Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வாரணாசி » ஈர்க்கும் இடங்கள் » மணிகர்னிகா படித்துறை

மணிகர்னிகா படித்துறை, வாரணாசி

60

வாரணாசியின் மிகப் பழமையான படித்துறைகளுள் ஒன்றான மணிகர்னிகா படித்துறை, அதனோடு தொடர்புடைய பல்வேறு புராண இலக்கியங்களைக் கொண்டுள்ளது. இவற்றுள் ஒரு புராணம், பின் வரும் கதையை விவரிக்கின்றது.

சிவபெருமான் தன் பக்தர்களைச் சென்று பார்த்து வருவதில் தன் பெரும்பாலான நேரத்தைச் செலவழித்ததனால், அவரது துணைவியான பார்வதி தேவி தன் பொழுதை தனிமையில் கழிக்க நேர்ந்தது.

அதனால் தேவி தன் காதணியான மணிகர்னிகாவை கங்கைக் கரையில் தவற விட்டதாகக் கூறி அதனை சிவபெருமான் கண்டுபிடித்துத் தர வேண்டி நாடகமாடினார். ஆபரணத்தைத் தேடும் சாக்கில் சிவபெருமானை காலம் முழுவதும் தன்னருகிலேயே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர் இவ்வாறு நாடகமாடினார்.

ஒவ்வொரு முறையும் மனிதகுலத்தில் இருந்து ஒரு நபர் இறந்து அவரது இறுதிச்சடங்கு இங்கு நடத்தப்படும்போது, சிவபெருமான் அவரிடம் தொலைந்துபோன மணிகர்னிகாவை எங்கேனும் பார்த்தாரா என்று விசாரிப்பதாக ஐதீகம்.

இங்கு மணிகர்னிகா என்றழைக்கப்படும் ஒரு குளம் உள்ளது. தொலைந்து போன காதணியை தேடும்போது சிவபெருமான் இக்குளத்தைத் தோண்டியதாக நம்பப்படுகிறது.

மணிகர்னிகா படித்துறை தாம் வாரணாசியில் இறப்பு சுற்றுலா என்றழைக்கப்படும் காட்சியை வழங்குகிறது. இங்கு திறந்தவெளியில் சிதை மூட்டப்படுவதைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடுகின்றனர்.

கணேசர் கோயில் மற்றும் மஹா விஷ்ணுவின் பாதச்சுவடுகளைக் கொண்டுள்ள கல்பலகையான சர்ன்படுகா ஆகியவை இதன் அருகில் அமையப்பெற்றுள்ளன. பணம் படைத்தோர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இறந்தபின் இக்கல்பலகையில் வைத்து எரியூட்டப்படுகின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri