உலகில் பல நாடுகள் பல்வேறு காரணங்களால் தங்களின் பாஸ்போர்ட்டுகளின் சக்தியில் வேறுபடுகின்றன. பாஸ்போர்ட்டின் சக்தி என்பது அந்த நாட்டின் குடிமக்கள் எவ்வளவு நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது வருகை நேரத்தில் விசா பெறுவதன் (Visa on Arrival) மூலம் பயணம் செய்ய முடியும் என்பதைக் குறிக்கிறது.

பல்வேறு காரணங்களால், சில நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் பலவீனமாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் அவற்றின் பாஸ்போர்ட்டு வைத்திருப்பவர்கள் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளுக்கு மட்டுமே சுலபமாகப் பயணம் செய்ய முடியும். அரசியல் நிலையற்ற தன்மை, பொருளாதார சிக்கல்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் போன்றவை இதற்குக் காரணமாக உள்ளன. 2024 ஆம் ஆண்டின் புள்ளி விபர கணக்கீட்டின் படி, உலகின் மிகப் பலவீனமான 7 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளைப் பற்றி பார்ப்போம்.
1. ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட்டுக்கு உலகின் மிகவும் பலவீனமான பாஸ்போர்ட் என்ற பெயர் உள்ளது. இந்த நாட்டின் குடிமக்கள் வெறும் 27 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் அல்லது வருகைச்சமய விசா மூலம் பயணம் செய்ய முடியும். தாலிபான் ஆட்சி, அரசியல் குழப்பம், பயங்கரவாத அச்சுறுத்தல் ஆகியவை இதற்குக் காரணங்களாக உள்ளன.
2. ஈராக்
ஈராக் பாஸ்போர்ட்டுக்கு 29 நாடுகளுக்கு மட்டுமே விசா சுதந்திரம் உள்ளது. நாட்டின் நீடித்த போரினால் அதன் சர்வதேச உறவுகள் மோசமடைந்து விட்டன. தீவிரவாதம், உள்நாட்டுப் போர், அரசியல் மாறுபாடுகள் போன்றவை இதற்குக் காரணம்.
3. சிரியா
சிரியா ஒரு காலத்தில் மத்திய கிழக்கு பண்பாட்டு வளமான நாடாக இருந்தது. ஆனால், முடிவில்லாத உள்நாட்டுப் போர், அரசியல் குழப்பம் போன்றவை அதன் பாஸ்போர்ட்டின் மதிப்பை குறைத்துள்ளன. தற்போது, இது வெறும் 30 நாடுகளுக்கு மட்டுமே விசா சுதந்திரம் வழங்குகிறது.
4. பாகிஸ்தான்
பாகிஸ்தானின் பாஸ்போர்ட்டும் பலவீனமாகவே உள்ளது. ஏனெனில் இதன் குடிமக்கள் 34 நாடுகளுக்கு மட்டுமே விசா சுதந்திரம் பெற்றிருக்கிறார்கள். பயங்கரவாத இயக்கங்களின் வருகை, அரசியல் குழப்பம், பொருளாதார வீழ்ச்சி போன்றவை இதன் முக்கியக் காரணங்கள்.
5. ஏமன்
அழிவின் விளிம்பில் உள்ள ஏமனுக்கும் பலவீனமான பாஸ்போர்ட்டின் நிலை உள்ளது. 35 நாடுகளுக்கு மட்டுமே இதன் குடிமக்கள் விசா இல்லாமல் செல்ல முடியும். உள்நாட்டுப் போர், வறட்சி, உணவுப் பஞ்சம் போன்றவை நாட்டின் நிலையை மோசமாக்கியுள்ளன.
6. சோமாலியா
சோமாலியா ஒரு காலத்தில் வணிகத்தில் செழித்த நாடாக இருந்தாலும், கடற்புலி பிரச்சினைகள், உள்நாட்டுப் போர், அரசியல் அமைதியின்மை ஆகியவை இதன் பாஸ்போர்ட்டின் மதிப்பைக் குறைத்துள்ளன. தற்போதைய நிலைப்படி, 36 நாடுகளுக்கு மட்டுமே சோமாலிய குடிமக்கள் விசா இல்லாமல் செல்ல முடியும்.
7. நேபாளம்
நேபாளின் பாஸ்போர்ட்டும் பலவீனமாகவே உள்ளது. 38 நாடுகளுக்கு மட்டுமே அதன் குடிமக்கள் விசா இல்லாமல் செல்ல முடிகின்றனர். தொழில் வாய்ப்புகள் குறைவது, அரசியல் அமைதியின்மை, சர்வதேச உறவுகள் குறைவது போன்றவை இதற்குக் காரணம்.
பலவீனமான பாஸ்போர்ட்டுகளுக்கான காரணங்கள்:
* அரசியல் நிலைமை - சில நாடுகளில் நீடித்த அரசியல் மோதல்கள் மற்றும் அமைதியின்மை காரணமாக, பிற நாடுகள் அந்த நாடுகளின் குடிமக்களுக்கு விசா வழங்குவதற்கு தயங்குகின்றன. அல்லது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கின்றன.
* பாதுகாப்பு சிக்கல்கள்- பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் மற்றும் பயங்கரவாத செயல்பாடுகள் காரணமாக, சில நாடுகள் இந்த நாடுகளின் குடிமக்களை வரவேற்க விரும்பாமல் உள்ளன. தங்கள் நாடுகளின் அமைதியை கருத்தில் கொண்டு இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
* தொழில் நுட்ப மற்றும் பொருளாதார காரணங்கள்- சில நாடுகள் பொருளாதார சிக்கல்கள் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக, பிற நாடுகளுடன் வலுவான தூதரக உறவுகளை நிலைநிறுத்த முடியாமல் இருப்பதும், அந்நாட்டு மக்களுக்கு பிற நாடுகள் விசா வழங்க தயக்கம் காட்டுகின்றன.



Click it and Unblock the Notifications



