Search
  • Follow NativePlanet
Share
» »வெள்ளை நிறத்தில் இலைகள் கொண்ட அரிய செடிகள் ! எங்கே இருக்கு தெரியுமா?

வெள்ளை நிறத்தில் இலைகள் கொண்ட அரிய செடிகள் ! எங்கே இருக்கு தெரியுமா?

வெள்ளை நிறத்தில் இலைகள் கொண்ட அரிய செடிகள் ! எங்கே இருக்கு தெரியுமா?

நாகாலாந்தின் மையத்தில் அமைந்துள்ள ஸுந்ஹிபோடோ', கடல் மட்டத்திற்கு மேலே 1800 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் கிழக்கில் மோகோக்சுங்க்', மாவட்டமும், மேற்கில் ஓக்ஹா' மாவட்டமும் அமையப்பெற்றுள்ளன. ஸுந்ஹிபோடோ என்பது ஸுந்ஹிபோ', மற்றும் டோ' என்கிற இரு வார்த்தைகளின் தொகுப்பாகும்.

ஸுந்ஹிபோ என்பதற்கு பூக்கும் புதர்' என்பது பொருள். இந்த செடி வெள்ளை இலைகளுடன், கடற்பாசி போன்ற காதுகளுடன் சாறு மிகுந்து காணப்படும். அந்த சாறு இனிப்பு சுவையுடன் இருக்கும்.

டோ என்பதற்கு மலையின் மேல்' என்று பொருள். ஸுந்ஹிபோடோ என்பது ஒரு ஸூமி வார்த்தையாகும். மக்கள் மற்றும் கலாச்சாரம் ஸுந்ஹிபோடோ, ஸூமி பழங்குடி மக்களின் இருப்பிடமாக உள்ளது. போர் வீரர்களான ஸூமி பழங்குடியினர், தற்காப்பு கலையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக கருதப்படுகின்றனர்.

வெள்ளை நிறத்தில் இலைகள் கொண்ட அரிய செடிகள் ! எங்கே இருக்கு தெரியுமா?

Abhishekupadhyay609

ஸூமி மக்கள் தங்களுடைய திருவிழாவை, ஆடம்பரமான உடை அணிந்து விரிவான பாடல்கள் மற்றும் நடனங்களை ஆடி பாடி கொண்டாடுவார்கள். அவர்களுடைய சம்பிரதாய போர் ஆடைகளை காண கண் கோடி வேண்டும். ஸூமி மக்களின் மிக முக்கியமான திருவிழாவான டுலுனி', ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் மத்தியில் கொண்டாடப்படுகிறது. ஸூமிக்களின் மற்றொரு முக்கிய திருவிழாவான அஹுந' , அம்மக்களால் ஸுந்ஹிபோடோவில் சிறப்பாக கொண்டாடப்படும்.

லுமாமி கிராமம், ஸுந்ஹிபோடோ மாவட்டத்தின் துணைப்பிரிவான அகுலுடோ'வில் அமைந்துள்ளது. ஸுந்ஹிபோடோ மட்டுமே இந்த மாவட்டத்தில் உள்ள ஒரே நகரமாகும். இந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் கிராமத்தில் வசிக்கின்றனர். எனவே, இம்மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது.

டிஸு, டொயாங்க் மற்றும், ஸுதா போன்ற ஆறுகள் ஸுந்ஹிபோடோவின் வழியே பாய்ந்து செல்கின்றன. மேலும், ஸுந்ஹிபோடோ நாகாலாந்தின் ஆறாவது மிக பெரிய நகராக விளங்குகிறது. மற்றைய ஐந்து நகரங்களாவன: திமாபுர், கோஹிமா, மொகொக்சுங்க், ஒக்ஹா, மற்றும் டுஇன்சாங்க்.

More News

Read more about: north east india
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+