Search
  • Follow NativePlanet
Share

மிர்சாபூர் - இந்திய கைவினைக்கலையின் அற்புதம்!

19

உத்திரபிரதேசத்தில் மிர்சாபூர் நகரைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் மாவட்டம் மிர்சாபூர். பல்வேறு மலைத்தொடர்களும், ஆங்கிலேயர் கால வரலாற்றுக் கட்டமைப்புக்களும் மிர்சாபூரின் சிறப்புக்களாகும். 5000-கி.முக்கு முன்னரே மனித நாகரிகம் குறித்த வரலாற்றுத் தகவல்கள் இருந்தாலும், மிர்சாபூரை 1735 ஆண்டு உருவாக்கியது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி தான்.

பேலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் கிடைத்த முலாம் பூசப்பட்ட பாறைகளும், பல்வேறு முக்கிய தொல்பொருட்களும், பழைய கற்காலத்தைச் சேர்ந்தவை என்பதற்கு ஆதாரமாக விளங்குகிறது.

விந்தியத் தொடர்ச்சி மலையில் கிடைத்த கல்வெட்டுக்கள் மூலம் 17000 பிசிஇ க்கு முந்தைய நிலையைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் பலவற்றை இங்கு அறியமுடிகிறது.

ஆகையால், வரலாற்று ஆய்வாளர்களும், அகழ்வாராய்ச்சியாளர்களும் மிர்சாபூரை வலம் வந்து கொண்டே இருப்பர். இது மட்டுமல்லாமல், மிர்சாபூரில் இருக்கும் அழகிய மலைத்தொடர்களை ரசிக்க பல்வேறு சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர்.

மிர்சாபூர், திருவிழாக்காலங்களில் விளக்குகளின் வெளிச்சத்தில் ரம்யமாக காட்சியளிக்கும். தரைவிரிப்புகள் மற்றும் பித்தளைப் பாத்திரத் தொழில்கள் இங்கு பிரசித்திபெற்றவை.

மிர்சாபூரைச் சுற்றி இருக்கும் சுவாரஸ்யமான இடங்கள்!

வரலாற்று சிறப்புகளோடு நின்றுவிடாமல், அழகிய மலைத்தொடர்கள், தண்டா அருவி, சிருசி மற்றும் மேஜா அணைகள் என நம் கண்களுக்கு விருந்து படைக்கும் அழகிய இடங்களைக் கொண்ட இடம் மிர்சாபூர்.

பல்வேறு மலைத்தொடர்களில் பக்கா மற்றும் நர் மலைத்தொடர்கள் மிகவும் பிரபலமானவை.  பல்வேறு கண்காட்சி மற்றும் திருவிழாக்கள் மிர்சாபூரில் நடைபெறுவது உண்டு. 

அதில் முக்கியமானவை, ஒஜ்ஜாலா மேலா, விந்தியவாசினி ஜெயந்தி சமோரா, ஜூலானோட்சவம், லோகந்தி மேலா, கந்தித மேல போன்றவையாகும். மிர்சாபூரில், சூனார் கோட்டை மற்றும் கால பைரவ கோவிலையும் கண்டுகளிக்க முடியும்.

மிர்சாபூர் செல்ல சிறந்த பருவம்?

நவம்பர் முதல் ஏப்ரல் வரை வெப்பம் கொஞ்சம் குறைந்து காணப்படும். இந்த சமயத்தில் மிர்சாபூர் சென்று வருவது நன்றாக இருக்கும்.

மிர்சாபூர் சிறப்பு

மிர்சாபூர் வானிலை

சிறந்த காலநிலை மிர்சாபூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது மிர்சாபூர்

  • சாலை வழியாக
    வாரணாசி, சாரனாத், லக்னோ போன்ற பல்வேறு நகரங்களில் இருந்து பேருந்துகள் குறைந்த இடைவெளிக்கு இயக்கப்பட்டு வருகின்றன. சாலை வழியாக வர விரும்புவோர், இப்பேருந்துகளின் மூலம் மிர்சாபூரை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பாக்மாதி எக்ஸ்ப்ரெஸ், சாம்பல் எக்ஸ்ப்ரெஸ், கொல்கத்த மெயில், கல்கா மெயில், பூரி எக்ஸ்ப்ரெஸ், மாகாத் எக்ஸ்ப்ரெஸ் மற்றும் புருஷோத்தம் எக்ஸ்ப்ரெஸ் போன்ற ரயில்கள் மிர்சாபூர் வழியே செல்கின்றன. இவைகள் மூலம் எளிதில் மிர்சாபூரை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மிர்சாபூரில் இருந்து 60 கிமீ தொலைவில் இருக்கும் வாரணாசியில் விமான நிலையம் உள்ளது. விமானம் மூலமாக வாரணாசி வந்து, பின்னர் கார் அல்லது பேருந்து மூலம் மிர்சாபூரை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue