Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் பிரபலமான இந்த 12 ரயில் நிலையங்களுக்கு சென்றால் அவசியம் ருசிக்க வேண்டிய செம உணவுகள்

இந்தியாவில் பிரபலமான இந்த 12 ரயில் நிலையங்களுக்கு சென்றால் அவசியம் ருசிக்க வேண்டிய செம உணவுகள்

இந்தியாவில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் பொது போக்குவரத்து ரயில்வே துறை ஆகும். ரயிலில் பயணிக்கும் பயணிகளை கவருவதற்காக பல ரயில் நிலையங்களில் வித்தியாசமான பல உணவுகளை இந்திய ரயில்வே துறை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் பிரபலமான 12 ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பிரபலமான உள்ளூர் உணவுகளை பற்றியும் இங்கு பார்க்கலாம். இந்த 12 ரயில் நிலையங்களுக்கும் செல்ல வேண்டிய வந்தால் மறக்காமல் இந்த உணவுகளை ருசிக்க மறந்துடாதீங்க.

Indian Railways

சிக்கன் கட்லெட் கோல்கத்தா

ஹவுரா ரயில் நிலையத்தில் பச்சை மற்றும் கருப்பு நிற சட்னியுடன் பரிமாறப்படும் சுவையான சிக்கன் கட்லெட்டுகள் மிகவும் பிரபலமானவை. கோல்கத்தா நகரில் உள்ள மக்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாக இது உள்ளது.

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன்

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் மிகவும் பிரபலமான உணவு, ரவா தோசை. இங்கே பரிமாறப்படும் இரண்டு வகையான சட்னி மற்றும் காய்கறி குருமாவுடன் சாப்பிடுவதற்கு அவ்வளவு நன்றாக இருக்கும்.

ரத்லம்

ரத்லம் ரயில்வே ஸ்டேஷனில் மிகவும் பிரபலமான உணவு மொறுமொறு ஜூசி ஜிலேபியும், போஹாவும். இது இல்லாமல் ரத்லம் பயணம் முழுமை அடையாது.

ஜலந்தர் மற்றும் அமிர்தசரஸ்

ஜலந்தர் மற்றும் அமிர்தசரஸ் ரயில் நிலைய உணவுக்கு குறிப்பாக ஊறுகாய் மற்றும் வினிகர் வெங்காயத்துடன் பரிமாறப்படும் சோலோ பாதுரேவுக்கு மிகவும் பெயர் பெற்றது.

IRCTC food

கர்ஜாத் நிலையம்

மும்பைக்கும் புனேவுக்கும் நடுவில் அமைந்துள்ளது கர்ஜாத் ரயில் நிலையம். அதன் வடபாவ் மற்றும் படாட்டா வடபாவுக்கு பெயர் பெற்றது. மக்கள் பெரும்பாலும் காலை சிற்றுண்டி சாப்பிடுவதற்காக இந்த ரயில்வே நிலையத்திற்கு வருகிறார்கள்.

பாட்னா ரயில் நிலையம்

பீகாரில் உள்ள பாட்னா ரயில் நிலையத்தில் உள்ளேயும், ரயில் நிலையத்தின் வெளியேயும் சமைக்கப்படும் ஒரு பிரபலமான உணவு லிட்டி சோகா . இதன் பல விற்பனையாளர்களை அங்கே காணலாம். அதன் மேல் ஒரு ருசியான நெய் தடவப்பட்டு பரிமாறப்படுகிறது.பயணிகள் அதிகம் விரும்பும் உணவாக இது உள்ளது.

பாலக்காடு ரயில்வே நிலையம்

பாலக்காடு ரயில் நிலையத்தில் பிரபலமான ஒரு உணவு பழம் பொரி. இது க்ரீமி தேங்காய் சட்னியுடன் பரிமாறப்படுகிறது. மக்கள் அதை வடிகட்டி காப்பியுடன் சேர்ந்து சுவைத்து ரசிக்கிறார்கள்.

குஜராத் சுரேந்திர நகர் ரயில்வே நிலையம்

குஜராத்தில் உள்ள சுரேந்திர நகர் ரயில்வே நிலையத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு ஒட்டக பாலை கொண்டு செய்யும் தேநீர். இது பிஸ்கட்டுகளுடன் சிறிய மண் குவளைகளில் விற்கிறாரகள்.

அஜ்மீர் ரயில்வே சந்திப்பு

அஜ்மீர் சந்திப்பில் கதி மற்றும் கச்சோரியின் சுவையான கலவை வழங்கப்படுகிறது. இது சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களால் அதிகம் விரும்பி வாங்கப்படும் உணவாக உள்ளது.

அமிர்தசரஸ்

அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் பிரபலமான முக்கிய உணவு லஸ்ஸி க்ரீமியான லஸ்ஸியின் மேல் மலாய் மற்றும் பாதாம் பருப்புகள் சேர்த்து விற்கப்படுகிறது.

பரேலி ரயில்வே நிலையம்

பரேலி ரயில்வே நிலையத்தில் உள்ள பிரபலமான உணவு மூங் தால் பக்கோடா, பக்கோடா பிரியர்களுக்கு சாப்பிட ஒரு சிறந்த இடம் ஆகும். இது ஒரு பச்சை சட்னியுடன் சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது.

கரக்பூர் நிலையம்

கரக்பூர் நிலையத்தில் ஆலு டோமை விற்கிறார்கள். அதில் ஸ்டஃப்டு ஆலு பூரி அல்லது பிளைன் பூரி மற்றும் கூடுதல் மசாலா கிரேவியுடன் கொடுக்கிறார்கள். இது மிகவும் சுவையாகவும் மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் உணவாகவும் உள்ளது.

More News

    Read more about: indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+