Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» வது துலாப்பூர்

 வது துலாப்பூர் - சரித்திர புகழ்பெற்ற இரட்டை கிராமங்கள்

10

மகாராஷ்டிர மாநிலம் பூனேவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், பிரம்மா, பாமா, இந்திராணி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் அழகே உருவாய் வது மற்றும் துலாப்பூர் கிராமங்கள் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த சின்னஞ்சிறிய கிராமங்களில்தான் சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜி மகாராஜா தன் வாழ்கையின் இறுதி கணங்களை கழித்தார்.

இந்த இரு கிராமங்களில் துலாப்பூர் கிராமம் நாகர்காவ்ன் என்ற பெயரில் முன்பு அழைக்கப்பட்டது. இன்னொரு புறம் வதுவில்தான் சம்பாஜி மகாராஜா மற்றும் அவர் நண்பர் கவி கலாஷ் ஆகியோரின் சமாதிகள் இருக்கின்றன.

வரலாற்று முக்கியத்துவம்

வது மற்றும் துலாப்பூர் ஆகிய இரு கிராமங்களும் வரலாற்றின் அத்தியாயத்தில், மராட்டிய ஆட்சியை பற்றிய பக்கங்களில் முக்கியமான பதிவுகள். மேற்கூறியது போல், இந்த சிறிய கிராமங்களில் வாழ்ந்த சம்பாஜி மகாராஜா துலாப்பூரில் தான் வீர மரணம் அடைந்தார்.

அதேநேரத்தில், அவர் எரியூட்டப்பட்டது வது கிராமத்தில். இதன் காரணாமாக சம்பாஜி மகாராஜாவின் சமாதியும் வதுவிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ரான்ஸ்தம்ப் எனும் பெயரில் போர் நினைவுச் சின்னம் ஒன்றும் இங்கு கட்டப்பட்டுள்ளது. இது 1822-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களுடன் நடந்த இறுதிப் போரில் உயிர் நீத்த மராட்டிய வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ளது.

இரட்டை கிராமங்களில் பார்க்கவேண்டிய இடங்கள்

துலாப்பூரின் புகழுக்கு முக்கிய காரணமாக விளங்கி வருவது சங்கமேஸ்வரர் கோயிலே ஆகும். இக்கோயில் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

இந்த கோயிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

இதை சுற்றியுள்ள பகுதிகளில் தான் சம்பாஜி மகாராஜா, முகாலய மன்னன் ஔரங்கஜிப்பால் கொல்லப்பட்டார். இந்திய வரலாற்றில் முக்கியமான இந்த இரு கிராமங்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.

வது துலாப்பூர் சிறப்பு

வது துலாப்பூர் வானிலை

சிறந்த காலநிலை வது துலாப்பூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது வது துலாப்பூர்

  • சாலை வழியாக
    மகாராஷ்டிராவின் அனைத்து நகரங்களிலிருந்தும் வது மற்றும் துலாப்பூருக்கு எண்ணற்ற அரசு மற்றும் தனியார் சுற்றுலா பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் பூனே பி.எம்.டி பேருந்து நிலையத்திலிருந்தும் ஏராளாமான பேருந்துகள் வது மற்றும் துலாப்பூருக்கு செல்கின்றன. வது மற்றும் துலாப்பூருக்கு பேருந்து மூலம் செல்வது வசதிக் குறைவாக இருக்கலாம், ஆனால் சிக்கனமான போக்குவரத்து இதுதான்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    வது மற்றும் துலாப்பூரை ரயில் மூலம் அடைவதற்கு, அந்த கிராமங்களிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பூனே ரயில் நிலையமே சரியான தேர்வாக இருக்கும். இங்கிருந்து வது மற்றும் துலாப்பூருக்கு பயணிகள் வாடகை கார்கள் மூலம் எளிதில் சென்றடையலாம். இந்த ரயில் நிலையம் மும்பை, நாக்பூர் உள்ளிட்ட மகாராஷ்டிராவின் அனைத்து நகரங்களுடனும் இணைக்கப்பட்டிருக்கிறது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    வது மற்றும் துலாப்பூருக்கு அருகில் இருக்கக் கூடிய விமான நிலையம் மும்பையின் சத்ரபதி பன்னாட்டு விமான நிலையமே ஆகும். இந்த விமான நிலையத்திற்கு வெளிநாடு மற்றும் இந்தியாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. இங்கிருந்து வது மற்றும் துலாப்பூருக்கு பயணிகள் வாடகை கார்கள் மூலம் சுலபமாக சென்றடையலாம். அதேபோல் வது மற்றும் துலாப்பூரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பூனே விமான நிலையத்தையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat