Search
  • Follow NativePlanet
Share
» »தல அஜித் செய்யும் பிரியாணி இதில் எந்த வகை தெரியுமா?

தல அஜித் செய்யும் பிரியாணி இதில் எந்த வகை தெரியுமா?

சுற்றுலாத் தளங்களில் கிடைக்கும் அரிய வகை பிரியாணிக்காக ஒரு சுற்றுலா செல்வோம் வாங்க

By Udhaya

பிரியாணி... பெயரைக் கேட்டாலே உள்ளுக்குள் பசியைத் தூண்டும் மந்திரச் சொல். பிரியாணி பிடிக்காது என்று சொல்பவர்களை நாம் காண்பது அரிது. இளைஞர்களுக்கு பிரியாணி என்ற சொல் ஆடம்பரமாக இருந்தாலும், தற்போது பலர் பிரியாணியை விரும்பியுண்ணுவதால், அதன் விலையும் அதற்கு ஏற்றாற்போல மாறுபடுகிறது.

தல அஜித் படப்பிடிப்பு தளத்தில் பிரியாணி சமைத்து பரிமாறினார் என்ற செய்தி அடிக்கடி கோலிவுட் வட்டாரத்தில் அனல் பறக்கும். தற்போது அவர் பெயரிலேயே தல பிரியாணி என்று செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

சில பிரியாணி வகைகள் மிகவும் விலை அதிகமாக இருக்கும், அவற்றின் செய்முறை மற்றும் இடுபொருள்களைப் பொறுத்து அதன் விலை மாறுபடுகிறது. சில பிரியாணி வகைகளை நாம் வீட்டிலேயே செய்து உண்டு மகிழலாம். சிலவற்றை முடியாது ஏனெனில் அதன் முழுச் சுவையை வீட்டில் தர இயலாது. சரி பிரியாணி கிடைக்கும் இடங்களுக்கு ஒரு சுற்றுலா சென்று வரலாம். பிரியாணியை அதற்கு பெயர் பெற்ற ஊர் மட்டுமில்லாது எங்கேயிருந்தும் செய்து அல்லது கடைகளில் ஆர்டர் செய்து சாப்பிடலாம். ஆனால் பிரியாணியின் உண்மையான இடங்களுக்கு சென்று சாப்பிடுவது என்பது அலாதி பிரியம்தானே.. குறைந்தபட்சம் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்போது இதை மறக்காமல் உண்டு மகிழுங்கள். இந்தியாவின் டாப் பிரியாணிகளை வழங்கும் டாப் இந்திய நகரங்கள் எவை தெரியுமா?

தம் பிரியாணி

தம் பிரியாணி

ஹைதராபாத் பிரியாணி என்ற பிரியாணி வகை பாசுமதி அரிசி மற்றும் செம்மறி ஆட்டுக் கறி ஆகியவை கொண்டு சமைக்கப்படுகிறது. தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் ஹைதராபாத் மாநகரம் நிஜாம்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த போது அவர்களது அரண்மனை சமையல் நிபுணர்களால் தயாரிக்கப்பட்டது.

சுவை மிகுந்த இந்த பிரியாணியை சுவைக்க வேண்டுமானால் நீங்கள் ஹைதராபாத் பயணிக்கவேண்டும். ஹைதராபாத் பிரியாணி என்ற பெயரில் பல இடங்களில் விற்கப்பட்டாலும், ஹைதராபாத் சென்று சாப்பிடுவதுதான் உண்மையான பிரியாணி ஆகும்.

PC: Srikar Kashyap

லக்னோ

லக்னோ

நீங்கள் லக்னோவுக்கு சுற்றுலா சென்றால், அங்குள்ள அனைத்து இடங்களையும் காணத் தவறாதீர்கள். முக்கியமாக அவாதி பிரியாணியை சுவைக்க மறந்துவிடாதீர்கள்.

லக்னோவில் செய்யப்படும் ஒரு வகை பிரியாணிக்கு அவாதி பிரியாணி என்று பெயர். உத்திரப்பிரதேச மாநில மக்கள் அதிகளவில் உண்ணும் பிரியாணி வகை அவாதி பிரியாணி என்று அழைக்கப்படுகிறது.

PC: Shantanukr73

கொல்கத்தா

கொல்கத்தா


இந்தியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் கொல்கத்தா. இதன் இயற்கை அழகு உங்கள் கண்களை கட்டிப்போட்டு, மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறாதபடி வைத்துவிடும். இங்கு புகழ்பெற்ற ஒரு உணவு என்றால் அது கொல்கத்தா பிரியாணி ஆகும்.

லக்னோ ஸ்டைலில் சுவையை கொஞ்சம் மாற்றி சமைக்கப்படும் பிரியாணி கொல்கத்தா அல்லது கல்கத்தா பிரியாணி என்று அழைக்கப்படுகிறது. உங்களுக்கு கொல்கத்தா செல்லும் வாய்ப்பு கிடைத்தால், மறவாமல் உண்டு மகிழுங்கள்.

PC: nikkul

கேரளா

கேரளா

கடவுள் தன் படைப்பின் மொத்த அழகையும் கேரளாவில் வைத்துவிட்டார் என்பார்கள் கவிஞர்கள். அந்த அளவு அழகு வளம் கொட்டிக்கிடக்கும் கேரளா நம் அண்டை மாநிலம் என்பதால் நம்மில் பலருக்கு அங்கு செல்லும் வாய்ப்பு கிட்டும்.

கேரளா செல்லும் வாய்ப்பு கிடைத்தால் அங்கு கிடைக்கும் தலசேரி பிரியாணியை கட்டாயம் சுவைத்து விட்டு வாருங்கள். உணவுக்கு பெயர் போன மலபார், உங்களைத் திரும்ப திரும்ப சுவைக்கத் தூண்டும்.

கேரளாவில் சுற்றுலாவுக்கென கடற்கரைகள், தென்னை மரங்கள் நிறைந்த ரெஸ்டாரண்ட்கள், விடுதிகள் என பரவலாக இந்த பிரியாணி வகைகள் வழங்கப்படுகின்றன.

PC: Ajaykuyiloor

அசாம்

அசாம்

அசாம் பகுதியில் சுற்றுலா செல்பவர்களுக்கு அப்பகுதியில் கிடைக்கும் இந்த அரிய வகை பிரியாணிதான் காம்பூர் பிரியாணி. இந்த பிரியாணிக்கான பெயர் காரணம் தெரியவில்லை. எனினும் காம்பூர் என்ற பகுதியிலிருந்து வந்த ஒருவர் செய்து கொடுத்த பிரியாணி வகை என்று பரவலாக பேசுகின்றனர்.

PC: Diganta Talukdar

மங்களூர்

மங்களூர்

கர்நாடகத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் இயற்கை எழில் வாய்ந்த மங்களூர் நகரமானது, கரு நீலத்தில் காட்சியளிக்கும் அரபிக்கடலுக்கும், உயர்ந்து ஓங்கி நிற்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடருக்கும் இடையே அமைந்திருக்கிறது.

இந்த மங்களூர் நகரம், பல காலமாக ஓய்வில்லாத ஒரு துறைமுக நகரமாகவே விளங்கி வந்திருக்கிறது. இந்நகருக்கு சிறப்பு சேர்க்கும் பல விசயங்கள் இருந்தாலும், மிக முக்கிய சிறப்பு மங்களூர் ஸ்பெஷல் பிரியாணி. சாப்பாடை வெறுப்பவர்கள் கூட வேண்டும் வேண்டும் என்று வாங்கி சாப்பிடும் அளவுக்கு சுவையான பிரியாணி இதுவாகும்.

PC: Codepanda

கர்நாடகா

கர்நாடகா

பத்கல் பிரியாணி என்று அழைக்கப்படும் ஒரு பிரியாணி வகை இங்குள்ள பல்வேறு சுற்றுலாத் தளங்களிலும் வழங்கப்படுகிறுது.

கோகர்னா, கார்வார், மங்களூர் என மாநிலம் முழுவதும் சுற்றுலாத் தளங்களைக் கொண்டுள்ள கர்நாடகம் பத்கல் பிரியாணி எனும் சுவை மிகுந்த பிரியாணியை சுற்றுலாப் பயணிகள் சுவைக்க வழங்குகிறது.

நீங்கள் கர்நாடகத்திற்கு பயணப்பட்டால் பத்கல் பிரியாணி மற்றும் மங்களூர் ஸ்பெஷல் பிரியாணியை சுவைக்க மறக்காதீர்கள்.

PC: Dineshkannambadi

ஆம்பூர்

ஆம்பூர்

தமிழ்நாட்டின் ஆம்பூர் பகுதியில் பின்பற்றப்படும் செய்முறை ஆம்பூர் பிரியாணி எனப் பெயர் பெற்றுள்ளது. பெரும்பாலும் அசைவ பிரியாணி வகைகளாக இருந்தாலும் தாவர உணவுவகையிலும் தயாரிக்கப்படுகிறது.இவ்வகை பிரியாணி தமிழ்நாட்டிலும் ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரைப் பிரதேசங்களிலும் கர்நாடகாவிலும் விரும்பப் படுகிறது. சென்னையின் விரைவு உணவகங்களில் பரிமாறப்படுகிறது.

PC: Sayowais

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாத்தில் வழங்கப்படும் மற்றொரு வகை பிரியாணி தூத் கி பிரியாணி என்றழைக்கப்படுகிறது.

PC: Srikar Kashyap

 கோழிக்கோடு

கோழிக்கோடு

கேரளமாநிலத்தில் கிடைக்கும் ஒரு வகை பிரியாணிக்கு கோழிக்கோடு ஸ்பெஷல் பிரியாணி என்று பெயர். கோழிக்கோட்டில் உருவாக்கப்பட்ட பிரியாணியின் செய்முறைகளைப் பின்பற்றி செய்வதால் இந்த பெயர் பெற்றதாக தெரிகிறது.

PC: Bidhunkrishna

திண்டுக்கல்

திண்டுக்கல்

மதுரை, ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வருபவர்கள் அதிகம் பேர் விரும்பி சுவைப்பது தலப்பாக் கட்டி பிரியாணி. திண்டுக்கல்லில் தோன்றிய இந்த பிரியாணி செய்முறை நாளடைவில் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் பரவியது.

PC: Ssriram mt

காஷ்மீர்

காஷ்மீர்

காஷ்மீரி முட்டஞ்சன் பிரியாணி

PC: KennyOMG

More News

Read more about: travel பயணம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+