Search
  • Follow NativePlanet
Share
» »புது தில்லியில் ஷாப்பிங் செய்ய சிறந்த ஐந்து இடங்கள்

புது தில்லியில் ஷாப்பிங் செய்ய சிறந்த ஐந்து இடங்கள்

புது தில்லி, நவீன இந்தியாவின் தலைநகராக விளங்கும் இந்நகரம் நம் பாரத தேசத்தின் கலாசார கேந்திரமாகவும் விளங்குகிறது. பல்வேறு மொழி பேசும் மக்கள், காலாச்சார மாற்றும் பொருளாதார பின்னணியில் இருந்து வரும் மக்கள் வசிக்கும் நகரமான இது உலமயமாக்களுக்கு பிறகு மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்திருந்தாலும் இதன் வரலாற்று பெருமையும் அடையாளங்களும் இன்னும் அப்படியே இருக்கின்றன.

புது தில்லியில் ஷாப்பிங் செய்ய சிறந்த ஐந்து இடங்கள்

இப்படி பழமை மற்றும் நவீனத்தின் ரசனையான கலவையான நகரமான இங்கு நாம் ஷாப்பிங் செய்ய சென்றால் மலைத்து போக செய்யும் அளவிற்கு வகைவகையான பொருட்கள் இங்கே கிடைக்கின்றன. வாருங்கள் தலைநகரில் ஷாப்பிங் செய்ய சிறந்த இடங்களை தெரிந்து கொள்வோம்.

1.டில்லி ஹாத்:

புது தில்லியில் ஷாப்பிங் செய்ய சிறந்த ஐந்து இடங்கள்

Photo: Manuel Menal

வழக்கமான ஷாப்பிங்கை விடுத்து வித்தியாசமாக பொருட்கள் வாங்க வேண்டும் என ஆசைபட்டீர்கள் என்றல் உங்களுக்கு ஏற்ற இடம் இந்த டில்லி ஹாத் தான். முற்றிலும் கைவினைப்பொருட்கள் மட்டுமே கிடைக்கும் இந்த மார்கெட்டில் கையால் நெய்த துணிகள் முதல் தோளினாள் செய்யப்பட்ட கைப்பாவை பொம்மைகள் வரை ஏராளமான மிக வித்தியாசமான பொருட்கள் இங்கே கிடைகின்றன. வெளிநாட்டவர்கள் மத்தியில் மிகப்பிரபலமான இந்த சந்தையில் அவ்வப்போது கலை நிகழ்சிகளும் நடைபெறுகின்றன என்பது கூடுதல் சிறப்பு.

2. கான் மார்கெட்:

புது தில்லியில் ஷாப்பிங் செய்ய சிறந்த ஐந்து இடங்கள்

Photo: RubyGoes

தில்லியில் இருக்கும் மிக பழமையான சந்தைகளில் ஒன்று தான் இந்த கான் மார்கெட். இங்கே வீட்டு அலங்கார பொருட்கள், புத்தகங்கள், காலணிகள் என அனைத்து வகையான பொருட்களையும் இங்கே நாம் வாங்கலாம். மற்ற சந்தைகளை போல பேரம் பேசி பொருட்களை வாங்கும் வாய்ப்பு இங்கு குறைவே. ஏனெனில் இங்கிருக்கும் பெரும்பாலான கடைகளில் மாற்றமில்லாத விலையிலேயே பொருட்கள் விற்கப்படுகின்றன. வேறு பகுதிகளில் கிடைப்பதை காட்டிலும் இங்கே விதவிதமான டிசைன்களில் துணிவகைகள் கிடைப்பதால் இங்கே வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ளனர்.

3. சரோஜினி நகர்:

புது தில்லியில் ஷாப்பிங் செய்ய சிறந்த ஐந்து இடங்கள்

Photo: Priyadarshi Ranjan

இந்த இடத்தில் இருக்கும் மார்கெட்டில் பிராண்டெட் பொருட்களையும் பேரம் பேசி குறைந்த விலைக்கு வாங்க முடியும். அதெப்படி பிராண்டெட் பொருட்களை வாங்க முடியும் என நினைக்கிறீர்களா?. சிற்சில குறைபாடுகளுடன் இருக்கும் துணிவகைகளை கடைகளுக்கு அனுப்பாமல் அவற்றை சரி செய்து இங்கிருக்கும் சந்தையில் விற்பனை செய்கின்றனர். சற்றே தரத்தில் குறை இருந்தாலும் சகாய விலைக்கு அவற்றை தாரளமாக வாங்கலாம். பெண்களுக்கு தேவையான அலங்கார பொருட்கள், காலணிகள் போன்றவற்றை வாங்க சிறந்த இடம் இந்த சரோஜினி நகர் மார்கெட்.

4. லஜ்பத் நகர்:

புது தில்லியில் ஷாப்பிங் செய்ய சிறந்த ஐந்து இடங்கள்

Photo: Michael Cannon

இந்தியாவில் இருக்கும் மிகப்பழமையான சந்தை பகுதிகளில் இந்த லஜ்பத் நகரும் ஒன்று. வட இந்தியாவின் பாரம்பரிய உடைகளான குர்தா மற்றும் சேலைகள் வாங்க ஏற்ற இடமான இந்த லஜ்பத் நகர் சந்தை திங்கள் கிழமை செயல்படுவதில்லை. ஒரு சுற்றுலாப் பயணியாக இங்கே சென்றால் இங்கு கிடைக்கும் சுவையான உணவுகளை ருசிபார்க்கலாம், கைகளில் மெஹந்தி போட்டுக்கொள்ளலாம், இங்கு கிடைக்கும் தனித்துவமான எம்பிராயிடரி துணிகளை வாங்கி மகிழலாம்.


5. ஜன்பத்:

புது தில்லியில் ஷாப்பிங் செய்ய சிறந்த ஐந்து இடங்கள்

Photo: Will

இளைஞர்களுக்கு ஷாப்பிங் செய்ய ஏற்ற இடம் டில்லியின் முக்கிய பகுதியான ஜன்பத் மற்றும் அதற்கு பக்கத்தில் இருக்கும் திபெத் மார்கெட்க்கும் ஏற்ற இடங்களாகும். இளைஞர்களுக்கு ஏற்ற துணிவகைகள், காலணிகள் இங்கே அதிகம் கிடைகின்றன. இங்கே பொருட்கள் வாங்கும் பொது கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் பிராண்டெட் பொருட்கள் என்று சொல்லி போலியான பொருட்களை விற்கும் வாய்ப்பு இங்கு அதிகம். இந்திய கைவினைப்பொருட்கள் விற்பனை கழகத்தால் நடத்தப்படும் அங்காடியும் உண்டு.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+