Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வது துலாப்பூர் » வானிலை

வது துலாப்பூர் வானிலை

வது மற்றும் துலாப்பூருக்கு பனிக் காலங்களில் சுற்றுலா வருவது சிறந்த அனுபவமாக இருக்கும்.

கோடைகாலம்

வது மற்றும் துலாப்பூரின் கோடை காலம் மார்ச் முதல் மே மாதம் வரை நீடிக்கும். இந்த காலங்களில் இரு கிராமங்களிலும் குறைந்தபட்சம் 22 டிகிரியும், அதிகபட்சமாக 41 டிகிரியும் வெப்பநிலை நிலவுவதால் பயணிகள் கோடை காலம் வது மற்றும் துலாப்பூருக்கு வருவதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

வது மற்றும் துலாப்பூரின் மழைக் காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பரில் முடிவடையும். இந்த காலங்களில் இரு கிராமங்களிலும் குறைந்த அளவிலான மழையே பதிவாகும். எனவே கோடை காலத்தை ஒப்பிடுகையில் வது மற்றும் துலாப்பூரின் மழைக் காலம் சுற்றிப் பார்க்க உகந்ததே. அதேபோல் முன்பனிக் காலமான அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் வது மற்றும் துலாப்பூருக்கு சுற்றுலா வரலாம்.

குளிர்காலம்

வது மற்றும் துலாப்பூரின் பனிக் காலம் டிசம்பரில் தொடங்கி பிப்ரவரியில் முடிவடையும். இந்த காலங்களில் இரு கிராமங்களிலும் 8 முதல் 25 டிகிரி வரை வெப்பநிலை நிலவும். அதிலும் டிசம்பர் மாதமே பனிக் காலத்தின் குளிர் மிகுந்த மாதமாக அறியப்படுகிறது. வது மற்றும் துலாப்பூருக்கு குளிர் காலத்தில் சுற்றுலா வருவது சிறந்த அனுபவமாக இருக்கும்.