Search
  • Follow NativePlanet
Share
» »2025 இல் இத்தனை சூரிய மற்றும் சந்திர கிரகணங்களா – இந்தியாவில் இருந்து பார்க்க முடியுமா?

2025 இல் இத்தனை சூரிய மற்றும் சந்திர கிரகணங்களா – இந்தியாவில் இருந்து பார்க்க முடியுமா?

நமக்கு சிறு வயதில் இருந்தே தெரிந்த ஒரு வானவியல் நிகழ்வு என்றால் அது சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் தான். பூமி மற்றும் சூரியனுக்கும் இடையில் நிலவு வந்து முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைப்பது சூரிய கிரகணம் ஆகும். பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நேரடியாகச் செல்லும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் மொத்தமாக 4 சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் எத்தனை சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை இந்தியாவில் இருந்து பார்க்க முடியும் என்று இங்கே பார்ப்போம்!

2025 இல் அரிய வானியல் நிகழ்வுகள்

2025 ஆம் ஆண்டு வானியல் ஆர்வலர்களுக்கு குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கும், பல அரிய வான நிகழ்வுகள் இடம்பெறும். மொத்தமாக அடுத்த ஆண்டில் 4 முறை சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழவுள்ளன. அதுமட்டுமல்ல, விண்கற்கள் பொழிவுகள், கோள்களின் சீரமைப்புகள் மற்றும் எதிர்ப்பின் போது வியாழன் மற்றும் சனி போன்ற கிரகங்களை அவற்றின் பிரகாசமாக பார்க்கும் வாய்ப்புகளை நட்சத்திர பார்வையாளர்கள் எதிர்நோக்க முடியும், இது 2025 ஆம் ஆண்டை வானத்தை பார்ப்பதற்கு ஒரு அசாதாரண ஆண்டாக மாற்றுகிறது.

Eclipse

2 சூரிய மற்றும் 2 சந்திர கிரகணங்கள்

அடுத்தாண்டு 2025 இல் சூரிய கிரகணம் 2 முறை நிகழ உள்ளது. மார்ச் 29 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 21 ஆம் தேதி சூரிய கிரகணம் வர உள்ளது. இரண்டும் பகுதி சூரிய கிரகணம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டைப் போலவே, 2025 ஆம் ஆண்டிலும் இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் நிகழவுள்ளன. இதனுடன், அடுத்த ஆண்டு அனைவரும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் full blood moon நிகழ்வு நடைபெற உள்ளது.

முதல் சந்திர கிரகணம் - மார்ச் 14, 2025

அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் அறிக்கையின்படி, அடுத்து வரும் 2025 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 14 ஆம் தேதி நிகழும். முதல் சந்திர கிரகணம் காலை 10:41 மணிக்கு தொடங்கி மதியம் 02:18 மணிக்கு முடிவடையும். இது முழு சந்திர கிரகணமாக இருக்கும். இது 'இரத்த நிலவு' (full blood moon) என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் அதன் நிறம் மிகவும் பிரகாசமான அடர் சிவப்பு நிறத்தை கொண்டு இருக்கும். சூரியன் பூமியின் நிழலால் முழுமையாக மூடப்பட்டிருக்கும். முதல் சந்திர கிரகணம் ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் தெரியும். முதல் சந்திர கிரகணம் இந்தியாவில் தென்படாது.

Eclipse

முதல் சூரிய கிரகணம் - மார்ச் 29, 2025

மார்ச் 29, 2025 அன்று நிகழும் பகுதி சூரிய கிரகணம், ஐரோப்பாவின் சில பகுதிகள், ஆசியாவின் வடக்குப் பகுதிகள், வடக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவின் பெரும்பகுதி, தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதிகள், அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பகுதி ஆகியவற்றில் தெரியும். அதாவது, பெர்முடா, போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா, மொராக்கோ, ஸ்பெயின், கிரீன்லாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், ஐல் ஆஃப் மேன், யுனைடெட் கிங்டம், ஐஸ்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, பரோயே தீவுகள், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் பகுதி சூரிய கிரகணம் தெரியும். நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் தெரியும். இருப்பினும், இந்தியாவில் இது தெரியாது.

இரண்டாவது சந்திர கிரகணம் - செப்டம்பர் 7, 2025

2025 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 7, அன்று நிகழும். இரவு 9:57 மணிக்கு தொடங்கி அதிகாலை 01:26 மணிக்கு முடிவடையும். இந்த கிரகணம் முழு சந்திர கிரகணமாகவும் இருக்கும். இந்த சந்திர கிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் காணலாம்.

Eclipse

இரண்டாவது சூரிய கிரகணம் - செப்டம்பர் 21, 2025

செப்டம்பரில் நிகழும் சூரிய கிரகணம் ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதிகள், பசிபிக், அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகாவில் தெரியும். துவாலு, டோகெலாவ், வாலிஸ் மற்றும் ஃபுடுனா, சமோவா, அமெரிக்கன் சமோவா, ஜப்பானில் உள்ள பிஜி, டோங்கா, நியு, டஹிடி, பிரெஞ்சு பாலினேசியா, குக் தீவுகள், வனுவாடு, நியூ கலிடோனியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அண்டார்டிகாவில் மக்முர்டோ உள்ளிட்ட சில நாடுகள் மற்றும் பகுதிகளில் இந்த பகுதி சூரிய கிரகணத்தை காண முடியும். முந்தையதைப் போலவே, இதுவும் இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது.

இந்தியாவில் இருந்து எத்தனை கிரகணங்களை பார்க்கலாம்

2025 ஆம் ஆண்டில் நிகழும் 2 சூரிய மற்றும் 2 சந்திர கிரகணங்களில், மார்ச் 29 அன்று நடைபெறும் பகுதி சூரிய கிரகணத்தை மட்டுமே இந்தியாவில் இருந்து நாம் காண முடியும். அதனை தவிர்த்து மேற்கூறிய எந்த சூரிய மற்றும் சந்திர கிரகணமும் இந்தியாவில் இருந்து தெளிவாக தெரியாது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்! அதனால், மார்ச் 29 அன்று நிகழும் சூரிய கிரகணத்தை உங்களுக்கு அருகாமையில் உள்ள கோளரங்கத்தில் இருந்து கண்டுகளிக்க மறக்காதீர்கள்!

More News

Read more about: year ender 2024 travel guide
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+