
கம்போடியாவின் மூங்கில் ரயில்
கம்போடியா நாட்டில் மிகவும் பிரபலமானது இந்த மூங்கில் ரயில். இதில் ஏறி பயணிக்கும் போது அது கொடுக்கும் அனுபவம் அலாதியானது. திறந்தவெளி மூங்கில் ரயில் இது. மிகவும் பழமையான ரயில் பாதை இது. கிராமப்புறங்கள் வழியாக இது செல்லும்போது மனதை கொள்ளை கொள்ளும் அனுபவத்தை பெறுவது நிச்சயம். மிகவும் எளிமையான வேடிக்கை நிறைந்த திரில்லான இந்த பயணம் உங்களை மட்டும் இல்லாமல் உங்கள் குழந்தைகளையும் குதூகலிக்க வைக்கும்.
மாத்தேரான் பொம்மை ரயில்
இந்தியாவில் உள்ள மாத்தேரான் பொம்மை ரயில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடுகிறது. மாத்தேரான் பொம்மை ரயில் மிக மிக அற்புதமான அனுபவத்தை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும். மாத்தேரான் மலைப்பகுதியில் இந்த ரயில் இயங்குகிறது. குறுகலான ரயில் பாதை, அருமையான இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதி, பள்ளத்தாக்குகள் என்று இந்த ரயில் செல்லும் பாதை நெடுகிலும் அனுபவத்திற்கும் குதூகலத்திற்கும் பஞ்சமே இருக்காது. குழந்தைகளுக்கான பயணத்திற்கு இது மிகவும் உகந்தது.

அர்ஜென்டினாவின் மேகக் கூட்ட ரயில்
அர்ஜென்டினாவில் உள்ள உயரமான இந்த மலைப்பாதை ரயில் பயணம் குழந்தைகளுக்கு மிகவும் உற்சாகத்தை கொடுக்கக் கூடியது. தரையில் இருந்து கிட்டத்தட்ட 4000 மீட்டர் உயரத்தில் இந்த ரயில் பாதை உள்ளது. மிகச் சிறந்த பொறியியல் அற்புதமாக இது பார்க்கப்படுகிறது. இந்த ரயில் பாதையானது வளைந்து நெளிந்து செல்கிறது. மிக உயர்ந்த மலைப்பகுதியில், சுரங்கங்கள் வழியாக இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையில் செல்லும்போது மேகக் கூட்டத்திற்கு ஊடாக செல்வது போன்ற அனுபவம் இருப்பதால் இதற்கு மேகத்திற்குள் செல்லும் ரயில் என்றும் செல்லப் பெயர் உண்டு.
கிளேசியர் எக்ஸ்பிரஸ்
ஸ்விட்சர்லாந்தில் உள்ள கிளேசியர் எக்ஸ்பிரஸ் ரயில் மிக மிக அற்புதமான அனுபவத்தை உங்களது குழந்தைகளுக்கு கொடுக்கும். உயர்ந்த பனிச் சிகரங்கள், பசும்புல் வெளிகள், அழகான கிராமங்கள் வழியாக இந்த கிளேசியர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாகவும் கண்ணுக்கு விருந்தாகவும் அமையும். இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகள் வழியாக இந்த ரயில் செல்வது குழந்தைகளை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும். ஒரு ரயில் பயணம் என்பது அனுபவத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். அந்த வகையில், இந்த ரயில் மாயாஜால அனுபவத்தை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
டெத் ரயில்வே
தாய்லாந்து நாட்டில் உள்ள டெத் ரயில்வே மிகப் பிரபலமானது. இதற்கு காரணம் இந்த ரயில் பாதை அடர்ந்த வனப்பகுதிகள் வழியாகவும், உயர்ந்த மலை சிகரங்கள் வழியாகவும் செல்கிறது. குழந்தைகளுக்கு மிக மிக திரில்லான ஒரு பயணத்தையும் அனுபவத்தையும் இந்த ரயில் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பெயர் தான் டெத் ரயில் என்றாலும் கூட இது கொடுக்கும் அனுபவம் சிறப்பானது என்பதால் தைரியமாகவே செல்லலாம்.
பாம்பன் ரயில்
தமிழ்நாட்டின் பாம்பன் ரயில் பாலத்தில் சென்ற அனுபவம் எத்தனை பேருக்கு இருக்கும். இது ஒரு அற்புதமான ரயில் பாலம் ஆகும். பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் தீவை இணைக்கக் கூடிய கடல் ரயில் பாலம் தான் இது. கடல் பாலத்தின் மீது ரயில் செல்லும் போது பார்க்கவே சூப்பராக இருக்கும். குழந்தைகளை குதூகலிக்க வைக்க கூடிய இந்த ரயில் பாதையானது சாகச உணர்வையும் கொடுக்கும். அற்புதமான ஒரு ரயில் பயண உணர்வையும் கொடுக்கும். தற்போது இங்கு பழைய ரயில் பாலம் எடுக்கப்பட்டு, புதிய ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் திறக்கப்படவும் உள்ளது.
மேக்கலாங் மார்க்கெட்
தாய்லாந்து நாட்டில் உள்ள மேக்கலாங் மார்க்கெட் ரயில் பாதை மிக அருமையான அனுபவத்தைக் கொடுக்கும். மார்க்கெட் பகுதியில் இந்த ரயில் பாதை செல்கிறது. ஒருபுறம் மார்க்கெட், கடைகள், மறுபக்கம் மக்கள் நடமாட்டம்.. இந்தப் பக்கம் ரயில் பாதை என்று வேடிக்கையான ரயில் பாதை இது. இதில் பயணிப்பதே ஒரு அலாதியான ஒரு இன்ப அனுபவமாக குழந்தைகளுக்கு இருக்கும். மிக மிக சிறந்த ஒரு ரயில் பயண அனுபவத்தை இந்த மேக்கலாங் ரயில் அனுபவம் கொடுக்கும். மிக மிக நீண்ட காலமாக இயக்கப்பட்டு வரும் ரயில் இருப்பதால் கலாச்சார ரீதியாகவும் இது முக்கியத்துவம் பெறுகிறது.
கான் ரயில்
ஆஸ்திரேலியாலில் உள்ள கான் ரயில் பாதை மிகப் பிரபலமானது. இந்த ரயில் பாதையானது பாலைவனங்கள், மலைகள், ஆறுகள் வழியாக செல்வதால் இதன் பயணம் மிகச்சிறந்த அனுபவத்தை குழந்தைகளுக்கு கொடுக்கும். நீண்ட தூர ரயிலும் ஆகும். இது ஒரு சாகச உணர்வையும் ஒட்டுமொத்த குழந்தைகளுக்கும் குடும்பத்திற்கும் சேர்த்து கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
டெவில்ஸ் நோஸ் ரயில், ஈகுவடார்
ஈகுவடார் நாட்டில் பிரபலமானது இந்த ரயில் பாதை. பல்வேறு வளைவுகளுடன் கூடிய ரயில் பாதையைக் கொண்டது. மிக உயரமான மலை சிகரங்கள் வழியாகவும் இது செல்கிறது. ஒரு த்ரில்லிங்கான அனுபவத்தை குழந்தைகளுக்கு கொடுக்கும். ஆண்டிஸ் மலை தொடரின் அழகை ரசித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்வதற்கும், சிறந்த அனுபவத்தை பெறுவதற்கும் இது மிகச் சிறந்த ஒரு ரயிலாகும்.
ஸ்னோ காரிடார் ரயில்
ஜப்பான் நாட்டில் உள்ள ஸ்னோ காரிடார் ரயில் ஒரு சிறப்பான அனுபவத்தை தரக்கூடியது. ஜப்பானின் அல்பைன் ரூட் பகுதியில், பனி படர்ந்த சாலைகள், மரங்கள் வழியாக செல்லும் இந்த ரயில் உற்சாக அனுபவத்தையும் ஜில்ஜில் உணர்வையும் கொடுக்கக் கூடியது. ஒரு அற்புதமான ரயில் பயணத்தை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றால் இந்த ரயிலில் பயணம் செய்வது சிறந்தது. குழந்தைகள் ஒருமுறை இதில் பயணித்தால் மீண்டும் இதில் பயணிக்க ஆர்வப்படுவார்கள் என்பது முக்கியமானது.



Click it and Unblock the Notifications



