நான்கு நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்திய முதல் நாடு இங்கிலாந்து தான். இந்த வேலைத் திட்டத்தால் மன அழுத்தம் குறைந்து ஊழியர்கள் சிறப்பான வேலைத் திறனைக் காட்ட முடிந்ததாக நிறுவனங்கள் கூறுகின்றன. மேலும் ஊழியர்கள் இங்கிலாந்தில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்க்கவும் கூடுதல் நேரம் கிடைத்ததால் சுற்றுலாத் துறையும் கூட வளர்ச்சி அடைந்தது.

நெதர்லாந்து

உலகிலேயே மிகவும் குறைந்த வேலை நேரம் கொண்ட நாடு என்ற பெயர் நெதர்லாந்து என்ற ஹாலந்துக்கு உண்டு. அதாவது இங்கு வாரத்திற்கு 29 மணி நேரம் தான் வேலை நாளாகும். வேலையும், வாழ்க்கையும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் நாடு நெதர்லாந்து. இதனால் ஊழியர்கள் எந்த ஸ்டிரஸ்ஸும் இல்லாமல் ஜாலியாக ஆம்ஸ்டர்டாம் நகரின் சாலைகளில் சைக்கிள் சவாரி செய்யவும், ஜாலியான முறையில் பொழுதைக் கழிக்கவும் வழி வகை கிடைத்துள்ளதாக மகிழ்கிறார்கள்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

2022ம் ஆண்டு வாரத்திற்கு நான்கு நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்தியது ஷார்ஜா. இதுகுறித்து நாடு முழுவதும் விவாதங்கள் கிளம்பின. ஆனால் இத்திட்டம் நன்றாக இருப்பதாக ரிசல்ட் கிடைத்ததும் பலரும் இதை பின்பற்றி வருகின்றனர். வார இறுதி நாட்களில் துபாய், அபுதாபிக்கு செல்ல நிறைய அவகாசம் கிடைத்துள்ளதாக உள்ளூர் மக்களும் சரி, வெளிநாட்டுத் தொழிலாளர்களும் சரி இரு தரப்புமே ஹேப்பி தான்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கடந்த 2022ம் ஆண்டு சோதனை முயற்சியாக 26 நிறுவனங்கள் வாரம் நான்கு நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்தின. இது பலன் கொடுத்தது. ஊழியர்களால் அதிக நேரம் ஓய்வெடுக்க முடிந்தது. கிரீன் ஓசன் சாலையில் லாங் ரோடு டிரிப், கிரேட் பேரியர் ரீப் பகுதிக்கு சுற்றுலா செல்லுதல் என பொழுதைக் கழிக்க அவர்களுக்கு சவுகரியமாக இருந்தது.

டென்மார்க்

அதிகாரப்பூர்வமாக டென்மார்க்கில் நான்கு நாள் வேலைத் திட்டம் இல்லை. அதே சமயம், வாரத்திற்கு 37 மணி நேர வேலைத் திட்டத்தை டென்மார்க் பின்பற்றுகிறது. இதன் மூலம் அதிக அளவிலான ஓய்வு நேரம் கிடைக்கிறது. மேலும் வேலையையும், வீட்டையும் சரி வர கவனிக்கவும் முடிவதாக ஊழியர்கள் உணர்கிறார்கள். இதனால் அதிக அளவில் சுற்றுலா செல்லவும் ஊழியர்களுக்கு வழி கிடைக்கிறதாம்.

ஐஸ்லாந்து

ஐஸ்லாந்து 2015 முதல் 2019 வரை சோதனை ரீதியாக இந்தத் திட்டத்தை அமல்படுத்தியது. இதன் மூலம் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் நான்கு நாள் வேலைத் திட்டத்திற்கு மாறினர். இதனால் அவர்கள் பல வழிகளிலும் ரிலாஸ்க்டாக மாற முடிந்தது. சுற்றுலா செல்வது, பொழுது போக்குகளில் ஈடுபடுவது போன்றவற்றில் அதிகமாக ஈடுபட அவர்களுக்கு நேரம் கிடைத்தது.

ஜெர்மனி

ஜெர்மனியில் 2023 முதல் 24 வரை நடந்த சோதனை அமலாக்கத்தின் போது 73 சதவீத நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை அமல்படுத்தின. இதன் மூலம் பணியாளர்களின் வேலைத் திறனும் அதிகரித்தது. உள்ளூர் சுற்றுலாவும் அதிக அளவில் முன்னேற்றம் கண்டது.

Belgium

பெல்ஜியம்

பெல்ஜியத்தில் வாரத்திற்கு 40 மணி நேரம் வரை ஊழியர்களால் பணியாற்ற முடியும். வேலைக்குப் பிறகு அவர்கள் எந்த வேலை டென்ஷனும் இல்லாமல் ஓய்வெடுக்கவும் உரிமை உண்டு. மேலும் சவுகரியமாக வேலை பார்க்கும் வகையில் பல்வேறு வகையான ஷிப்ட்டுகளையும் கூட அவர்கள் பின்பற்றிக் கொள்ள முடியும். இதன் மூலம் ஊழியர்களின் மன அழுத்தம் குறைந்து வேலைத் திறனும் அதிகரித்ததாம்.

ஜப்பான்

ஜப்பானில் இந்த வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து நான்கு நாள் வேலை திட்டம் அமலுக்கு வரப் போகிறது. அரசு ஊழியர்களிடையே இது அமல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் அதிக அளவிலான வேலைப்பளுவைக் குறைப்பது, குடும்பத்தினருடன் இருக்கும் நேரத்தை அதிகரிப்பதே அரசின் நோக்கமாகும். மேலும் வார இறுதி நாட்களில் எந்த டென்ஷனும் இல்லாமல் ஜாலியாக பல்வேறு இடங்களுக்குச் செல்லவும் இது உதவும் என்று அரசு நம்புகிறது.

More News

    Read more about: uae
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+