நாசிக் - பாரம்பரியத்தில் ஊறித்திளைக்கும் பழமையும்! நாகரிகத்தின் சாயம் படிந்த புதுமையும்!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்திருக்கும் நாசிக் நகரம் திராட்சை ஒயின் தயாரிப்பின் தலைநகர் என்று அழைக்கப்படும் அளவுக்கு இங்கு விளையும் திராட்சைக்கு பெயர் பெற்றது. மும்பையிலிருந்து 180 கி.மீ தூரத்திலும் புனேயிலிருந்து 200 கி.மீ தூரத்திலிருந்து இது உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் பிரசித்தி பெற்ற நப்பா பள்ளத்தாக்கு இங்குதான் அமைந்துள்ளது.

சத்வாஹன ராஜ வம்சம் நாசிக் நகரை தலைநகராக கொண்டு ஆண்டு வந்திருக்கிறது. 16ம் நூற்றாண்டின் போது இந்த நகரம் முகலாயர்களின் ஆட்சியின் கீழ் வந்து குல்ஷனாபாத் என்ற பெயரைப் பெற்றது.

அதற்குப் பின்னர் இது பேஷ்வாக்களின் கைக்கு மாறி இறுதியில் ஆங்கிலேயர்களின் ஆளுகைக்குக் கீழ் வந்தது. கீர்த்தி பெற்ற சுதந்திர போராட்ட வீரர் வீர சவர்க்கர் போன்றோர் நாசிக் நகரத்திலிருந்து தோன்றியுள்ளனர்.

ராமாயண புராணத்தின்படி ராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் செய்ய நேரிட்டபோது இங்கு நாசிக் அருகில் தபோவனம் எனும் இடத்தில் தங்கியதாக நம்பப்படுகிறது. அப்போது லட்சுமணன் சூர்ப்பநகையின் மூக்கை அறுத்தது இந்த இடத்தில்தான் என்பதால் இந்த இடம் நாசிக் என்றழைக்கப்படுகிறது. நாசிக் என்பது மூக்கு எனும் அர்த்தத்தை குறிக்கக் கூடிய சொல்லாகும்.

காளிதாஸ், வால்மீகி போன்ற ஆதி கவிஞர்கள் இந்த நாசிக் நகரைப்பற்றி தம் படைப்புகளின் குறிப்பிட்டுள்ளனர். கி.மு 150 ல் வாழ்ந்த டாலமி எனும் அறிஞர் தம் குறிப்புகளில் நாசிக் நகரைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இன்று மஹாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் முக்கிய நகரமாக வளர்ந்து வருகிறது. கட்டமைப்பு வசதிகள், கல்வி, தொழிற்சாலைகள் என் பல அம்சங்களிலும் இன்று நாசிக் நகரம் வளர்ச்சியடைந்துள்ளது.

புனிதத் திருத்தலம் மற்றும் இன்னும் அனேகம்!

நாசிக் நகருக்கு வெகு அருகில் இருக்கும் திரிகம்பேஸ்வர் கோயில் இங்குள்ள பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். முக்திதம் என்ற மற்றொரு கோயில் அங்குள்ள ஜோதிர்லிங்கங்களுக்காக இந்தியா முழுவதுமே அறியப்பட்ட ஒன்றாகும்.

இங்கு ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதையின் சாரங்கள் சுவற்றில் நுட்பமாக பொறிக்கப்பட்டுள்ளன. கருங்கல்லால் கட்டப்பட்ட கலாராம் கோயில் இங்கு பக்தர்களால் விரும்பப்படும் மற்றொரு கோயிலாகும்.

நாசிக் அருகில் உள்ள பஞ்சவடி எனும் இடத்தில் உள்ள சீதா குபா  ராமாயண காவியத்தின் பல சம்பவங்களுடன் தொடர்புடைய இடமாகும். இது அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று.

மேலும் ஆசியாவிலேயே ஒன்றே ஒன்றுதான் என்ற பெருமை பெற்ற  நாணய அருங்காட்சியகம் ஒன்றும் நாசிக் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. நாணய சேகரிப்பாளர்களும், பண ஆராய்ச்சியாளர்களும் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பல்வகை நாணயங்களை ஆவலுடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

இவற்றில் சில பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. பெருமை வாய்ந்த ராணுவ ஆயுத பயிற்சி மையம் ஒன்றும் நாசிக் நகரில் அமைந்துள்ளது. இதுவும் காண இடங்களில் ஒன்றாகும்.

கும்ப மேளா திருவிழா நாசிக்கின் பிரசித்தி பெற்ற அம்சமாகும். உலகின் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றான இது ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் மூன்று முறை மட்டுமே கொண்டாடப் படுகிறது.

மிகப்பெரும் எண்ணிக்கையில் மக்கள் இந்த திருவிழாவின்போது நாசிக் நகரில் திரள்கின்றனர். அச்சமயம் விதவிதமான பொழுது அம்சங்களும் இங்கு இடம் பெறும்.

தங்கும் வசதிகள் இங்கு எல்லா தரப்பினருக்கும் ஏற்ற வகையில் நிரம்பிக் காணப்படுகின்றன. இலவசமாக தங்கக்கூடிய தர்ம சத்திரத்திலிருந்து மூன்று மற்றும் ஐந்து நட்சத்திர ஓட்டல் வரை இங்கு பயணிகளுக்குக் கிடைக்கின்றன.

நாசிக்கில் தங்கிய அனுபவம் ஒவ்வொரு பயணிக்கும் மறக்கமுடியா அனுபவமாக நினைவில் இடம் பெறக்கூடிய அளவுக்கு நாசிக்கின் அம்சங்கள் இனிமை வாய்ந்தவை ஆகும்.

நாசிக் திராட்சை விளைச்சலுக்கு மிகவும் பெயர் பெற்றதாகும். இங்குள்ள சுலா திராட்சைத் தோட்டத்துக்கு திராட்சை ரசப் பிரியர்கள் சென்று காணலாம். சிவுடா என்றழைக்கப்படும் ருசியான மிக்சர் தின்பண்டம் நாசிக் செல்லும் போது தவறவிடக் கூடாத மற்றும் ஒரு அம்சம்.

இன்ன பிற தகவல்கள்

நாசிக் நகரைப்பற்றி அதிகம் அறியப்படாத மற்றொரு தகவல் ஒன்று இங்கிருந்துதான் தேசத்தந்தை காந்திஜி பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான தனது ஒத்துழையாமை தொடங்கினார் என்பது.

அந்த இயக்கம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து டாக்டர் அம்பேத்கர் அவர்களும் அடித்தட்டு மக்களுக்கான உரிமைகளுக்காக தன் போராட்டங்களை இங்கு மேற்கொண்டார் என்பதும் நாக்பூரின் நகரின் வரலாற்று பின்னணிகளாகும்.

புவியியல் அமைப்பு ரீதியில் பார்த்தால் நாக்பூர் வறண்ட தட்ப வெப்ப கோட்டில் அமைந்துள்ளதால் மிக அதிகபட்சமான வெப்பநிலை இங்கு நிலவுகிறது. ஆகவே கோடைக்காலத்தை தவிர்த்து குளிர்காலம் இங்கு பயணம் செய்வதற்கு ஏற்ற காலம் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. மழைக்காலமும் இங்கு விஜயம் செய்வதற்கு ஏற்ற காலம் என்றாலும் அது குறிப்பாக மழைப்பிரியர்களுக்கு மட்டுமே பொருந்துவதாக இருக்கக்கூடும்.

நாசிக் இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து மிக சுலபமாக இங்கு பயணிக்க முடியும். விமான நிலையம் நகருக்கு அருகாமையிலேயே அமைந்துள்ளது.

நாசிக் நகரம் மும்பை, புனே, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் நகரங்களுடன் வசதியாக ரயில் பாதைகளால் இணைக்கப்பட்டுள்ளது. நாசிக் ரயில் நிலையம் ஒரு முக்கியமான ரயில் சந்திப்பும் கூட.

மாநில அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் சுற்றுலா வாகனங்களும் இங்கு பெரும் அளவில் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு போக்குவரத்தை பொறுத்த வரையில் எந்த சிக்கலும் இல்லாமல் இருப்பதோடு கட்டணங்களும் குறைவாகவே காணப்படுகின்றன.

இந்திய பாரம்பரிய அம்சங்களின் அடிப்படையில் நாசிக் பல வரலாற்று அம்சங்களைக் கொண்ட சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. மிக வேகமாக வளர்ந்து வரும் இந்த நகரம் பாரம்பரிய பழமையையும் நவ நாகரிகத்தையும் ஒரு சேர தன்னுள் பொதித்து காணப்படுகிறது. நாசிக்கை விஜயம் செய்து திரும்பும்போது நம் மனதில் இனிமையான அனுபவ ஞாபகங்களோடு திரும்புவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Please Wait while comments are loading...