Search
  • Follow NativePlanet
Share
» »விமானத்தில் உங்கள் குழந்தை எந்த வயது வரை இலவசமாக பயணிக்கலாம் தெரியுமா ?

விமானத்தில் உங்கள் குழந்தை எந்த வயது வரை இலவசமாக பயணிக்கலாம் தெரியுமா ?

இந்தியாவில் குடும்பத்துடன் விமான பயணம் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் குழந்தை எந்த வயது வரை இலவசமாக பறக்க முடியும் என யோசிக்கறீர்களா? பெரும்பாலான பெற்றோர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இந்த கேள்வி கண்டிப்பாக பெரும்பாலானவர்களுக்கு எழுகிறது. ஒரு குழந்தைக்கு எப்போது கட்டணம் செலுத்தி டிக்கெட் எடுக்க வேண்டும் என்பதை பற்றி வாங்க தெரிந்து கொள்ளலாம்.

KIds and flighe

விமானத்தில் குழந்தைகள் பயணிப்பதற்கான விதிகள் :

2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விமானத்தில் மடியில் பயணம் செய்யலாம். ஆனால் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டும். Air India போன்ற விமான நிறுவனங்கள் குழந்தைகளுக்கு கட்டணத்தில் தள்ளுபடி வழங்குகின்றன. IndiGo போன்ற குறைந்த கட்டண விமான நிறுவனங்கள் உள்நாட்டு பயணங்களுக்கு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கின்றன. விமானத்தில் குழந்தைகளுடன் பயணம் செய்வது தொடர்பான முக்கிய தகவல்களை இதோ உங்களுக்காக...

2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் "lap infants" என்று அழைக்கப்படுகிறார்கள். அதாவது மடியில் வைத்து பயணம் செய்யும் குழந்தைகள். அவர்கள் விமானத்தில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் மடியில் தான் உட்கார வேண்டும். Air India விமானத்தில், குழந்தைகளுக்கு அடிப்படை கட்டணத்தில் தள்ளுபடி உண்டு. எகானமி வகுப்பில் 10% தள்ளுபடியும், பிசினஸ் மற்றும் முதல் வகுப்பில் 25% தள்ளுபடியும் கிடைக்கும். குழந்தைகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் அடிப்படை கட்டணத்தில் தள்ளுபடி பெற தகுதியுடையவர்கள். எகானமிக்கு 10% மற்றும் பிசினஸ் மற்றும் முதல் வகுப்புகளுக்கு முறையே 25% தள்ளுபடி கிடைக்கும் என்று Air India இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

கட்டண விபரம் :

IndiGo போன்ற சில குறைந்த கட்டண விமான நிறுவனங்கள் தூரத்தைப் பொருட்படுத்தாமல் ஒரு நிலையான கட்டணத்தை வசூலிக்கின்றன. உதாரணமாக, IndiGo உள்நாட்டு பயணங்களுக்கு INR 1750 கட்டணமாக வசூலிக்கிறது. சர்வதேச பயணங்களுக்கு, கட்டணம் தூரத்தைப் பொறுத்து மாறுபடும். IndiGo இணையதளத்தின்படி, இந்தியாவுக்கும் கொழும்புக்கும் இடையிலான பயணத்திற்கு INR 3500 கட்டணமாகவும், பாங்காக்கிற்கான விமானத்திற்கு INR 4000 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் :

குழந்தைகள் எப்போதும் ஒரு பெரியவருடன் தான் பயணிக்க வேண்டும். குழந்தைகளுக்காக தனியாக இருக்கை முன்பதிவு செய்ய முடியாது. உங்கள் குழந்தையின் வயதை நிரூபிக்க சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஏனென்றால் அது பாதுகாப்பு காரணங்களுக்காக அவசியம். குழந்தைகளுக்கு தேவையான அடையாள ஆவணங்கள்: பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிக்கை, தடுப்பூசி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட். சர்வதேச பயணங்களுக்கு பாஸ்போர்ட் கட்டாயம். உங்களிடம் குழந்தையின் வயதுக்கான சரியான ஆதாரம் இல்லையென்றால், முழு கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் விமானத்தில் 'infant' இருக்கைகள் இருந்தால் மட்டுமே டிக்கெட் கிடைக்கும். ஏனென்றால் ஒவ்வொரு விமானத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இந்திய விமான போக்குவரத்து விதிகள் சொல்வது என்ன?

உங்கள் குழந்தை 2 வயதை எட்டியதும், இந்திய விமானப் போக்குவரத்து விதிகளின்படி, கட்டாயம் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டும். அவர்களை குழந்தை பயணிகள் என்று கருதி, பெரியவர்களுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்படும். சில நேரங்களில் தள்ளுபடி விலையில் டிக்கெட் கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தை 24 மாதங்களை தாண்டினாலும், மடியில் வைத்து பயணிக்க விமான நிறுவனங்கள் அனுமதிக்காது. எனவே முழு டிக்கெட் எடுக்க வேண்டும்.

இந்தியாவில், ஸ்ட்ரோலர்களை (strollers) விமானத்தில் எடுத்துச் செல்வது விமான நிறுவனங்களின் கொள்கைகளைப் பொறுத்து மாறுபடும். சில விமான நிறுவனங்கள் ஸ்ட்ரோலர்களை செக்-இன் செய்யப்பட்ட baggage ஆக எடுத்துச் செல்ல அனுமதிக்கின்றன. மற்றவை அளவு மற்றும் எடை கொள்கைகளுக்குள் பொருந்தினால், cabin-க்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கின்றன. IndiGo மற்றும் Air India ஆகியவை ஒரு stroller அல்லது baby pram அல்லது கார் இருக்கையை எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்கின்றன.

ஆகவே, உங்கள் குழந்தை விமானத்தில் பயணம் செய்யும்போது, இந்த தகவல்களை மனதில் வைத்து திட்டமிடுங்கள். இது உங்கள் பயணத்தை எளிதாக்கும். அடையாள ஆவணங்களை சரியாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் விமான பயணத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. விமான நிறுவனங்களின் விதிமுறைகளை தெரிந்து கொண்டு பயணத்தை திட்டமிடுவது நல்லது.

More News

    Read more about: hills
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+