அதிகமான மலைகளைக் கொண்ட நாடுகள் உலகின் பல பகுதிகளில் உள்ளன. ஆனால் அவற்றில் சில நாடுகளில் மட்டும் தான் மிக அதிகமான உயரம் கொண்ட மலைகள் உள்ளன. இவற்றில் சில மலைகள் உலகில் யாராலும் ஏற முடியாததாக உள்ளன. அப்படி உலகின் மிக உயரமான மலைகளை கொண்ட டாப் 10 மலை நாடுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பூடான்
பூடான் ஒரு சிறிய, ஆனால் அதீத இயற்கை அழகை கொண்டுள்ள இமயமலையில் அமைந்துள்ள நாடாகும். இது உலகின் மிக உயரமான நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. பூடானில் ஏராளமான உயரமான மலைகள் உள்ளன. இங்குள்ள கங்கர் புயென்சம், 7,570 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலை உலகில் யாரும் ஏற முடியாத மிக உயரமான சிகரமாகும்.
இத்தாலி
இத்தாலி, அதன் வரலாறு, கலாச்சாரம், மற்றும் உணவுகள் மட்டுமல்லாது, அதன் அழகிய மலைப்பகுதிகளாலும் பிரபலமான நாடாகும். இது அழகான மற்றும் புகழ்பெற்ற மலைத்தொடர்களைக் கொண்டுள்ளது.இத்தாலியில் முக்கியமான இரண்டு பெரிய மலைத்தொடர்களான ஆல்ப்ஸ் மற்றும் அபென்னைன் அமைந்துள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ள,டோலமைட் மலைகள், இயற்கை அழகு மற்றும் சவாலான பனிச்சறுக்களுக்கு பிரபலமானவை.
நேபாளம்
நேபாளம், உலகின் மிக உயரமான நாடுகளில் ஒன்றாகும்.இது ஏராளமான உயரமான மலைகளுக்குப் பெயர் பெற்றத. குறிப்பாக எவரெஸ்ட் மலை, உலகின் மிக உயரமான சிகரமாக விளங்குகிறது. உலகின் 14 உயரமான சிகரங்களில், எட்டு சிகரங்களை கொண்டுள்ள நேபாள் மலையேற்றம் செய்பவர்களுக்கு ஒரு சொர்க்கமாகும்.

சுவிட்சர்லாந்து :
சுவிட்சர்லாந்து அதன் பனிமலைகள், கண்கவர் இயற்கை, மற்றும் உலகப் புகழ்பெற்ற ஆல்ப்ஸ் மலைத்தொடர் காரணமாக, உலகின் மிக அழகான நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.உலகின் மிகவும் புகழ்பெற்ற மலைகளில் ஒன்றான மேட்டர்ஹார்ன் முப்பரிமான பானை வடிவம் கொண்டது. மிகவும் சவாலான மலை ஏறுபவர்களின் கனவு இலக்காக உள்ளது.
தஜிகிஸ்தான்
தஜிகிஸ்தான் மத்திய ஆசியாவில் அமைந்துள்ள ஒரு உயரமான மலை நாடாகும். இதன் 93% பகுதி மலைகளால் சூழப்பட்டுள்ளது, அதனாலேயே இது "மலைகளின் நாடு" என அழைக்கப்படுகிறது.இந்த நாட்டில் உள்ள பல உயரமான சிகரங்கள், இயற்கை அழகு, மற்றும் பாமீர் மலைத்தொடரின் காரணமாக, இது உலகின் மிக உயரமான நாடுகளில் ஒன்றாக உள்ளது.
கிர்கிஸ்தான்
கிர்கிஸ்தான் மத்திய ஆசியாவில் அமைந்துள்ள ஒரு மலை நாடாகும். இதன் பொதுவான நிலப்பரப்பில் 80% மலைகளால் சூழப்பட்டுள்ளது. தியான் ஷான் மற்றும் பாமீர் மலைத்தொடர்கள் கிர்கிஸ்தானின் இயற்கை அழகின் மையமாக உள்ளன.இது மத்திய ஆசியாவின் சுவிட்சர்லாந்து என்றும் அழைக்கப்படுகிறது.
சிலி
தென் அமெரிக்காவின் மிக நீளமான நாடுகளில் ஒன்றான சிலி, இயற்கையின் வியப்பூட்டும் மலைகள், தீவுகள், மற்றும் பாலைவனங்களால் பிரபலமாக உள்ளது.இது அந்தீஸ் மலைத்தொடரை ஒட்டியிருக்கின்றது.உலகின் மிக உயரமான செயலில் உள்ள எரிமலையான (Active Volcano),ஒஜோஸ் டெல் சலாடோ கொண்டுள்ளது. இந்த எரிமலை சிலி-அர்ஜென்டினா எல்லையில் அமைந்துள்ளது.
பெரு
பெரு, தென் அமெரிக்காவில் உள்ள ஒரு மலைநாடாகும். இது அந்தீஸ் மலைத்தொடரை (Andes Mountains) அடிப்படையாக கொண்டுள்ள நாடாகும்.இது வரலாற்றுச் சிறப்பு மிக்க மச்சு பிச்சு (Machu Picchu) மற்றும் இன்கா நாகரிகத்தின் அடையாளமாக விளங்குகிறது.

சீனா
சீனா உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகவும், மிக உயரமான மலைகளைக் கொண்ட நாடாகவும் விளங்குகிறது. இங்கு அமைந்துள்ள திபெத் பீடபூமி "உலகின் கூரை" என அழைக்கப்படும் உலகின் மிக உயரமான பீடபூமியாகும். உலகின் மிக உயரமான சிகரமான மவுண்ட் எவரெஸ்ட் சீனாவின் வடக்கு எல்லையில் அமைந்துள்ளது.
ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் மத்திய ஆசியாவில் அமைந்துள்ள ஒரு மலைநாடு ஆகும். இதன் 75% பகுதி மலைகளால் சூழப்பட்டுள்ளது நோஷாக் ஆப்கானிஸ்தானின் மிக உயரமான மலையாகும்.இது 7,492 மீட்டர் நீளம் கொண்டது.மேலும் இங்குள்ள இந்துக் குஷ் மலைத்தொடர் ஆப்கானிஸ்தானின் முக்கியமான மற்றும் மிகவும் கடினமான நிலப்பரப்பாகும்.



Click it and Unblock the Notifications



