Search
  • Follow NativePlanet
Share
» »வெளியூரில் ஓட்டலில் தங்க போறீங்களா? அவசியம் இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க

வெளியூரில் ஓட்டலில் தங்க போறீங்களா? அவசியம் இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க

நீங்கள் ஒரு அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவராக இருந்தாலும் சரி, முதல் முறையாக ஓட்டலில் தங்குபவர்களாக இருந்தாலும் சரி உங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள சில முக்கியமான விஷயங்களை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் ஓட்டல் அறையில் தங்குவதற்கு முன் செய்ய வேண்டிய சில முக்கியமான ஐந்து விஷயங்கள் பற்றி நாங்கள் சொல்கிறோம். மறக்காம குறிச்சுவச்சுக்கோங்க.

Hotel

ஹோட்டலில் நேரடியாக முன்பதிவு செய்யலாம்

தேர்ட் பார்ட்டி புக்கிங் சைட்ஸ் பல இருந்தாலும் ஹோட்டலின் வலைதளம் மூலமாக நேரடியாக முன்பதிவு செய்வது இன்னும் சிறந்த சலுகைகளை பெற உதவியாக இருக்கும். ஹோட்டல்களில் அடிக்கடி வரும் விளம்பரங்கள், இலவச காலை உணவு, லாயல்டி பாய்ண்ட்ஸ் அறை மேம்படுத்தல்கள் அல்லது தாமதமான செக்-அவுட்கள் போன்ற சலுகைகளை நேரடியாக முன்பதிவு செய்பவர்களுக்கு பல ஹோட்டல்கள் வழங்குகின்றன. கூடுதலாக நேரடியாக புக்கிங் செய்வது நமது சிறப்பு கோரிக்கைகளையும், விருப்பங்களையும் மிகவும் எளிதாக்குகின்றன.

யுனிவர்சல் பவர் அடாப்டரை எடுத்துச் செல்லவும்

பல இடங்களில் பயணம் செய்யும்பொழுது வெவ்வேறு மின் நிலையங்கள் மற்றும் பிளக்குகளைக் கையாள்வது சிரமமானதாக இருக்கும். இதனால் மல்டி பவர் அடாப்டர்களை நீங்கள் எடுத்துச் செல்வதால் அனைத்து இடங்களிலும் பொருத்தமான அடாப்டர்களை தேடும் சிரமங்கள் இன்றி இருக்கலாம். இந்த எளிமையான கருவி, நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் சாதனங்களை தங்கு தடை இன்றி சார்ஜ் செய்ய உதவும்.

Hotel

அறை சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

அறை சேவை என்பது வெறும் உணவு அருந்துவதற்கு மட்டுமல்ல, பல ஓட்டல்கள் சலவை சேவைகள், இஸ்திரி சேவைகள், பேக்கிங் சேவைகள் போன்ற கூடுதல் சேவைகளை வழங்குகின்றன. குறிப்பாக உங்கள் நேரம் குறைவாக இருந்தால் அல்லது உங்கள் அறையில் நீங்கள் ஓய்வெடுக்க விரும்பினால் இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அறை விபரங்கள்

பெரும்பாலான ஓட்டல்கள் வாடிக்கையாளர்களிடம் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்கின்றன. குறிப்பாக சுற்றுலா பயணிகள் அதிகம் இல்லாத சமயங்களில் அவர்களிடம் அறைகள் இருந்தால் அந்த அறைகளின் விபரங்களை பற்றி தயக்கம் இல்லாமல் விசாரிக்கலாம். ஒருவேளை நீங்கள் அங்கு அடிக்கடி செல்ல வேண்டி இருந்தால் இது போன்ற அப்டேட்கள் உங்களுக்கு உதவி கரமாக இருக்கும்.

ஓட்டல் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் :

பல்வேறு ஓட்டல்கள் தங்குதலை மேம்படுத்தக்கூடிய பல்வேறு வசதிகளை வழங்குகின்றன. உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள், ஸ்பாக்கள் மற்றும் வணிக மையங்கள் என பல வசதிகள் உள்ளன. இந்த வசதி தளர்வை பயன்படுத்தி பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக தொடர்பு கூட ஏற்படுத்த முடியும். உங்கள் பயணத்தை மிகவும் சுவாரஸ்யமாக்க இது போன்ற விஷயங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

More News

    Read more about: hotels
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+