Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வாரணாசி » ஈர்க்கும் இடங்கள் » ஹனுமான் படித்துறை

ஹனுமான் படித்துறை, வாரணாசி

60

ஹனுமான் படித்துறை, வாரணாசியில் உள்ள ஜுனா அகாரா என்ற மிகப் பிரபலமான மதக் கிளைப்பிரிவின் அருகில் அமையப்பெற்றுள்ளது. ராமபிரான் தன் நம்பிக்கைக்கு உரிய பக்தரான ஹனுமானை கௌரவிக்கும் பொருட்டு, ஹனுமானுக்காக அவரே இதனைக் கட்டியதால், இது ராமேஷ்வரம் படித்துறை என்று முன்பு அழைக்கப்பட்டு வந்துள்ளது.    

ஹனுமான், உடல் பலத்திற்கான கடவுளாகக் கொண்டாடப்படுகிறார்; அதனால் இப்படித்துறை கட்டுமஸ்தான உடற்கட்டைப் பெற விரும்புவோர் மற்றும் குத்துச் சண்டை வீரர்கள் மிகவும் விரும்பும் ஒரு தலமாக உள்ளது.

தற்செயலாக, அகாரா என்பதுவும், குத்துச்சண்டை வீரர்களும் உடலை வலிமையாக்க விழைவோரும் உடற்பயிற்சி செய்வதற்காகவும், போட்டிகள் நடத்துவதற்காகவும் உபயோகிக்கும் ஒரு அரங்கம் அல்லது சிறப்பு மைதானத்தை, குறிக்கின்றது.     

ஹனுமான் படித்துறை, மிகச் சிறந்த கிருஷ்ண பக்தரான, வைஷ்ணவா பிரிவைச் சேர்ந்த பிரபலத் துறவி வல்லபாச்சார்யாவின் உறைவிடமாகவும் கருதப்படுகிறது.

இப்படித்துறையில் உலகப்புகழ் பெற்ற இதிகாசமான ராமாயணத்தை இயற்றியவரும், துறவறம் மேற்கொண்ட கவிஞருமான துளசிதாஸ் அவர்களால் நிறுவப்பட்ட கோயில் ஒன்றையும் காணலாம்.

இப்படித்துறை, வாரணாசியின் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கராச்சார்ய மடத்தின் பெருமையை உரைப்பதாகவும் உள்ளது. தெய்வீக சேவைகள் வழக்கமாக நிகழ்த்தப்படும் பிரம்மாணடமான ஸ்ரீ காமகோட்டீஸ்வர் மந்திர் என்னும் கோயிலையும் கொண்டுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue