
கோவா என்றாலே கடற்கரைகளும் பீச்சுகளும் தான் ஞாபகத்துக்கு வரும். நண்பர்களுடன் சென்று கோவாவின் கடற்கரைகளில் அரபிக்கடலை ரசித்தவாறு வலம் வரலாம். பார்டிகளில் பங்கு கொண்டு இஷ்டம் போல நடனமாடலாம். கடலில் ஸ்கூட்டர் ஓட்டலாம்.

இப்படி அன்றாட வாழ்வின் வழக்கங்களை விடுத்து மனதுக்கு பிடித்த மாதிரி சில நாட்களை கொண்டாடலாம். அப்படி கொண்டாட கோவாவில் ஏராளமான கடற்கரைகள் இருந்தாலும் அவற்றில் சுற்றுலாப் பயணிகளிடையே தனியொரு இடத்தை பிடித்திருக்கும் ஒரு கடற்கரை வகடோர் பீச் ஆகும்.
பர்டேஸ் தாலுக்காவில் அமைந்திருக்கும் இந்த கடற்கரைக்கு இருக்கும் ஒரு சிறப்பு என்னவென்றால் இந்த கடற்கரையை ஒட்டியே மலை முகடு ஒன்றும் இருக்கிறது. இதுபோன்ற அமைப்புடைய கடற்கரைகள் இந்தியாவில் வெகு சிலவே இருக்கின்றன.

இந்த வகடோர் கடற்கரை இரண்டு பிரிவுகளாக இருக்கிறது. வடக்கு புறமாக இருப்பது 'பிக் வகடோர் பீச்' துணிக்கடைகள், ஹோட்டல்கள் நிறைந்த வர்த்தக தளமாகவும் இந்த பிக் வகடோர் பீச் விளங்குகிறது. இதை தவிர இருக்கும் மற்றொரு பீச்சான லிட்டில் வகடோர் பீச் அமைதி விரும்பிகளுக்கும், ஹிப்பிக்களுக்கும் ஏற்ற இடமாக இருக்கிறது.

இங்கு வருபவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டவர்களாகவே இருக்கின்றனர். ஆனால் சமீப காலமாக இந்த கடற்கரையில் இருந்து காணக்கிடைக்கும் அற்புதமான சூரிய அஸ்தமனத்தை காண இந்திய சுற்றுலாப்பயணிகளும் வருகின்றனர்.

டிஸ்கோ கொண்டாட்டங்களுக்கும் இந்த கடற்கரையில் குறையில்லை. லிட்டில் வகடோரில் இருக்கும் 9 பார், ஹில் டாப், ப்ரிம் ரோஸ் பேக் மற்றும் டிஸ்கோ வேலி போன்ற கிளப்புகள் இரவு பார்டிகளுக்கு பேர் போனவையாகும். உலகின் புகழ் பெற்ற டிஜெக்கள் பலரும் இந்த கிளப்புகளுக்கு சுற்றுலா சீசன் காலத்தில் வந்து இசை மலை பொழிகின்றனர்.
இந்த கடற்கரைக்கு அருகிலேயே அஞ்சுனா பீச், மபோசா போன்ற சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. வகடோர் பீசை எப்படி அடைவது என்பது பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள். வகடோரில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications




