Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வாரணாசி » ஈர்க்கும் இடங்கள் » ராம்நகர் அருங்காட்சியகம்

ராம்நகர் அருங்காட்சியகம், வாரணாசி

60

கங்கை நதியின் வலதுபுற கரையில் அமைந்துள்ள ராம்நகர் கோட்டை மற்றும் அருங்காட்சியகம், 17 ஆம் நூற்றாண்டில் அதனைக் கட்டியவரான ராஜா பல்வந்த் சிங்கின் குடியிருப்பு வளாகமாக இருந்துள்ளது.

மஹாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேத வியாஸர், ராம்நகரில் தான் தவம் புரிந்துள்ளார். உண்மையில், இந்நகரம் முதலில் வியாஸ் காஷி என்று அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டிருந்திருக்கிறது. ராம்நகர், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சுமார் 31 நாட்களுக்கு நிகழ்த்தப்படும் ராம்லீலாவிற்கு மிகவும் பெயர் போனதாகும்.

இந்த அருங்காட்சியகம் அழகிய சித்திர வேலைப்பாடு செய்யப்பட்ட உப்பரிகைகள், பிரம்மாண்டமான அரங்கங்கள் மற்றும் திறந்தவெளி முற்றம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இவ்வருங்காட்சியகத்தின் வித்யா மந்திர் பகுதி, இந்த மன்றம் ஆட்சியாளர்களின் காலத்தில் எவ்வாறு இருந்ததோ அதை அவ்வாறே துல்லியமாக பிரதிபலிக்கின்றது.

இந்த அருங்காட்சியகத்தில் ராஜ வம்சத்தோடு தொடர்புடையவையான புராதன கடிகாரங்கள், பழைய கட்டியம், வாள்கள், பழங்கால துப்பாக்கிகள், பழங்கால வாகனங்கள் மற்றும் தந்த வேலைப்பாடுகள் உள்ளிட்ட சுவாரஸ்யமான சேகரிப்புகளைக் காணலாம்.

மேலும் அரச குடும்பங்களுக்குச் சொந்தமான, இடைக்காலத்தைச் சேர்ந்த உடைகள், ஆபரணங்கள் மற்றும் மர சாமான்களையும் இங்கு பார்க்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat