Search
  • Follow NativePlanet
Share

பஸ்தி – ரிஷிகள் வசித்த அமைதிப்பிரதேசம்!

10

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் பஸ்தி நகரம் வரலாற்றுக்காலத்தில் பல்வேறு ராஜவம்சங்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது. எனவே செழுமையான ஒரு கலாச்சார பின்னணியை இந்த நகரம் கொண்டுள்ளது. மூங்கில் காடுகளாகவும் மாந்தோப்புகளாகவும் காணப்பட்ட இப்பிரதேசத்தில் 1865ம் ஆண்டில் இந்த நகரம் உருவானது. இன்றும் பஸ்தி நகரத்தை சுற்றிலும் செழிப்பான தாவர வளம் நிறைந்திருப்பதால்  ஒரு அமைதி நகரமாக இது காட்சியளிக்கிறது.

பஸ்தி மற்றும் அதைச்சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்

சண்டோ தால் எனும் பிரசித்தமான பிக்னிக் ஸ்தலத்தை இந்த பஸ்தி நகரம் கொண்டுள்ளது. இது தவிர பரா எனும் எழிற்கிராமம் ஒன்று இந்த பஸ்திக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. இந்த சிறிய கிராமம் புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இங்கு சிவபெருமானுக்கான ஒரு புராதன கோயிலும் அமைந்துள்ளது. குவானா ஆற்றின் கரையில் அமைந்துள்ள பாடேஷ்வர்நாத் கோயிலும் அதிக அளவில் பயணிகளை ஈர்க்கும் அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.

மேலும், இந்நகரத்தில் உள்ள ராஷ்டிரிய வன் சேத்னா கேந்த்ரா மற்றும் தாவரவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமும் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய ஒன்றாகும்.

நினைவுப்பொருட்களை வாங்கவும் ஷாப்பிங் செய்யவும் இங்குள்ள பக்கே பஜார் ஏற்றதாக உள்ளது. இங்கு உள்ளூர் கைவினைப்பொருட்கள் மற்றும் துணிவகைகள் வாங்கலாம்.

போக்குவரத்து வசதிகள்

விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் ஆகிய மூவழி போக்குவரத்து அம்சங்கள் மூலமும் எளிதாக  இந்த நகரத்தை அடையலாம்.

விஜயம் செய்ய ஏற்ற காலம்

நவம்பர் முதல் மார்ச் வரையிலான பருவம் இங்கு விஜயம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.

பஸ்தி சிறப்பு

பஸ்தி வானிலை

சிறந்த காலநிலை பஸ்தி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பஸ்தி

  • சாலை வழியாக
    பஸ்தி நகரம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களோடு அரசுப்போக்குவரத்துக்கழக பேருந்து சேவைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. லக்னோ, வாரணாசி, சாரநாத் மற்றும் அயோத்யா போன்ற நகரங்களிலிருந்து அதிக பேருந்துச்சேவைகள் இந்த பஸ்தி நகரத்துக்கு உள்ளன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பஸ்தி நகரின் ரயில் நிலையம் மொராதாபாத் ஜங்க்ஷன் என்று அழைக்கப்படுகிறது. டெல்லி, ஜம்மு, மும்பை, மற்றும் ஹௌராவிலிருந்து வரும் ரயில்கள் இந்த நிலையம் வழியாக செல்கின்றன்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    லக்னோ விமான நிலையம் பஸ்திக்குஅருகில் உள்ளது. இங்கிருந்து டாக்சிகள் மூலம் பயணிகள் பஸ்தி நகரத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Jun,Thu
Return On
19 Jun,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Jun,Thu
Check Out
19 Jun,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Jun,Thu
Return On
19 Jun,Fri